Tuesday, August 20, 2013

வினைகளும் விளைவுகளும்

வினைகளும் விளைவுகளும்





வினைகளும் அதன் விளைவுகளும்தான்
எல்லா உயிர்களையும் ஆட்டிப் படைக்கின்றன

ஏதாவது உடலெடுத்து இந்த உயிர்
இந்த உலகத்தில் வந்ததிலிருந்து
உயிர் அந்த உடலை விட்டு நீங்கும் வரை
வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்
என்பது. இறைவன் வகுத்த விதி.

அது அக்றிணைப் பொருளானாலும்
அதற்குள் இருக்கும் ஆத்ம சக்தி அதை இயங்க செய்துகொண்டுதான் இருக்கும். அல்லது இயங்காமல்  இருக்க செய்து  கொண்டு  இருக்கும்

அப்படி வினைகளை செய்யும் போது
விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க
முடியாத ஒன்றாகிவிடுகிறது

விளைவுகள் இன்பங்களையும்
துன்பங்களையும் மாறி மாறி ஏற்படுத்துகின்றன.

அதோடு மட்டுமல்லாமல் பிறப்பிறப்பு
 சுழலில் உயிர்களை சிக்க வைத்து விடுகின்றன.

சுழலில் சிக்கிகொண்ட ஜீவன்கள்
காலப்போக்கில் தான்  யார்
என்பதையே மறந்து போகின்றன.

தான் ஆன்மா என்பதையே மறந்து தான்
தங்கியுள்ள உடலே தான் ஆன்மா
என்று அழியும் உடலை நம்பி. ஏமாந்து போகின்றன.

இந்த சுழலிலிருந்து தப்பித்து வெளிவர செய்யும்
முயற்சிகளை ஒரு சில ஜீவன்களே மேற்கொள்ளுகின்றன.

மற்ற கோடிக்கணக்கான ஜீவன்கள்
அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் கண்டதே காட்சி
கொண்டதே கோலம் என்று பல யுகங்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அவ்வபோது இறை  தூதர்களும்,
இறைவனும் இவ்வுலகில் அவதரித்து
ஜீவன்களை கடைதேற்ற முயற்சி செய்தும்
அதை பயன்படுத்திக்கொண்டு விடுதலை
பெறுபவர்கள் மிக சொற்பமே.

இந்த நிலைக்கு முக்கிய காரணம்
இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.

வினைகளின் விளைவுகளை
அனுபவித்து தீர்க்கவேண்டும்.
அது பற்றிய பதிவுகளை மனதிலிருந்து நீக்க வேண்டும்.
மீண்டும் வினைகளை சேர்த்துக்கொள்ளாமல்
இருக்கவேண்டும் என்று பகவான்  ரமணர் கூறுகிறார்.
அவர் காட்டும் வழி பாமரர்களுக்கு இயலாத ஒன்று.

அதனால்தான் பகவான் கண்ணனோ
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
என்னையே நினைத்துக்கொண்டு
என்னை சரணடைவாயாக
நான் உன்னை எல்லா துன்பங்களிலிருந்தும்
விடுவிக்கின்றேன். என்று அறுதியிட்டு கூறுகின்றான்.

தான் என்ற அகந்தையை விட்டுவிட்டு  எளிதான
 இந்த வழியை பின்பற்றி மனிதர்கள்
பிறப்பு இறப்பு சுழலிலிருந்து விடுபட வேண்டும்.
அதற்கு அவன் நாமத்தை விடாமல்
எப்போது உச்சரிப்பதே எளிதான மார்க்கம்.


4 comments:

  1. /// விளைவுகள் இன்பங்களையும்
    துன்பங்களையும் மாறி மாறி ஏற்படுத்துகின்றன..///

    உண்மை தான் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் உங்கள் மனக்குரங்கை
      வைத்துக்கொண்டு அல்லல்படுகிறீர்கள் ?
      அதை சமாளிக்க சுலபமான வழி சொல்கின்றேன்
      கேளுங்கள்.

      உங்கள் மனக்குரங்கை
      இராமனிடம் அனுப்பி வையுங்கள்
      அவன் அதை அரங்கனிடம்
      அனுப்பி வைப்பான்.
      அரங்கன் அவனை
      வனங்கள் சூழ்ந்த
      வேங்கடத்திற்கு
      அனுப்பிவிடுவான்
      அங்கு அது ஆனந்தமாக
      விளையாடிக்கொண்டிருக்கும்

      அதற்க்கு பிறகு அது உங்களை
      ஒன்றும் தொந்தரவு செய்யாது.

      Delete
  2. //சுழலில் சிக்கிகொண்ட ஜீவன்கள்
    காலப்போக்கில் தான் யார்
    என்பதையே மறந்து போகின்றன.

    தான் ஆன்மா என்பதையே மறந்து தான்
    தங்கியுள்ள உடலே தான் ஆன்மா
    என்று அழியும் உடலை நம்பி. ஏமாந்து போகின்றன.//

    ஒண்ணுமே புரியலே உலகத்திலே .........
    என்னவோ நடக்குது ....................................

    அண்ணா சொல்வது, படிக்கும் போது ஏதோ ஓர் தெளிவு ஏற்படுவது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.

    அதன் பிறகு மனம் என்ற குரங்கு இங்குமங்கும் தாவத்தான் செய்கிறது. ;(

    இதற்கும் வினைகளும் விளைவுகளும் தான் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் உங்கள் மனக்குரங்கை
      வைத்துக்கொண்டு அல்லல்படுகிறீர்கள் ?
      அதை சமாளிக்க சுலபமான வழி சொல்கின்றேன்
      கேளுங்கள்.

      உங்கள் மனக்குரங்கை
      இராமனிடம் அனுப்பி வையுங்கள்
      அவன் அதை அரங்கனிடம்
      அனுப்பி வைப்பான்.
      அரங்கன் அவனை
      வனங்கள் சூழ்ந்த
      வேங்கடத்திற்கு
      அனுப்பிவிடுவான்
      அங்கு அது ஆனந்தமாக
      விளையாடிக்கொண்டிருக்கும்

      அதற்க்கு பிறகு அது உங்களை
      ஒன்றும் தொந்தரவு செய்யாது.

      Delete