Sunday, August 18, 2013

கஜேந்திர மோட்சத்தின் கதை

கஜேந்திர மோட்சத்தின் கதை 





கஜேந்திர மோட்சம் கதை
வைணவர்களால் மிகவும்
பிரபலப்படுத்தப்பட்ட கதை,
புராணம்.

எல்லா கோயில்களிலும்
அது தொடர்பான் உற்சவங்களும்
நடித்து காண்பிக்கப்படும்.
திருசெந்தூர் சூர சம்ஹாரம்போல.

அன்று லட்சக்கணக்கான
பக்தர்கள் கூடுவார்கள்.
அடுத்தநாள் அவரவர் வீட்டிற்கு சென்று
அவரவர் வேலைகளை பார்ப்பார்கள்.

இந்த கஜேந்திர மோட்ச கதையில்
அப்படி என்ன இருக்கிறது?

ஒரு முதலையைக்  கொல்ல
அண்ட  சாராசரங்களை படைத்த
(இந்த முதலையும் ஆனையையும்  படைத்த)
நாராயணன்தான்  வரவேண்டுமா
என்று யாரும் கொஞ்சம் கூட
நினைத்துப் பார்ப்பதில்லை.

அதுவும் சக்கராயுதத்தை விட்டுதான்
அதை கொல்லவேண்டுமா ?

முதலையிடம்
சிக்கிகொண்ட யானை
பல ஆயிரம் வருடம் போராடி
எல்லா  தெய்வங்களையும்
கூப்பிட்டதாம் தன்னை
முதலையின் வாயிலிருந்து
காப்பாற்றவேண்டி.

யாரும் வரவில்லையாம்.
ஆதிமூலமே என்றழைத்தவுடன்
ஹரி வந்து முதலையை அழித்து
யானையை காத்தார்  என்று
பல யுகங்களாக
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .

அவரவர் நம்பிக்கையை
நாம் ஏன் கெடுக்கவேண்டும்?

எப்படியாவது கடவுளை
 நம்பி உருப்பட்டால் சரி.

ஒரு கதைக்குப் பின்னால்
ஒரு உண்மை ஒளிந்திருக்கும் .

நம்பிக்கை ஒருபுறம் இருக்க
உண்மையை தெரிந்துகொள்வதில்
தவறில்லையே.

(இன்னும் வரும்)  

pic-courtesy-google images.

4 comments:

  1. அருமையான கதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ஒளிந்திருக்கும் உண்மையை அறிய மேலும் தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. தொடருங்கள்... நல்ல கதை... இன்னும் இதைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்... தொடருங்கள்...

    ReplyDelete
  4. ஒளிந்திருக்கும் உண்மையை அறிய நானும் தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete