Thursday, January 2, 2014

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(19)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(19)




பாடல்-19

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் 
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி 
கொந்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் 
வைத்துகிடந்த மலர் மார்ர்பா!
வாய் திறவாய் 
மைத்தடங் கண்ணினாய் 
நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ 
ஒட்டாய் காண் 
எத்தனையேலும்பிரிவாற்ற கில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். 

விளக்கம் 

கண்ணா!உன் சயன அறையில் குத்து விளக்குகள் எரிகின்றன 
யானைத் தந்ததால் செய்யப்பட்ட கட்டில்மேல் பஞ்சணை விரிக்கப்பட்டிருக்கிறது கொத்து கொத்தாக 
மலர்ந்த பூக்களை உன் மனைவி நப்பின்னை பிராட்டி சூடியிருக்க அவளது மார்பின் மேல் தலை வைத்துப் படுத்திருக்கிறாய் 
நீயே நாங்கள் வந்ததை கவனியாமல் வாய் திறவாமல் இருந்தால் எப்படி:?
கதவைத் திறக்கச் சொல். மையிட்ட கண்களையுடைய நப்பின்னையே!
நீ உன் கணவனை நீண்ட நேரம் தூங்க அனுமதிக்கலாம் .அவனை விட்டு ஒரு கணம் கூட பிரிய வல்லமை இல்லாதவளாக இருக்கலாம் 
எவ்வளவு நேரமானாலும் அவனை எழுப்பாமல் கூட இருக்கலாம் .ஆனால் எங்களை காக்க வைத்திருப்பது சற்றேனும் நியாயமாகுமா?மனதை தொட்டுச் சொல் பிராட்டியே.





இந்த பாசுரத்தின் மேலோட்டமான விளக்கத்தை
பார்த்தால் ஒரு ஜீவன் காம சுகத்தில் மூழ்கி
இறைவனை மறந்து மயங்கி கிடக்கிறது.





அந்த ஜீவனை அந்த மயக்கதிலிருந்து
விடுபட்டு வெளிவருமாறு
ஆண்டாள் அழைக்கிறாள் .

இந்த ஜீவன் இந்த
 உடலில் குடியிருக்கிறது.

இந்த உடல் எலும்புகளால் பூட்டப்பட்டு
நரம்புகளால் நன்றாக இழுத்து கட்டப்பட்டு ,
மாமிசம், ரத்தம், ,சீழ், நீர், ஆகிய
அசுத்தங்களால் நிரப்பப்பட்டு
தோலினால் மூடப்பட்டு அழகாக
காட்சி அளிக்கிறது.

இதன் உள்ளேதான்
ஒளி மயமான ஆன்மா (குத்து விளக்கு )
எரிந்துகொண்டிருக்கிறது .

இந்த உடலைத்தான் ஆண்டாள்
கோட்டுக்கால் கட்டில் என்கிறாள்.

ஆன்மாவிலிருந்து வெளிப்படும்
ஒளியினால்தான் இந்த ஜீவன்
அனைத்தையும் காண்கிறது.

அனைத்து சுகதுக்கங்களையும்
அனுபவிக்கிறது.

பஞ்ச சயனம் என்பது
ஐம்புலன்களால் பெறப்படும்
இன்பத்தைக் குறிக்கிறது.



எந்த நேரத்திலும் அழிந்து மறையக்கூடிய
இந்த உடல் மூலம் பெறப்படும் நிலையிலாத
சுகங்களின் மீது மோகம் கொண்டு
அலையும் மோகத்தை விட்டு.
என்றும் அழியாதஇன்பத்தை
தரவல்ல கண்ணனின் திருவடிகளை
நாடவேண்டும் என்பது
இந்த பாசுரத்தின்
உட்கருத்தாகும். 

6 comments:

  1. அருமையான பாசுரம்... விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD
      தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      Delete
  2. விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா..

    ReplyDelete
  3. அழகோ அழகான பாசுரம் + விளக்கங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete