Thursday, January 9, 2014

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(28)(தொடர்ச்சி)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(28)(தொடர்ச்சி)


பாடல்-28

கறவைகள் பின்  சென்று கானம்  சேர்ந்துண்போம் 
அறிவொன்றும்இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் 
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் 

கறவைகள் என்றால் ஆநினம் என்று பொருள்.
 தற்காலத்தில் கால்நடைகள் என்று அழைக்கிறார்கள்.
 அந்த காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆயர்பாடி  என்று ஒரு பகுதி கிராமத்தின் மேற்குப் பக்கம் இருக்கும்.
மேய்ச்சல் நிலங்கள் இருக்கும்.கால்நடைகள் மேய

  
 ஏனென்றால் கிழக்குபக்கம்
 நீர்நிலைகள் பயிர்கள் இருக்கும்.
அங்கு கிராமத்தில் உள்ள மாடுகளனைத்தையும்
 பராமரிப்பவர்கள் இருந்தார்கள். அது தவிர ஒவ்வொரு வீட்டிலும் பசுக்கள் இருந்தது அவைகள் அனைத்தும்  காலையில் மேயப் புறப்படும் கூட்டம் கூட்டமாக  

.மாலை மஞ்சள் வெயிலில் அவைகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள விதவிதமான மணிகளின் ஒலிகளை எழுப்பிக்கொண்டு அதனதன்  வீட்டு கொட்டகைகளை அடையும். பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

 அவைகள் வரும் போது எழும் தூசி மாலை மஞ்சள் வெயிலில் தங்க துகள்கள் காற்றில்பறப்பதுபோல் போல் அழகாக இருக்கும்.
 இன்று எல்லாம் போய்விட்டது. 

எல்லா இடங்களிலும் அனைத்து  இயற்கை வளங்களையும் அழித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன 


மாடுகளை பராமரிப்பு என்பது முழுநேரப்பணி 
அந்த துறையில் ஈடுபட்டவர்களுக்கு 
கல்வி  கற்கநேரம் கிடையாது.
ஆனால் உள்ளத்தில்  கள்ளம் கபடு கிடையாது 

பகவான் எங்கிருக்கிறான் என்ற கேள்விக்கு மாசில்லா மனதில் இருக்கிறான் என்கிறார். தொண்டரடிப்பொடிஆழ்வார்.
அதனால்தான் பகவான் கண்ணன் அங்கு அவதரித்தான் 
அவர்களோடு விளையாடினான் 


மாடுகளை யாராவதுகண்காணித்து வரவேண்டும். 
இல்லாவிடில் அது காட்டிற்குள் நுழைந்தால் காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும்.
 இல்லாவிடில் பயிர் நிலங்களை மேய்ந்துவிடும்.
 கன்றுகள் பாலை குடித்துவிடும். 


மனிதரின் மனத்தை மாட்டிற்கு
 உவமையாக சித்தர்கள் சொல்லுகிறார்கள். 
அதை மனம் என்னும் மாடடங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதை கட்டுப்பாட்டில் வைக்காமல் போனதால்தான் 
உலகின் இன்று இத்தனை அலங்கோலம். 
அழிவுகள் ஆபத்துக்கள் துன்பங்கள்.
மனதை ஒரு யானையின் 
துதிக்கைக்கும் ஒப்பிடுகிறார்கள்.
 யானையின் துதிக்கை சும்மா இருக்காது 
அசைந்துகொண்டே இருக்கும்.
 நன்றாக நீராட்டி கொண்டு நிற்க வைத்தால் 
மண்ணை எடுத்து தன்  தலையில் போட்டுக்கொண்டு 
அசுத்தமாக்கிக் கொள்ளும். 


அதற்குதான் அதன் துதிக்கையில் 
 ஒரு சங்கிலியை கொடுத்துவிடுவார்கள் அது அதையே பல மணி நேரம் ஆட்டிக்கொண்டே இருக்கும்.

