Friday, January 3, 2014

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(21)



அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(21)



பாடல்-21

ஏற்ற கலன்கள்  எதிர்பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளற்ப் பெரும்பசுக்கள் 
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்  ஏற்றமுடையாய் 
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே 
துயிலெழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்க்கண் 
ஆற்றாது வந்துன் அடிபணியுமாப்போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்  


விளக்கம் 

பாத்திரங்களில் பொங்கி வழியும்படி இடைவிடாமல் பால் சொரியும் 
பசுக்களுக்கு சொந்தக்காரனான நந்தகோபனின் மைந்தனே 
கண்ணனே எழுவாயாக 
அடியாரைக் காப்பதில் அக்கறை கொண்டவனே 
வேதங்களாலும் அறியமுடியாதபெரியவனே 
இவ்வுலகில் அவதரித்த ஒளி  பொருந்திய முகம் கொண்ட
நாராயணனே துயிலெழாய் உன்னை வெல்ல முடியாத பகைவர்கள் உன் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்க வந்துள்ளதுபோல் நாங்களும் உன் புகழ் பாடிக்கொண்டு உன்னை அடைய வந்துள்ளோம்.  


 பால் சொரியும் பசுக்களைப்போல் பகவான் தன் பக்தர்களிடம்கருணையைப் பொழிபவன் .

அவன் ஜோதிச் சுடராய் விளங்குபவன் 
இருப்பினும் அவன் பக்தர்கள் வணங்கி  மகிழ்வதற்காக
மோகனக் கண்ணனாக வடிவெடுத்தவன் 


வடிவெடுத்தது மட்டுமல்லாமல் 
அவர்களில் ஒருவனாகவே இருந்து ஆனந்தத்தைதந்தான் அன்று 

கோடி சூரிய பிரகாசம் படைத்தவன் ஆனாலும் 
தன் பக்தர்களுக்காக அதை மறைத்துக்கொண்டு 
ஒளிவீசும் முகத்தினனாய் எழில் பொங்க காட்சி தந்தவன்
இன்றோ கோயிலில் அழகிய வடிவாக மலர்கள் சூடி தரிசிப்போர் மனம் மயங்கும் மன  மோகனக் கண்ணனாக காட்சி தருகின்றான்.இன்று  

அந்த மன மோகன வடிவத்தை அனுதினமும் கண்டு அந்த வடிவத்தை நம் மனதில் பதித்துக் கொண்டால் எந்நேரமும் அவன் தரிசனம் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். 

  
அதே நேரத்தில் அவன் பெருமை அறியாது அவனை பழித்து பேசி இருந்தாலும் 





மனம் திருந்தி அவன் திருவடிகளில் பக்தி செய்தால் நம் தவறுகளை மன்னித்து அதை கருத்தில் கொள்ளாது அன்போடு அருள் செய்பவன் கண்ணன் .

அந்த கருணைத் தெய்வத்தை 
இந்த புனிதமான மார்கழி மாதத்தில் உறக்கத்தை விட்டொழித்து கோயிலில் சென்று வழிபட்டு  மகிழவேண்டும்.


அவ்வாறு செய்(யாதவர்கள்) 
 மானிட பிறவி எடுத்தும் வீணே   
   
    

5 comments:

  1. பாசுரம் + விளக்கங்கள் + படங்கள் எல்லாமே அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. விளக்கம் அருமை
    நன்றி ஐயா

    ReplyDelete