Friday, January 10, 2014

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் 



சத்குரு ஞானனந்த கிரி சுவாமிகளைப் பற்றி
அறியாதவர்கள் இருக்க முடியாது.

திருக்கோயிலூர் தபோவனத்தில்
தங்கியிருந்து பல்லாயிரக்கணக்கான
 மக்களின் துயர் தீர்த்த தெய்வம்.

துன்பம் துடைத்த  தெய்வம்.

ஞானக் கருத்துக்களை எளிமையாக்கி தந்து
அங்கு சென்றோர் அனைவரையும்
ஏற்றம் பெற  செய்த தெய்வம்.

அன்போடு அனைவரையும்
ஆதரித்த தெய்வம்.

இன்றும் அங்கிருந்துகொண்டு
 நம்பியவரை காக்கும் தெய்வம்.

அவரைப் பற்றி சிந்திக்கலாம்
என்று தோன்றியது அவர் கருணையே
.
அவர் ஒரு ஜீவன் முக்தர்.

முக்குணங்களையும்  கடந்தவர்
 முக்காலமும் அறிந்த மகான்

இருந்தும் அங்கு வரும்
பலதரப்பட்ட பக்தர்களுக்கும்,
குழந்தைகளுக்கும்
அங்கு தங்கியிருந்த அனைவருக்கும்
எந்த நேரத்திலும் அவர் எளிதில்
அணுகக்கூடிய நிலையில் இருந்தவர்.



எப்போதும் அவர் முகத்தில்
தெய்வீகப் புன்னகை
மலர்ந்துகொண்டே இருக்கும்.

நகைசுவையும் 
அவ்வப்போது இழையோடும்.



ஒரு பக்தர் அவரிடம்
ஒரு கேள்வியைக் கேட்டார்.

பக்தர்: சுவாமிகளே  சிவனையும் பார்வதியையும் 
பிரித்து வைத்து ஏன் அவர்களுக்கு இடையில்
 கணபதியையும் முருகனையும் வைத்துள்ளீர்? 

ஸ்வாமிகள் : எல்லாம் 
குடும்பக் கட்டுப்பாட்டுக்காகத்தான் 

4 comments:

  1. நகைச்சுவை உணர்வு மிக்கவரும், எப்போதும் சிரித்த முகத்துடன் திகழ்ந்தவருமான ஸ்வாமிகள் பற்றிய நல்லதொரு பதிவுக்கு நன்றிகள், அண்ணா.

    ReplyDelete
  2. ஹா... ஹா... ஸ்வாமிகள் சரியாகத்தான் சொல்லி உள்ளார்...!

    ReplyDelete
  3. Very nice to see/hear about HH Sadguru Gnanananda Giri Swamigal.
    Let your service continue
    Srinivasan

    ReplyDelete