நம் மனம் ஏதாவது பொருளைப் பற்றிக்கொண்டு 
சதா சலித்துக்கொண்டே இருக்கும். 
சலிப்பது அதன் இயல்பு.
அதனால்தான் மகான்கள் 
ஒரு பகவன் நாமாவை அதனிடம் கொடுத்துவிட்டால் எப்போதும் அதை பற்றிக்கொண்டு மற்ற வேண்டாத எண்ணங்களை மறக்க தொடங்கும்.
மிகவும் எளிமையான மந்திரம் கோவிந்தா 
என்னும் நாமம்தான். முதலும் முடிவும் அதுதான்.

 எங்கிருந்து நம் ஜீவன் வந்ததோ  அதனுடன் மீண்டும் 
 சேர்ந்துகொள்ள வழி வகை செய்யும் நாமம்தான்  கோவிந்தா என்னும் திருநாமம். 

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


நன்மையை தரும் நாமம் கோவிந்தா 
என்கிறாள் ஆண்டாள். 

அதை வாயினால் பாட வேண்டும் 
மனதினால் சிந்திக்க வேண்டும்.
இரண்டு கண்களாலும் அவன் வடிவைக் 
கண்டு ஆனந்தமுற  வேண்டும்.  
அதுதான் மனித பிறவி எடுத்ததன் பயன். 
அதுதான் உண்மையான கல்வி கற்றதன் பயன். 
கண்கள்படைத்ததின்  பயன். 

காசும் பணமும் நாம் செய்த
 நற்பயன்களால் தானே வந்தமையும். 
அதைத்தான் நாம் அனுபவிக்க முடியும்.
அதர்மத்திற்கு புறம்பான வழிகளில் 
வரும் செல்வம் நமக்கு எந்தவிதத்திலும் பயன்படாது. 

இந்த உலகத்தில் எல்லாம் ஏதாவது 
ஒன்றை சுற்றுகின்றன. கல் இயந்திரத்தில் 
அச்சைச் சுற்றிதான் கல் சுழல்கிறது 

அச்சு அசையாமல் இருக்கிறது 
அச்சைவிட்டு விலகி வரும் பொருட்கள் இடிந்து மாவாகிறது
 அச்சுடன் ஒதுங்கி  நிற்கும் பொருட்கள் பத்திரமாக இருக்கின்றன. 

அனைத்திற்கும் ஆதரமானவன் அச்சுதன் >
 அவன்தான்என்றும்  அழியாதவன்
அவன் பெருமை அளவிடமுடியாதது 
அனந்தன் அவன்தான் கோவிந்தன் 
.அவனிடம் நம் மனதை ஒப்படைத்துவிடுவோம் ..
அல்லல் இல்லா வாழ்க்கையை வாழ்வோம்.  

படங்கள்-உதவி-கூகிள்  

4 comments:

  1. மனம் - யானையின் துதிக்கை - விளக்கம் மிகவும் அருமை... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஸ்ரீ கிருஷ்ணன் படங்கள், மாடுகள் படங்கள், கன்றுக்குட்டிகளின் படங்கள், யானைப்படம் மற்றும் அண்ணா வரைந்த படம் எல்லாமே படு ஜோர். அல்வாபோல ! ;)

    //நன்மையை தரும் நாமம் கோவிந்தா என்கிறாள் ஆண்டாள். //

    எது சாப்பிட்டாலும் ..... ‘பிடி கொழுக்கட்டையே ஆனாலும், பழைய சாத உருண்டையே ஆனாலும்’

    கோவிந்த .... கோவிந்த .... கோவிந்தா ....

    என்று மூன்று முறை சொல்லி விட்டே சாப்பிடுவார் என் மாமனார். அவர் அந்த கிராமத்திலேயே மிகப்பெரிய பாகவதரும் கூட.

    அருமையான பகிர்வு, அண்ணா. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK
      பெரியவா சொன்னா
      பெருமாள் சொன்ன மாதிரி.

      Delete