Wednesday, August 14, 2013

பணிந்து மகிழ்வோம் பார்வதி புத்திரனை

பணிந்து மகிழ்வோம்
பார்வதி புத்திரனை 







பணிவு கொண்டு
பார்வதி புத்திரன் கணபதியை
வணங்கினால் துணிவு தருவான்

துயர்களை துடைப்பான்,
துவளாத  மனம் தருவான்

துன்பமில்லா வாழ்வு தருவான்.
செல்வம் தருவான்,
செழிப்பை  அருளுவான்

செல்லுமிடமெல்லாம்
துணை வருவான்

அவன் மோனத்தில் அமர்ந்திருக்கும்
நிலை கண்டாலே ஞானம் ஊற்றெடுக்கும்
நம் மனதிலே

அவன் நாமம் சொன்னாலே
சக்தி வெள்ளம் பாய்ந்திடும்
நம் உடல்தன்னிலே

சோர்வை போக்கிடுவான்
சோகத்தை பொசுக்கிடுவான்
எண்ணமெல்லாம் அவன்
 நாமம்நிறைந்துவிட்டால்

மாடக் கோயிலிலும் இருப்பான்
வானமே கூரையாக
மரத்தடியினிலும்  இருப்பான்
அங்கிங்கெனாது எங்கும் இருப்பான்
எதிலும் இருப்பான் .நினைப்போர்
மனதிலும் இருப்பான் அந்த நிர்மலன்

உள்ளம் உருகி பக்தியுடன்
நினைப்போருக்கு நினைத்த
வண்ணம் அருள் செய்வான்

எனினும் அவனை தம் உள்ளத்தே
என்றும் நினைப்போருக்கு
உறங்க செல்லும் முன்பும்
உறங்கி விழிக்கும்போதும்
எப்போதும் உடனிருப்பான்
நீங்காது நிலைத்து
நின்றருள் செய்வான்.

ஒவ்வொரு கணமும் நம்மை காக்கும் 
பார்வதி புத்திரனை பணிந்து மகிழ்வோம்
 . 

5 comments:

  1. வியாழக்கிழமை..காலை நேரத்தில்
    கணபதியை கைதொழுதேன்
    என் இல்லத்திற்கு அவரை
    அனுப்பி வைத்த தங்களுக்கு
    கோடி நமஸ்காரம்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. தில்லை நடராஜனும் வருகின்றான் .மகனை தேடி
      உங்கள் இல்லம் நாடி
      வரவேற்று வணங்கி மகிழுங்க

      Delete
  2. விநாயகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

    ReplyDelete
  3. //ஒவ்வொரு கணமும் நம்மை காக்கும் பார்வதி புத்திரனை பணிந்து மகிழ்வோம்//

    ஆம். நம்மை எப்போதும் காக்கும் தெய்வம், மிகச்சுலபமாக தெருக்கோடியெங்கும் நமக்கு அருள மட்டுமே எழுந்தருளியுள்ள தெய்வம். விநாயகரை வணங்கிடுவோம். வெற்றிகள் பல பெற்றிடுவோம்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமீ..

    ReplyDelete