Monday, August 19, 2013

கஜேந்திர மோட்சத்தின் கதை(2)

கஜேந்திர மோட்சத்தின் கதை(2)




இந்திரன் என்றால்
இந்திரிந்தியங்களின் தலைவன்
என்று பொருள்

தேவேந்திரன்
தேவர்களின் தலைவன் என்பதுபோல்.

இந்திரியங்கள் என்றால்
புலன்கள் என்று பொருள்.

புலன்களின் தலைவன்
புத்தி என்னும் அறிவு.

ஒவ்வொரு உயிரும் புலன்களைக் கொண்டே
இந்த உலகோடு தொடர்பு கொள்கின்றன.
செயல்படுகின்றன. வாழ்கின்றன.
முடிவில் மடிகின்றன.

ஓரறிவிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் வரை
புலன்களின் வழியே சென்று
இன்பங்களை அடைகின்றன.
துன்பங்களையும் அனுபவிக்கின்றன.

புலன்களை கட்டுப்பாட்டில் வைக்காதபோது
ஆபத்தில் சிக்கி மடிகின்றன அல்லது
நோய்வாய்பட்டு துன்புறுகின்றன.

மனிதனை ஆட்டி படைக்கும்
குணங்கள் ஆறு.

அவை முறையே காமம்(ஆசைகள்),ஆசை நிறைவேறாதுபோயின்  தோன்றும் குரோதம்(சினம் என்னும் கோபம்) ஆசைப்பட்டதை அடைந்தபின் மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்க தூண்டும் மோகம்(ஈர்ப்பு) ,அனைத்தையும் தன் வசமே வைத்துக்கொள்ளும் எண்ணமாகிய பிறர் அனுபவிக்கமுடியாமல் செய்யும்   குணமாகிய லோபம் (கருமித்தனம்) ) ,மதம் (மற்றவரிடம் இல்லாது தன்னிடம் மட்டும் உள்ளது என்று அகந்தை கொள்ளும் குணம்) மாச்சர்யம் (பொறாமை) ஆகியன

இந்த குணங்களை முறைப்படுத்தாமல்
விட்டுவிட்டால் சுயநலம் என்னும் தீய குணத்திற்கு
ஆட்பட்டு அழிவைத்தான் சந்திக்க நேரிடும்.
எனவே அறிவைக் கொண்டு இவைகளை
கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்.

கஜேந்திர மோட்சம் என்ற கதையில்
வரும் கஜேந்திரன் என்ற யானை
(யானைகளின் கூட்டத்திற்கு தலைவன்)
தன் கூட்டத்தில் உள்ள பெண் யானைகளுடன்
ஒரு நீர்பரப்பில் விளையாடி கொண்டிருந்தபோது
ஒரு முதலை அதன் காலை பற்றிகொண்டது.
உடனே மற்ற யானைகள் எல்லாம்
அதை விட்டு விட்டு கரைக்கு ஓடி வந்து விட்டன.

முதலையிடமிருந்து அந்த யானை
தப்பிக்க போராட தொடங்கியது.
யானைக்கோ நிலத்தில்தான் பலம்  அதிகம்
ஆனால் முதலைக்கோ நீரில் பலம் அதிகம்.

இரண்டும் போராடதொடங்கின.
முதலையோ யானையை கொன்று தின்ன முயன்றது.
யானையோ உயிரை காப்பாற்றிக்கொள்ள முயன்றது.

இன்னும் வரும்

pic.courtesy-google images.

7 comments:

  1. முதலில் இருந்து தெரிந்து கொள்கிறேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. அருமை, இனிமை. பாராட்டுக்கள். இன்னும் வரட்டும்.

    ReplyDelete
  3. படத்தேர்வும் சூப்பர்.

    ReplyDelete
  4. தொடர்கிறேன் ஐயா. படத்தில் தாய்க்கு ஏற்பட்ட ஆபத்தை அறியாமல் குட்டி.

    ReplyDelete
    Replies
    1. நம் நிலையும்
      அப்படித்தான்

      காலன் என்னும் முதலை நம்மை
      நாம் இந்த உலகில் பிறந்தவுடனேயே
      இந்த உடலை பற்றிக்கொண்டு சிறிது சிறிதாக
      விழுங்கிக் கொண்டிருக்கிறது.

      நம் உயிர் அந்த ஆபத்தை
      அறியாது குட்டி யானைபோல்
      அழியும் இந்த உடலை (தாய் யானையை) நம்பி
      நின்றுகொண்டிருக்கிறது.

      தாய் யானையை முதலை
      நிச்சயம் கொன்றுவிடும்.
      காலம் நேரம்தான் வேறுபடும்.

      ஆனால் இவ்வுலகில் பிறந்த
      உயிருக்கு மரணம் உறுதி.
      யாரும் அதை தடுக்க முடியாது.

      இது ஒருவிதமான மாயைதான்.

      மாயையிலிருந்து விடுபட
      அந்தமாயவனின் தாள்களைப் பற்றினால்
      நம்மை பற்றியுள்ள முதலையின்
      பிடியிலிருந்து விடுபடலாம்.
      அதை விளக்கத்தான் இந்த பதிவு.

      Delete
  5. தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

    தங்களின் வரவையும் ஆவலுடன் எதிர்நோக்கி...

    ReplyDelete