Tuesday, January 7, 2014

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(26)


அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(26)



பாடல்-26

மாலே மணிவண்ணா 
மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் 
வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை எல்லாம் நடுங்கமுரல்வன பாலன்ன வண்ணத்துன் 
பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே 
சாலபெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே 
கோலவிளக்கே கொடிய விதானமே 
ஆலில் இலையாய்  அருளேலோ ரெம்பாவாய்  


விளக்கம் 

 நறுமணம் மிகுந்த மலர்கள்
 மற்றும் துளசி மாலைகளை சாற்றிக்கொண்டு அழகாய் காட்சி தரும் திருமகளுடன் காட்சி தரும் மாலே 

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

மணிகளின் இனிமையான ஓசை ஒலிக்க வண்ண  மயமாய்
சிங்காதனத்தில் அமர்ந்து எங்களுக்கு 
அருள் செய்ய காத்திருக்கும் மணி வண்ணனே 

மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடி 
உன்னை தரிசிக்க வந்ததுபோல்

தேவர்களுக்கு
 இம்மாதம் பகற்பொழுது. ஆகையால் அவர்களும் உன்னுடைய கையில் 
வெண்மையாய்ஒளி  வீசிக்கொண்டு அதிலிருந்து எழும் சங்கனாதம்
இந்த ஞாலத்தை நடுக்கமுறச் செய்வதைப்போல் பறையடித்து பெரு ஒலி  எழுப்பி உன் புகழ் பாடிக்கொண்டு உன் தரிசனம் காண வந்து நிற்கிறார்கள்.
  
இந்த உலகத்துக்கெல்லாம்
ஒளி தரும்  விளக்காய் இருப்பவனே.

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

எங்கள் உள்ளத்தில் குவிந்துள்ள 
அஞ்ஞானம் என்னும் அறியாமையை அகற்றும்ஞான விளக்கே

ஒவ்வொரு பிரளயம் போதும்
நீ படைத்த இந்த உலகனைத்தையும் உன்னுள் லயமாக்கிகொண்டு ஆலிலைமேல் சிறு குழந்தையாய் வலம் வருபவனே.

வேறு புகலிடம் இல்லாது 
உன் திருவடிகளையே நாடி வந்துள்ள 
நீதான் எங்களுக்கு இக பர சுகங்கள் 
அனைத்தையும் அருளல்  வேண்டும். 
  







3 comments:

  1. அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் ஓவியமும் படைத்துப்
    பகிர்ந்துள்ள காவியமும் ஆஹா,
    அருமையோ அருமை.

    பாராட்டுக்கள், அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாய் பார்த்துப் பார்த்துப்
      படங்களை வரைந்தேன்

      அதனால் அருமையோ அருமை என்று
      உங்களின் பாராட்டுக்கள் பெற்றேன்.

      நன்றி. பாராட்ட VGK
      இருக்க எனக்கென்ன மனக்கவலை.

      Delete