Saturday, January 11, 2014

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(3)

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(3)

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் 

ஸ்வாமிகள் சித்த புருஷர்.

இருந்தாலும் எதையுமே வெளிக்காட்டாமல் 
எளிமையாய்.பணிவின் வடிவாய்
அகந்தை என்பதே அணுவளவும் 
இல்லாமல் இந்த பூவுலகில்
வலம் வந்தவர் 


அவரால் எதையும் செய்ய முடியும் 
என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்.
அவருக்கு எவர் மீதும் சினம் என்பதே கிடையாது.

அவரை சோதிக்க நினைப்பவர்கள் மீதும் 
அவர் சினம் கொள்ள மாட்டார். 

அவருக்கு உள்ள தனி திறமையினால் 
அவர்களையும் தன்வழிக்கு கொண்டுவருவதுடன் 
அவர்களின் அறியாமையையும் நீக்கி 
அவர்களை நல்ல பாதையில் 
செல்லுமாறு செய்து விடுவார். 

அவரவர் அவரவர் குல, 
பாரம்பரியங்களை உண்மையாக 
கடைபிடிக்குமாறு அறிவுறுத்துவார் .

அவர் சித்தலிங்க மடத்தில் 
இருந்த போது சிறுவர்களும் பலரும் அவரை தரிசிக்க 
வரும்போது சர்க்கரை பொட்டலங்களை தந்து வணங்குவர்கள் 
அந்த பொட்டலங்களை 
தனியாக வாங்கி வைத்துகொள்ளுவார் 

அவர் மகிமை அறியாத சில போக்கிரிகள்
 மணலை பொட்டலம் கட்டி அவர்களிடம் 
கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் .
அவற்றையும் அவர் சிரித்துக் கொண்டே 
வாங்கி தனியாக வைத்துக்கொள்வார். 

ஒருநாள் எல்லோர் முன்னிலையும் 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்  கொண்டு வரச்  சொல்வார் 

அந்த மணல் பொட்டலங்களில் 
உள்ள எல்லா மணலையும் அதில் போடச் சொல்லுவார் .
அதில் மணல் முழுவதும் சர்க்கரைபோல் கரைந்துவிடும் எல்லோருக்கும். கொடுப்பார் .தண்ணீர் இனிப்பாக சுவைக்கும்.

அதுதான் அவரின் சக்தி. 
இதற்கெல்லாம் காரணம் தெரியாது 
எப்படி என்று நமக்கு புரியாது. 
இப்படி எத்தனையோ அதிசயங்கள 
அனாயாசமாக செய்தவர். 


நமக்கு ஏன் ,எப்படி என்ற
ஆராய்ச்சிகள்  தேவையில்லை.




கோகுலத்தில் ஆய்ச்சியர்கள் 
கண்ணன்  மேல் கொண்ட களங்கமற்ற நம்பிக்கை, 
பக்தி இருந்தால் போதும் சித்த புருஷர்களிடம் 

நம்பிக்கை இருந்தால் 
போதும் 
நம் வாழ்விலும் 
அற்புதங்கள் நடக்கும். 

4 comments:

  1. //நம்பிக்கை இருந்தால் போதும்
    நம் வாழ்விலும் அற்புதங்கள் நடக்கும். //

    நன்றாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நமக்கு ஏன் ,எப்படி என்ற
    ஆராய்ச்சிகள் தேவையில்லை.

    நம்பிக்கையே அவசியம் ..!

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையேனன்மை தரும்

      Delete