Friday, July 19, 2013

நம்மை காக்கும் தெய்வம் எது?

நம்மை காக்கும் தெய்வம் எது? 





இந்த உலகத்தில் உயிரினினங்களில்
உள்ள கோடிக்கணக்கான பிரிவுகள் ,
வகைகள் உள்ளன

அவைகள் ஒவ்வொன்றிலும்
கணக்கற்ற உயிர்கள் தோன்றி
மறைந்துகொண்டிருகின்றன.

அந்த வகையில் மனிதனும்
ஒரு ஜந்துதான் அதாவது உயிரினம்தான்

ஆனால் மனித இனத்திற்கு மட்டும்தான்
ஜீவன் என்ற நிலையிலிருந்து விடுபட்டு
சிவன் என்ற நிலைக்கு உயர
தேவையான மனமும், அறிவும்
இறைவன் அளித்துள்ளான்

சிவன் என்ற நிலையை அடைவதற்கு
அன்பு அதாவது சிவம் என்ற
பண்பை கைகொண்டு ஒழுகவேண்டும்

அந்த பண்பில்லாமல் செய்யப்படும்,
வழிபாடுகள், பூஜைகள், தானம் ,
தவம் அனைத்தும் விழலுக்கு
இறைத்த நீர் போல் வீணாகிவிடும்.

அதற்கு மனதில் அழுக்காறு
என்னும் பொறாமை ஓட விடக்கூடாது.

பொறுமை ,தியாகம், பக்தி, நம்பிக்கை
என்னும் நல்ல சிந்தனைகள் நிறைந்த
புனித கங்கையாற்றை பாயவிட வேண்டும்

இந்த உலகில் கணக்கற்ற
 தெய்வங்கள் இருக்கின்றன.

அவைகளை உபாசித்து
 என்ன வரங்களை பெற்றாலும்
அவைகள் இந்த உடலில் உயிர்
உள்ள வரைதான் பயன்படும்.
மீண்டும் பிறவி கடலில்தான்
விழவேண்டும்.

நாம் மீண்டும் பிறந்து
பிறப்பிறப்பு சேற்றில் சிக்கி
துன்பப்படாமல்
இருக்க வேண்டுமென்றால்
அந்த வரத்தை தரக்கூடிய
தெய்வத்தை
நாம் உபாசிக்கவேண்டும்.

அந்த தெய்வம் யார் என்பதை
 நமக்கு உணர்த்துகிறார்
அரங்கன் மீது" திருமாலை "என்னும்
45 பாடல்களை பாடி அவனுடன்
அயிக்கியமான தொண்டரடிபொடி ஆழ்வார் .

அந்தபாடல் தொகுப்பில்
உள்ள 9 வது பாடல்.
நம்முடைய உடலில் புலன்கள்
வெளியே செல்லும்  9 வாசல்களையும்
அடைத்து இறைவனின் மீது
நம்மை பக்தி செய்ய வைக்கும்
அற்புத பாடல்.

மற்றுமோர் தெய்வமுண்டே 
மதியிலா மானிடங்காள் 
உற்றபோதன்றி நீங்கள் 
ஒருவனென்று உணரமாட்டீர் 
அற்றமே லொன்றறிய்யீர் 
அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை 
கழலினை பணிமினீ ரே 

3 comments:

  1. /// பொறுமை ,தியாகம், பக்தி, நம்பிக்கை
    என்னும் நல்ல சிந்தனைகள் நிறைந்த
    புனித கங்கையாற்றை பாயவிட வேண்டும்... ///

    அருமை ஐயா... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete