Wednesday, July 31, 2013

என்றும் மாறாத இன்பம் தருவாய் முருகா !

என்றும் மாறாத 
இன்பம் தருவாய் முருகா !





சிப்பிக்குள்  முத்தை வைத்தாய் முருகா
என் சிந்தைக்குள் மட்டும்  உன்னை
வைக்க மறுப்பதேனோ?

என் கண்கள் உன் திருவடிவைக் கண்டாலும்
என்னுள்ளே இருக்கும் கள்ளப் புலன்கள்
என்  மனதைஉன்னிடமிருந்து
திருடிச் செல்வதை கண்டும்
காணாமலிருப்பதேனோ சொல் முருகா?

என் நாவு உன் நாமத்தை உச்சரிக்கையில்
அதை செய்ய விடாது என்னை நச்சரித்து
உலக மாயையில் வீழ்த்தும் எண்ணங்களை
விரட்டியடிக்காது வேடிக்கை பார்க்கும்
உன் செயல் சரிதானோ முருகா?

இன்பமும் துன்பமும் மீண்டும் மீண்டும்
என்னை தாக்கி நிலை குலைய
வைக்கும்போது நின் நாமம்தான்
கதி என்று நம்பி வந்த என்னை
காப்பாற்றாது புன்முறுவல் பூத்த வண்ணம்
நீ நின்றுகொண்டிருந்தால் நான்
வேறெங்கு செல்வேன் முருகா?

பணிவினால் அனுதினமும் உன்
பாதம் பணிந்து பக்தியினால் மனமுருகி
உன்னை வணங்கி  நின்றாலும்
பதிலேதும் சொல்லாமல் பாராமுகமாய்
நீ நின்றுகொண்டிருந்தால் யாரிடம்
சென்று  நான் முறையிடுவேன்
சொல்   முருகா?

அழகன் என்று பெயர்கொண்டாய்
அசுரர்களை அழித்து அமரர்களை காத்தாய்

குமரன் என்ற நாமம் கொண்டாய்
குன்றுதோறும் கோயில் கொண்டாய்

என்னுள்ளத்திலும் நிலையாய்
இடம் கொள்வாய்

என்றும் மாறாத
இன்பம் தருவாய் முருகா !

3 comments:

  1. அனைத்தும் கேள்விகளுக்கும் (பதில்) அருள் தருவார் வடிவேலன்...

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. //அழகன் என்று பெயர்கொண்டாய்
    அசுரர்களை அழித்து அமரர்களை காத்தாய்

    குமரன் என்ற நாமம் கொண்டாய்
    குன்றுதோறும் கோயில் கொண்டாய்//

    அருமையான பதிவு + விளக்கங்கள். பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. வரைந்துள்ள படமும் அழகு, அந்த முருகனைப்போலவே.

    ReplyDelete