Wednesday, January 15, 2014

இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?": (தொடர்ச்சி-2)

இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?": (தொடர்ச்சி-2)


திண்டுக்கல் தனபாலன் has left a new comment on your post "இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?": 



காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - பட்டினத்தார்

றப்பான பகிர்வு ஐயா... நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்..

காதற்றஊசி மட்டுமல்ல
எதுவுமே நம்முடன் வாராது என்பதுதான்
ஞானிகள் அறிந்து தெளிந்து நமக்கு தெரிவித்த உண்மை.

நாம் உயிரோடு இந்த உலகில் உலாவியபோது செய்த
நல்ல தீய செயல்களின் பதிவுகள் மட்டும்தான்
நம்மோடு வரும் அடுத்த பிறவிக்கு
இன்ப துன்பங்களை அனுபவிக்க

இது எப்படி இருந்தால் பழைய கணினியிலிருந்து
ஹார்ட் டிஸ்க்கை பார்மட்  செய்து வேண்டாத
தகவல்களை நீக்கிவிட்டு மீண்டும்
 புதிய கணினியில் உள்ள டிஸ்க்கில்
 பதிவது போலத்தான் இதுவும்.

அறிவாளிகள் உயிர் போகுமுன்
 மலைபோல் குவிந்துள்ள தேவையற்ற
 தகவல்கலை  அழித்துவிட்டு
நிம்மதியாக இருக்கிறார்கள்.



அதனால் புதிய கணினி வாங்கும்போது
அதை பயன்படுத்துவதில்
எந்த பிரச்சினையும் எதிர்கொள்வதில்லை.

சோம்பேறிகளும் , முட்டாள்களும்
கொடிய வைரஸ்களுடன் கணினியை
அப்படியே வைத்தக்கொண்டு மூளை கலங்கிப்போய் 
கணினி கெட்டுப்போய்
இயங்காமல் போவதுபோல்
இந்த உடலையும் மனதையும் நோய்க்கு
ஆளாக்கி கொடிய மரணத்தை சந்திக்கிறார்கள்
 என்பதே உண்மை.



அனுதினமும் கணினியை
ஆய்வு செய்து தேவையற்றவற்றை அழித்தால்
அது நமக்கு நெடுநாள் உதவும்

ஆனால் அதை யாரும் செய்வதில்லை
நோய் முற்றிப்போனவுடன்
ஒரு பொறியாளரைத் தேடுவதுபோல்.
வாழ்க்கையில் அனைத்துத் தவறுகளையும் செய்து
அழிந்து போகும் நேரத்தில்
ஆன்மீக பெரியவர்களை நாடும்
போக்குதான் இன்று உள்ளது
.


அதுவும் பொய்களை அவிழ்த்துவிட்டு
நம்மை சுரண்டிக் கொழுக்கும்
போலி குருவிடம் மாட்டிக்கொண்டால்
முதலுக்கே மோசம் ஆகிவிடும்.

5 comments:

  1. கணினியை ஒப்பிட்டு சொன்னது மிகவும் அருமை... உண்மையும் கூட...

    ஆனால் கணினியை மட்டும் அல்ல... நீங்கள் சிறப்பாக சொன்னதையும்... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல விளக்கம். கணினி ஃபார்மேட்டுடன் ஒப்பீடும் அருமை.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு. ;)

    //அனுதினமும் கணினியை ஆய்வு செய்து தேவையற்றவற்றை அழித்தால் அது நமக்கு நெடுநாள் உதவும்.//

    ஆஹா!

    இந்த என் அண்ணாவின் விளக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதி எல்லாவற்றையும் சுத்தமாக நீக்கி அழித்து விடலாமா என எனக்கு ஓர் பேரெழுச்சி ஏற்படுகிறதூஊஊஊ. ;)))))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! எனக்கும் ஓர் பேரெழுச்சி ஏற்படுகிறதூஊஊஊ. ;)))))VGK

      Delete