Friday, January 17, 2014

விழித்துக்கொள்ளுங்கள். பூமியில் உங்கள் உடல் கீழே விழும் முன்.

விழித்துக்கொள்ளுங்கள்.
பூமியில் உங்கள் 
உடல் கீழே விழும் முன். 

மார்கழி முடிந்தவுடன்
வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய்
என்று பாடிவிட்டு கடையை கட்டிவிட்டாள் ஆண்டாள்.



மீண்டும் அடுத்த வருடம் வருவாள்
எத்தனை பேர் இருப்போமோ
அவள் போதனையை மீண்டும் செவி மடுக்க ?
யாரறிவார் ?

எனவே விழித்துக்கொள்ளுங்கள்
உறக்கத்திலிருந்து மீண்ட நாம்  மீண்டும்


குடிகாரன் போல் மயக்கத்தில்
ஆழ்ந்துவிடக்கூடாது
என்று எச்சரிப்பதற்க்கே
இந்த கட்டுரை,

இதை நச்சரிப்பதாக
கருதித் தள்ளக் கூடாது
இவன் கூறுவதை
தவறாக எண்ணக் கூடாது.

எத்தனை கோடி இன்பம் 
வைத்தாய் இறைவா !
என்று பாடினான் பாரதி.

எந்த நிலையில் தெரியுமா ?
அத்தனை கோடி துன்பங்களை 
அனுபவித்த நேரத்தில். 

எப்படி அவனால் 
அப்படி பாட முடிந்தது?
அதிசயம் ஒன்றுமில்லை 



அவன் மனம் முழுவதும் 
கண்ணன் ஆக்கிரமித்துகொண்டுவிட்டான் 
அதனால்தான் அப்படிபாட  முடிந்தது. 


நம் மனதில் கண்ணன்
எங்கே இருக்கின்றான்.?
அவன் நுழைய எங்கே
இடம் விட்டிருக்கிறோம் ?

காம விகாரங்கள் தான் நம் மனம்
முழுவதும் வாடகையில்லாமல்
ஆக்கிரமித்து கிடக்கின்றன.

மூடர்கள் போல் ஒருவரை
ஒருவர்  காப்பியடித்து
வாழ்வது ஒரு வாழ்க்கையா?

அதற்காகவா இறைவன் இந்த உலகிற்கு
உங்களை அனுப்பி வைத்தான் ?

எதற்கெடுத்தாலும்  கவலைப்பட்டு
சாவதர்க்கா இந்த உலகத்திற்கு
அனுப்பி வைத்தான்?

எவ்வளவு இருந்தாலும் இன்னும்
வேண்டும் இன்னும் வேண்டும் என்று
எப்போதும் பேராசை பிடித்து அலைவதர்க்கா
இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தான்?

தன்னிடம் இல்லாத  ஒன்று  பிறரிடமும்
இருக்கக்கூடாது என்று பொறாமைப்பட்டு
பொசுங்கவா இந்த உலகத்திற்கு
அனுப்பி வைத்தான்.?

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு
திறமைகளோடு படைத்து இந்த உலகத்திற்கு
அனுப்பி வைத்தும் அதை உணராமல்
வான்கோழி போல் மயிலைப் பார்த்து
அதுபோல் ஆட முயலுவதுபோல்
நடந்துகொள்ளவா இந்த
உலகத்திற்கு அனுப்பி வைத்தான்?

புலி வேறு ,பூனை வேறு இறைவன் படைப்பில்.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்
அதுபோலதான் இந்த மனிதர்களும்
செய்துகொண்டிருக்கிறார்கள்.

தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும்
போலியாக வேஷம் போட்டு நடிப்பதும்,
கூசாமல் பொய் சொல்வதும், எப்போதும் பிறருக்கு கேடு நினைப்பதும்,
 பிறர் சொத்துக்களை அபகரித்து வாழ்வதும் ஒரு வாழ்க்கையா?

நம்மையே அண்டி வாழும் உயிர்களைக்
கொன்று தின்பதும், வனத்தில் வசித்துக்கொண்டு
இந்த உலகம் நன்றாக வாழ சுற்று சூழலை பாதுகாத்து வரும் வன விலங்குகளையும்,காட்டில் உள்ள கணக்கற்ற பறவைகள், புல்  பூண்டுகள், செடிகள், கொடிகள், மரங்கள், நீர்வீழ்ச்சிகள் , என ஏராளமான  , இயற்கை வளங்களையும் சூறையாடி சுயநலத்துடன் வாழும் கோடானுகோடி  விலங்கு மனம் கொண்ட சுயநல  பிண்டமாக வாழவா இந்த உலகிற்கு அனுப்பி வைத்தான்?

மற்றவர்களுக்கு உதவுதே வாழ்க்கை நெறி
என்ற உண்மையை மறந்து கடமை செய்வதற்கே
காசு வாங்கும் ஈனப் பிறவிகளாக வாழ்வதற்கா
இந்த உலகிற்கு அனுப்பி வைத்தான்?

அழிந்து அழிந்து அவ்வப்போது வடிவங்களை
மாற்றிக்கொள்ளும் இந்த உலகில்
அழியும்உடலில்  குடியிருக்கும்
ஜீவனாகிய நாம் இந்த உடலாகிய
தேவாலயத்தின் உள்ளே உறையும் மாலை மறந்து,
எப்போதும் மால்களைத்  தேடி சென்று
பொருட்களை வாங்கி மாளிகைகளை கட்டி
அதில் குவித்துவிட்டு  ஒருநாள் கூண்டோடு
கைலாசம் போவதற்கா இத பிறவியை
இறைவன் நமக்கு அளித்தான். ?

சிந்திப்பீர்  
இன்னும் காலம் கடந்துவிடவில்லை?
மாறுங்கள் .மனம் திருந்துங்கள்.

இல்லையேல் உங்கள்  மனமும்
காம விகாரங்களினால் நாற்றமெடுக்கும்.
அதன் வெளிப்பாடான
இந்த உடலும்நாறிப்போகும் .

இப்போது மட்டுமென்னா நாறாமலா 
இருக்கின்றோம் என்று ஒரு நண்பர்  கேட்பது
காதில் விழாமல் இல்லை.

அதற்காகத்தான் எத்தனை கிருமி நாசினிகள், பவுடர்கள், கிரீம்கள், ஜெல்கள்,ச்ப்ரேகள் .அதுவே வாழ்நாளில் பல லட்சங்களை விழுங்கிவிடுகிறது. முடிவில் அவைகளும் உடலின் நாற்றத்தோடு சேர்ந்துகொண்டு புதுவிதமான ரசாயன நாற்றங்களை
 உண்டு பண்ணுகிறது.

திருந்துவதர்க்காகதான் மனிதப்பிறவி.
வருந்துவதற்காக அல்ல 

தன்னுள் கண்ணனைக் கண்டு அவனை பிற உயிர்களிலும் கண்டு இன்பமாக அனைவரும் கூடி வாழ்வதற்குத்தான் 
இந்த மனிதப்பிறவி 



வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தேலோ  
ரெம்பாவாய் என்று பாடிய ஆண்டாளின் 
பாசுரங்களை படித்தால் சித்தம் தெளியும். 
இன்ப ஊற்றெடுக்கும் இதயத்திலே 



9 comments:

  1. அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை - அறியாத
    மானிடர்க்கு அக்கரையில் இச்சை..

    கவிஞரின் வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வரிக்குதிரைக்கு வரிகள் அழகாகத்தான் இருக்கிறது
      நாமெல்லாம் கண்டு மகிழ
      ஆனால் சிங்கம் புலிக்கு உணவாகத்தான் தெரியும்.
      அதுபோல்தான் நம்முடைய வாழ்க்கை அழகாகத்தான் இருக்கிறது.
      ஆனால் நம்மை வேட்டையாடும் எமனுக்கு
      நாம் அறிவில்லா ஜீவனாகதான் தெரிவோம் என்பதை மறக்கக்கூடாது.
      உயிர் போவதற்குள் நமக்குள் உறையும் கண்ணனை நாம் உணர்ந்து கொண்டால் பிழைத்தோம். உடலை எமனிடம் கொடுத்துவிட்டு ஜீவாத்மாவாகிய நாம் பரமாத்வாகிய கண்ணனிடம் சென்று மரணமில்லா வாழ்வைப் பெறலாம்.

      Delete
  2. ஒவ்வொரு கேள்வியும் சிந்திக்க வேண்டியவை...! நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    கண்ணதாசன் வரிகள் :

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்...
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்...
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்...
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்...
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்...
    கவலை தீர்ந்தால் வாழலாம்...

    வாழ நினைத்தால் வாழலாம்...
    வழியா இல்லை பூமியில்...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்வதற்காகத்தான்
      இங்கு வந்துள்ளோம்
      அதை வாழ்வாங்கு வாழ வேண்டும்
      வள்ளுவர் கூறியுள்ளதுபோல்
      வானுறையுள் வைக்கப்படும்
      தெய்வங்கள்போல் வாழ வேண்டும்.
      உடலும் குடலும்தான் வாழ்க்கை என்று
      புலன்கள் பின்னால் திரியக்கூடாது.
      ஈதல் இசைபட வாழ்தல் என்ற வள்ளுவனின் தத்துவத்தை சிரமேற்கொண்டு. அறவழியில் பொருளீட்டி அன்பு நெறியில் வாழவேண்டும்.
      அன்பே சிவம் என்பதை வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.
      சிவனைப் பற்றி பேசிக்கொண்டு
      அவம் பேசித் திரிவதால் பயனொன்றுமில்லை.
      வெளியே உள்ள எதிரிகளை விட
      நம் மனதின் உள்ளே பதுங்கி நம்மை திடீரென்று தாக்கி நம்மை நிலை குலையச் செய்யும்
      காம குரோதம் முதலிய ஆறு எதிரிகளை நாம் இனம் கண்டு கொண்டு அழிக்க வேண்டும்.
      சாத்திரங்களை வெறுமனே நெட்டுரு போடுவதால்
      பயனில்லை.
      அது கூறும் நெறிகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.

      Delete
    2. Dear Sri Pattabi Raman,

      Your post 'Vizhithukollungal' was very inspiring and awakening. Thank you.

      I am sending herewith a link to an article of mine that appeared in 'Speaking Tree' blog. Kindly see it and let me have your comments.

      http://www.speakingtree.in/public/spiritual-blogs/seekers/science-of-spirituality/uttisthata

      Krishnan.

      Delete
  3. Dear VSK

    படித்தேன் நன்றாக
    தெளிவாக எழுதப்பட்டுள்ளது

    என்னதான் படித்தாலும். பகவன் ரமணர் அறிவுறுத்தியது போல் ஆத்மா விசாரணை மேற்கொள்ளாவிடில் என்ன பயன் என்பதை யாரும் உணருவதில்லை.

    ஆயிரமாயிரம் தத்துவங்களை வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருப்பதைக் காட்டிலும் ஏதாவது ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து சாதனையில் ஈடுபடவேண்டும்.

    அவ்வாறு செய்யாவிடில் அரிதாக கிடைத்த இந்த மனிதப் பிறவி வீணாகிவிடும்.என்பதை யாரும் உணருவதில்லை.

    ஆன்மா நமக்குள் இருக்கிறது அதை புத்தகங்களிலோ, மனிதர்களிலோ அல்லது வெளி உலகினிலோ தேடுவதில் பயனில்லை. அதை உள்ளேதான் தேடவேண்டும்.

    அதற்கு நம் மனதில் உள்ளே இருக்கும்,மற்றும் வந்து போகும் எண்ணங்களை கவனித்து அது யாருக்கு உண்டாயிற்று என்று விசாரணை செய்ய வேண்டும் மனதில் எண்ணங்களே இல்லாமல் செய்துவிட்டால் மனம் அழிந்துபோய் விடும். ஆத்மா மட்டுமே எஞ்சி நிற்கும் என்று தெளிவாக ரமணர் கூறியிருந்தும் யாரும் அதற்க்கு முயற்சி செய்வதில்லை. என்பதே உண்மை.

    எல்லோரும் சுலபமாக ஆன்ம ஞானம் அடைவதற்கு குறுக்கு வழி இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.

    யாராவது ஒரு குரு ஆத்மாவை அப்படியே கையில் எடுத்து கொடுப்பாரா என்று அங்குமிங்கும் அலைந்து திரிகிறார்கள்.

    அதனால்தான்ஆயிரமாயிரம் போலிஆன்மீக வியாபாரிகள் இவர்களை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

    முயற்சி செய்யாமல் ஒரு பைசா கூட கிடைக்காத இந்த உலகில் கிடைப்பதர்க்கரிய அரிதான் ஆத்மா ஞானத்தை அவ்வளவு எளிதில் எப்படி அடைய முடியும் என்று யாரும் கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. என்பதே உண்மை.

    TR Pattaabiraman

    ReplyDelete
    Replies
    1. V.S. Krishnan
      5:53 AM (57 minutes ago)

      to me
      If we pay attention to the thoughts that arise in our mind and enquire for whom the thoughts arise, the thoughts would vanish by itself. When there are no thoughts, there would be no mind and self realisation would dawn. But, as you said, people generally look for an easy path. But it is better that everyone makes efforts at self realisation but introspecting within and not looking at others.

      With regards

      Yours truly,

      V.S. Krishnan

      Delete
  4. கண்ணனைப்பற்றி அண்ணன் சொன்னதும், ஆண்டாள் சொன்னதும் அத்தனையும் அருமை. உண்மை.

    //வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் //

    சித்தம் தெளிந்தது. இன்ப ஊற்றெடுக்குது என் இதயத்திலே !

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா.

    ReplyDelete