Saturday, January 11, 2014

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(2)(தொடர்ச்சி)

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் 




சுவாமியின் ஒரு பக்தரின் அனுபவம்(தொடர்ச்சி)

முதல்நாள்  வேலூர் மருத்துவமனையில்
 மருத்துவ பரிசோதனைகள் முடிந்தது. 

அடுத்த நாள் உள் நோயாளியாக சேரவேண்டும். 

ஒரு ஹோட்டலில் அறை  எடுத்து தங்கினார் அந்த பக்தர். 
வந்த களைப்பில் உறங்கிப் போனார். 

உறக்கத்தில் ஒரு கனவு 
அந்த கனவில் ஸ்வாமிகள் தோன்றினார் 
மகனே நீ எதற்கும் கவலைப்படாதே 
நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன்.
என்று சொல்லி மறைந்து விட்டார். 

ஆனால் அடுத்த கணமே பக்தருக்கு
வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

அவருக்கு உடலில் ஒரு தெம்பும்  
சக்தியும் வர ஆரம்பித்தது. 

மறுநாள் மருத்துவமனை சென்றார். 
அங்கு அவரைஉள் நோயாளியாக 
சேர்த்துக்கொண்டார்கள். 
அனைத்து மருத்துவ பரிசோதனைக் 
குறிப்புகளை ஆய்வு செய்த பின்னர் 
உங்கள் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .
அதனால் உள் நோயாளியாக 
இருக்க தேவையில்லை என்று 
விடுவித்துவிட்டார்கள். 

பரிசோதனைக்கான செலவு வெறும் ரூபாய் 47-10 பைசா மட்டுமே. (ஸ்வாமிகள் கொடுத்த 50 ரூபாய்க்குள்தான் செலவு ஆகியிருந்தது கவனிக்கத்தக்கது)

அங்கிருந்து சுவாமிகளைப் பார்க்க தபோவனம் சென்றார் பக்தர்.
அவரை சென்னைக்கு சென்று பணியில் சேர சொல்லி பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தார். தபோவன மகான்

அவர் அங்கு சென்றதும் மருத்துவரிடம்
 உடலைக்காட்டி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில்
அவரின் காச நோய் முழுவதுமாக
குணமாகியிருந்ததைக் கண்டு
மருத்துவர் வியப்பில் ஆழ்ந்தார்.
இன்றும் அந்த பக்தர் நலமாக  உள்ளார்.

இதைப் போன்று ஏராளமான
சம்பவங்கள் நடைபெற்றுள்ளன

அது ஏன்  எப்படி என்று
ஆராய்ச்சி செய்பவர்களுக்கு
விடை கிடைக்காது

அதுதான் சித்த புருஷர்களின் சக்தி.
பரிபூர்ணமாக நம்பியவர்களை காப்பாற்ற
விதியையே மாற்றும் வல்லமை படைத்தவர்கள்.
அவர்களுக்கு குறை காணத் தெரியாது
விருப்பு வெறுப்பு கிடையாது
கலப்படமற்ற தூய அன்பு ஒன்றே அவர்கள் வழி

உடலை உகுத்த பின்னும்
நம்பியவர்களை காக்கின்ற
கருணை தெய்வங்கள்.

நம்பினார் கெடுவதில்லை .  (இன்னும் வரும்)


4 comments:

  1. வியப்பாக உள்ளது ஐயா...

    பரிபூர்ணமாக நம்பியவர்களை காப்பாற்ற விதியையே மாற்றும் வல்லமை படைத்தவர்கள் - இது உண்மை...

    ReplyDelete
  2. உண்மை.
    உண்மை.
    உண்மை.

    ReplyDelete
  3. பக்தி இருந்தால் போதும் சித்த புருஷர்களிடம்

    நம்பிக்கை இருந்தால்
    போதும்
    நம் வாழ்விலும்
    அற்புதங்கள் நடக்கும்.

    ReplyDelete