Friday, July 5, 2013

இது என்ற சொல்

இது என்ற சொல்






இது என்ற சொல் இருக்கிறதே
அது அனேக பொருள்களுடன்
தொடர்புள்ளது

மனிதர்களின் நாவில் மட்டுமல்ல
அவர்களின் வாழ்விலும் அது விளையாடும்

அது உலக மோகத்தில் சிக்கியுள்ளவர்களுக்கும்
உலக மாயையிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும்
பல உண்மைகளை வெளிபடுத்துகிறது.

உதாரணத்திற்கு வாழ்க்கையில்
ஒருவர் தொடர்ந்து துன்பங்களை
அனுபவிக்கும் பொது சொல்லப்படும்
ஆறுதல் வார்த்தைகள்
'இதுவும் கடந்துபோகும்'
இந்த வார்த்தைகள்

அப்போது துன்பப்படுபவர்களுக்கு 'இது"
சற்றே ஆறுதலை தரும் என்பதில் ஐய்யமில்லை

ஆன்மீகத்தை எடுத்துக்கொண்டே
போனாமானால்
எது பிரம்மம் என்ற கேள்விக்கு
ஒவ்வொரு பொருளையும் "இதுவல்ல"" இதுவல்ல  "
என்று ஒதுக்கிக்கொண்டு போனால்
முடிவில் எதுவும் இல்லாத ஒரு பொருள்,
அதே நேரத்தில் எல்லாமாக இருக்கும்
 பொருள் இருப்பது உணரப்படும்.

அதுதான் பிரம்மம் என்று

 இது(இந்த ஆத்மா) உணர்ந்துகொண்டு
அமைதியாகிவிடும்.
அதன் பின் தேடல் நின்றுவிடும்.

ஒருவன் வாழ்வில் இன்பத்தையும்
துன்பத்தையும் மாறி மாறி அனுபவிக்கிறான்.

 அப்போது அவன் மனம் சலித்து போய்
"இது என்னடா வாழ்க்கை"
இது எப்போது முடிவுக்கு வரும்
என்றெல்லாம் சலித்துக் கொள்கிறான்.
அப்போது அனுபவசாலிகள் சொல்கிறார்கள்
."இதுதான் வாழ்க்கை"
"இது எல்லோர் "வாழ்விலும் நிகழ்வதே "

அது சரி "இது "என்றால் 
அதன் பொருள் என்ன?

இ- என்றால் இன்பம்,இயற்கை,இறைவன் 

து -என்றால் துன்பம், துயரம்,துக்கம், துணிவு 

இது அனைவருக்கும் பொருந்தும்.

இதிலிருந்து விடுபட 
அந்த சொல்லிலேயே வழி உள்ளது.

இறை நம்பிக்கை உடையவன்
இறைவனின் தாள்களை பற்றிகொண்டால்
அவற்றிலிருந்து விடுபடலாம்

இறை நம்பிக்கை இல்லாதவன்
துணிவுடன் பிரச்சினைகளை
எதிர்கொள்ள பழகிகொண்டால்
போதும்.

எனவே இதிலிருந்து தப்பிக்க
இராம நாமத்தை உச்சரியுங்கள்.

எத்தனையோ மகான்கள்
நமக்கு அதன் மகிமையை
வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தெரியாத பல வழிகளை நாடுவதை விட
இராம நாம ஜபம் நம்.மை நிச்சயம்
உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும்
நம்பிக்கையோடிருந்தால்.

pic.courtesy-google images 

8 comments:

  1. நேற்றுதான் வலைத்தளத்தில் "ஆத்ம/நிர்வாண சதகம் படித்தேன்.தலை சுற்றியது:"நான் அதுவல்ல..இதுவல்ல...என எல்லாவற்றையும் சொல்லிவிட்டால்,"நான் யார் " கேள்விதான் மிஞ்சியது...ஆனால் ....."இது" விளக்கம் பிரமாதம்...இ=இறைவன்.து=துன்பம்....தப்பு என்னுடையது அல்ல..61-ல் தெரிந்ததை 6-வயதில் என் பெற்றோர் சொல்லி கொடுத்து இருந்தால்...துன்பம் இருந்து இருக்காதே...(நான் என் பெற்றோரை குறை கூறி தப்பிக்க பார்க்கிறேனோ?) இதுதான் லோக மாயை என்பதா?

    ReplyDelete
    Replies
    1. யாரையும் குறை சொல்வதற்கில்லை
      இந்த உலகில்

      பண்டிதனாயினும்
      பாமரனாயினும் குறையுள்ளவர்களே

      குறையில்லாதவன்
      அந்த கோவிந்தன் ஒருவன்தான்.

      ஆறு வயதில் எதை
      சொல்லிக்கொடுக்கவேண்டுமோ
      அதைதான் சொல்லிக்கொடுப்பார்கள்.

      அப்போது அதை கேட்டுக்கொள்ள
      மட்டும்தான் முடியும்

      அறிவும் அனுபவமும்,முயற்சியும்
      இறைஅருளும்
      ஒன்றாக சேரும்போதுதான்
      உண்மைகள் புரியத் தொடங்கும்.

      அதுவரை நாம் நம்முடைய முயற்சிகளை
      விடாமல் தொடர்ந்துகொண்டே
      இருந்தால் போதும்

      எப்படி என்றால் அடுப்பு கரியில்
      தணலை ஊதி ஊதி
      ஆர்வம் என்ற நெருப்பை
      அணையாமல் காப்பாற்றிக் கொண்டே
      வந்தால் போதும்.

      Delete
  2. இ - து : விளக்கம் அருமை... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  3. அரியதை எளிதாகப் புரியும் வண்ணம்
    விளக்கியது மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. இது மிகவும் அருமையான விளக்கமாக உள்ளது. இது ந்ல்லதொரு பதிவு. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete