Sunday, January 5, 2014

நம்பிக்கையினால் மலையை அசைக்க முடியுமா?

நம்பிக்கையினால் மலையை அசைக்க முடியுமா? 

ஆங்கிலத்திலே
 mountains can  be moved by faith?என்று
 ஒரு பழமொழி உண்டு 

ஆனால் அதற்கு அவர்களிடம்
 ஆதாரம் தேடினால் கிடைக்காது. 

நம்பிக்கையற்றவர்களுக்கு
 என்ன சொன்னாலும் புரியவைக்க முடியாது 

அவர்கள் இதற்க்கு ஆதாரம் காட்டுங்கள்
 என்று கேள்வி கேட்க மட்டும் தயங்குவதில்லை 

ஏன்முடியாது?


மலையை தூக்கவும் முடியும்,
அசைக்கவும் முடியும், 
அதை உருக வைக்கவும்  முடியும். 
என்பதே என் பதில் 

எப்படி ?

நீங்கள் கடவுளை நம்புபவராக இருந்தால் 
நீங்கள் நம்முடைய இதிஹாச புராணங்களை
நம்புபவராக இருந்தால். மட்டுமே
நான் கூறுவதை நீங்கள் நம்ப முடியும். 

1.ஆஞ்சநேய மூர்த்தி இமயமலையிலிருந்து 



சஞ்சீவி பர்வதத்தை 


பெயர்த்தது மட்டுமல்லாமல் அதை தன்  கையில் ஏந்திக்கொண்டு 



இலங்கைக்கு கொண்டு சென்று அதில் உள்ள மூலிகைகளைக் கொண்டு 
மயக்கத்தில் ஆழ்ந்துபோன ராம் லக்ஷ்மனரை காப்பாற்றியதும், மடிந்து போன வானரர்களையும் காப்பாற்றியதை வால்மீகி ராமாயணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது ,


ராம நாமத்தின் மீது கொண்ட அசைக்கமுடியாத அனுமனின் நம்பிக்கை இந்த சாதனையை செய்யும் சக்தியைத் தந்துள்ளது. 

2. அகத்திய முனிவருக்கும், ராவணனுக்கும் இசை போட்டி நடந்தபோது நடுவராக இசை அரசி வாணி இருக்க மறுத்ததால் மலையையே நடுவராக வைத்துக்கொண்டு யாருடைய இசைக்கு கல் மலை உருகுகிறதோ  அவரே வெற்றி பெற்றவராவர் என்று முடிவு செய்தனர். இசைக்கு கல்லும் உருகும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அகத்தியரின் இனிமையான தெய்வீக 

இசைக்கும் கல்லும் உருகியது. 



3.வரங்களை பெறுவதற்காக சிவனை குறித்து ராவணன் தவம் செய்தான். 
சிவன் அருள் கிடைக்காததால் அகந்தையினால்  கைலாய மலையையே பிடித்து உலுக்கினான் 
பார்வதி தேவி சிவபெருமானிடம் காரணத்தை கேட்டதும் ,ராவணனின் அடாத செயலை அறிந்த சிவபெருமாள் சிரித்துவிட்டு தனுடைய கால் கட்டை விரலால் மலையை அமுக்கினார் 
வலி தாங்க முடியாமல் ராவணன் துடித்தான். .தன் அறியாமையை நினைத்து வருந்தி மீண்டும் இறைவனை தன்னை மன்னிக்குமாறு துதித்தான் .கருணாமூர்த்தியான சிவா பெருமானும் அவன் கோரிய வரங்களை வழங்கி அருளினார்.  

இறை நம்பிக்கை உடையவர்களுக்கு
 இந்த சம்பவங்களே சாட்சியாக கொள்ளலாம்

பகவான் மீது அசைக்க முடியாத நம்பிக்கை என்னும் படகின் மூலம்தான் பிறப்பு இறப்பு என்னும் கடலை எளிதாகத் தாண்ட முடியும்.இன்ப துன்பங்களை பொறுமையாக ஏற்றுக்கொள்பவர்கள்தான்  இறைஅருளை பெற முடியும் 

இந்த உபதேசத்தைதான் சீரடி சாய் அன்று தன்  பக்தர்களுக்கு  தந்தருளினார் 
இன்றும் நம்பிக்கையோடு வழிபடுபவர்களுக்கு வழிகாட்டுகிறார் 



எனவே எந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். 
நமக்கு அதிகமாக் சோதனைகள் வருகிறது என்றால் பகவான் நம்முடைய நம்பிக்கையை சோதிக்கிறான் என்றே பொருள் 
எந்த நிலையிலும் மனம் எந்த சோதனையையும் கண்டு கலங்காமல் உறுதியாய் இருக்க பழகவேண்டும். 

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு. 

pic-courtesy-google images 










8 comments:

  1. நம்பிக்கையினால் மலையை அசைக்க முடியுமா?

    ஸ்ரீ ராம பக்தர்களான ஸ்ரீ ஹனுமனாலும், என் அண்ணா.....வாலும் [வாலு....ம்] மட்டுமே இது முடியும். ;)

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையினால்
      மலையை அசைக்க முடியுமா?

      ஸ்ரீ ராம பக்தர்களான ஸ்ரீ ஹனுமனாலும்,
      என் அண்ணா.....வாலும் [வாலு....ம்] மட்டுமே இது முடியும். ;)
      வை கோபாலக்ருஷ்ணன்

      அண்ணாவிற்கு
      வால் கிடையாது. -

      எனக்குத் தெரியாமல் இருந்த வாலையும்
      31 ஆம் தேதி நறுக்கி விட்டான்

      காலை ஒடித்து
      படுக்கையில் தள்ளிவிட்டான்
      காலைக்கூட
      அசைக்க முடியாமல் கிடக்கிறேன்

      வலியினால் ராமனின் அம்பு பாய்ந்து
      துடித்துக்கொண்டிருக்கும் வாலியின் நிலைபோல்
      உள்ளது என் நிலை.

      ஆனால் வாலியைப் போல் துஷ்டனல்ல இவன்.
      ஒரு அப்பாவி

      அந்த பாவிக்கோ ராமனின் தரிசனம் கிடைத்தது.

      இவனுக்கோ அவன் கரிசனம் கூட
      கிடைக்க மாட்டேன் என்கிறது.
      என்ன செய்வது?
      என் வினைகள் அப்படி.
      ஏதோ அவனைப் பற்றி எழுதுவதர்க்காகவாவது
      இவனை அனுமதி அளித்துள்ளானே
      அதுவேஇவன் செய்த பெரும் புண்ணியம்.

      ஏற்கெனவே என் மனைவியின் உடல் நிலை சரியில்லை
      அவளை சில ஆண்டுகளாக கவனித்துக்கொண்டிருந்த என்னை
      அவள் தன்னையும், என்னையும் சேர்ந்து
      கவனிக்கும்படி வைத்துவிட்டான்.
      இனி என்ன ஆகுமோ?

      அந்த பகவான்தான்
      எங்களை காப்பாற்றவேண்டும்.

      விக்கு வினாயகத்திற்கு கையில் கடம் இருக்கிறது
      இவனுக்கு திக்கும் இல்லை திவானும் இல்லை.
      அந்த திருவேங்கடமுடையாந்தான் இருக்கிறான்.

      அவன் எதையும் கேட்காமலேயே
      எல்லாவற்றையும் தருகிறான் (இப்போது இவன் படும் துன்பத்தையும் சேர்த்து)
      அவைகளில் இவன் நாட்டம் கொள்வதில்லை


      ஆனால் கேட்பது எதையும் அவன்
      காதில் போட்டுக்கொள்வதிலை)

      ஏனென்றால் எப்போதும்
      அவனை சுற்றி "கோவிந்தா" "கோவிந்தா" என்ற கோஷம்.

      அதனால் அவனுக்கு நான் கூறுவது
      எதுவும் காதில் விழவில்லை போலிருக்கிறது.

      இருந்தாலும் என் முக பாவத்திலிருந்து
      ஓரளவு ஊகித்து ஏதோ ஒன்று அல்லது இரண்டு பிச்சை போடுகிறான்.

      எல்லாவற்றிற்கும்
      பிறர் தயவை நாடும் நிலை வந்துவிட்டது.

      காயங்கள் சரியாகி
      என்றுதான் இவன் உடல் எழுந்து
      நிற்கவும் நடக்கவும் முடியுமோ தெரியவில்லை?

      கணினியில் வேலை செய்ய புத்தியும்
      கை மட்டும் இயங்க அந்த ராமன் அனுமதித்துள்ளான்.

      அதையாவது விட்டு வைத்திருக்கிறானே என்று
      முக்கி முனகி எழுந்து உட்கார்ந்துகொண்டு
      அவன் இவன் மண்டைக்குள் திணிக்கும்
      கருத்துக்களை உங்களுக்கு
      அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

      Delete
  2. என் தொடரின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா தரிஸனத்துக்கு வாங்கோ. எல்லாம் சரியாகிப்போகும். 105/1/2 + 105/2/2 .... திரும்பப் போகும் போது ஜாலியாகக் காரில் போகலாம். ;)

    ReplyDelete
    Replies
    1. வந்தேன்
      கருத்துக்களைதந்தேன்

      Delete
    2. சந்தோஷம். நாளைக்கும் வாங்கோ - நாளைக்கு மொத்தம் மூன்று பதிவாக்கும். இன்று நள்ளிரவேகூட வெளியாகும். அதனால் இருட்டில் ஜாக்கிரதை. ;)

      Delete
  3. எடுத்துக்காட்டுகள் அனைத்தும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete