Wednesday, July 31, 2013

விருப்பும் வெறுப்பும்

விருப்பும் வெறுப்பும் 

விருப்பும் வெறுப்பும் மனிதர்களுக்கு
தேவைதானா என்று ஒரு கேள்வி உண்டு

விருப்பும் வெறுப்பும் அற்றவன்தான்
இறைவனை அடையமுடியும் என்பது ஒரு கட்சி

ஏனென்றால் இறைவன் விருப்பும் வெறுப்பும் அற்ற
நடுநிலையான பரம்பொருள் அவன்

அதைதான் திருவள்ளுவரும் வேண்டுதல்
வேண்டாமை இலான் அடி செர்ந்தார்ர்க்கு
யாண்டும் இடும்பை இல என்கிறார்.

நமக்கு நாம் துன்பமே இல்லாத வாழ்வை
 நடத்த வேண்டுமென்றால்
இந்த இரண்டையும் கடக்க வேண்டும்

இந்த உலகில் அது சாத்தியமா?
என்பதுதான் கேள்வி

ஆனால் சாத்தியம் என்று ஞானிகள்
 நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்

ஆனால் நம்மை போன்ற
சாதாரண மனிதர்களோ
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ,
அதன் உண்மைத் தன்மையினை
உணருவது கிடையாது.

அதனால்தான் அந்த இரண்டு குணங்களும்
இந்த உலகை ஆட்டிப் படைத்துக்
கொண்டிருக்கின்றன
தீராத பிரச்னைகளையும் போரையும்
துன்பங்களையும்உண்டாக்கி
மனிகுலத்தை அமைதியில்லாத
இனமாக்கிவிட்டன

சாதாரணம் மனிதர்கள் தன்னை
சேர்ந்தவர்களை மட்டும் விரும்புவதும்
என்பதை பாசம் என்றும் மற்றவர்களை
வெறுப்பது வெறுப்பு என்றும் கொள்கிறோம்.

ஆனால் அனைவரையும் விரும்புவது
அன்பு என்றும் சொல்கிறோம்.

பாசம் நம்மை பந்தத்தில் சிக்க வைத்து
துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

பரந்த அன்பு, விரிந்த வானத்தில்
சிறகடித்து பறக்கும் பறவைகள் போல்
இன்பத்தில் ஆழ்த்தும்
அமைதியை தரும்.

உணவில் சேர்த்துக்கொள்ளபடும்  
அளவான  உப்பு  உணவிற்கு
சுவை  கூட்டுவதுபோல்
விருப்பும்  வெறுப்பும்
பிறருக்கு  தீங்கிழைக்கும்
அளவை  தாண்டாது
பார்த்துக்கொண்டால்
வாழ்வு  இன்பம்  தரும்
.
அளவுக்கு  மிஞ்சினால்
அமிர்தமும்  நஞ்சாவதைபோல்  
விருப்பும்  வெறுப்பும்  உரிய  முறையில்
முறைப்படுத்தி  வாழக் கற்றுக்கொண்டால்
நன்மையே  மிகும் . 

2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //உணவில் சேர்த்துக்கொள்ளபடும்
    அளவான உப்பு உணவிற்கு
    சுவை கூட்டுவதுபோல்
    விருப்பும் வெறுப்பும்
    பிறருக்கு தீங்கிழைக்கும்
    அளவை தாண்டாது
    பார்த்துக்கொண்டால்
    வாழ்வு இன்பம் தரும்//

    அழகான உதாரணம். அபுதமான விளக்கங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete