Wednesday, January 15, 2014

இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?": (தொடர்ச்சி)

இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?": (தொடர்ச்சி)

ஸ்ரீராம். has left a new comment on your post "இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?": 

அருமை. மனைவியும் மகனும் இதயத்துக்குச் சொந்தமானவர்கள் என்ற வரி மட்டும் சேரவில்லை. உடலே என்னுடையதில்லை எனும்போது! மாயை அல்லது அவர்களும் வழிப்பயணத்தில் உடன் வந்தவர்கள் என்று சொல்லலாமோ..

நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை இன்று என்பதுதான் கையில் உள்ள வீணை என்பார் எனக்கு யோகா கற்றுக் கொடுத்த ஆசிரியர். (Present is the present given by God) பொதெமென்ற மனம் கொண்டவன்தான்  பெரிய பணக்காரன் என்பதை அன்னை தெரசா சொல்லியிருப்பதாக ஞாபகம்.


மனைவியும் மகனும் இதயத்திற்குச்  சொந்தமானவர்கள் என்ற வரிகள் மட்டும் சேரவில்லை என்று திரு ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார். 

அவரின் கருத்துக்கு இந்த எளியேனின் விளக்கம் 


ஒரு மனிதன் எல்லா பெண்களையும் விரும்புகிறான் 
அது காதலாகவோ, கவர்ச்சியாகவோ 
அல்லது ஏதாவதொரு பண்பாகவோ,
 அல்லது குணத்தாலோ  வெளிப்புறத்
 தோற்றத்தாலோ இருக்கலாம். 

அவர்களையெல்லாம் அவன் 
மனைவியாக ஏற்றுக்கொள்வது கிடையாது. 
அவன் இதயத்தில் எவள்  மீது 
காதல் அரும்புகிறதோ அவளைத்தான்
ன் வாழ்க்கை துணைவியாக 
ஏற்றுகொள்கிறான் என்பதே உண்மை.

 மற்றவர்களெல்லாம் அவன் மனதின் 
ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளத்தான்
பயன்படுகிறார்கள். 

அதுபோல்தான் அவன் மூலம் 
அந்த பெண்ணிற்கு பிறந்த மகன் மீது மட்டும்தான் 
அபரிமிதமான அன்பு/பாசம் வைக்கிறான்.
 மற்ற குழந்தைகள் மீது அல்ல 

அதனால்தான் மனைவியும் மகனும் 
இதயத்திற்குச்த்தான் சொந்தம் என்று 
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் 
எழுதிய ஆசிரியர் இந்த உண்மையை 
வெளிப்படுத்தியுள்ளார் 
என்பது இவனின் அபிப்ராயம். 

அடுத்ததாக "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது" 
தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் பொன்மொழி.
 இதற்கும் அன்னை தெரசாவிற்கும் 
எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை 
இவன் சுட்டிக் காட்ட விரும்புகிறான்.




பழமொழிகள் என்பது அரிய பெரிய கருத்துக்களை "சுருங்கச் சொல்லி விளங்க வைத்து நம் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ அறிவுறுத்துவது நம் தமிழ்மொழியில் உள்ள எண்ணற்ற சிறப்புகளில் ஒன்று.

அதனால்தான் முற்காலத்தில்  சிறுவர்களுக்கு 
அவைகளை பாடலாக இலவசமாக பயிற்றுவித்தார்கள் 

ஆயிரக்கணக்கில் ஏராளமான நன்னூல்கள் தமிழில் உள்ளன. 
அவைகளை படிப்பாரும் இல்லை பயிற்றுவிப்பாரும் இல்லை
ஆனால் கண்ட குப்பைகளை காசு கொடுத்து 
நம் மண்டையில் நிரப்பிக்கொண்டு
வாழ்நாள் முழுவதும்  அல்லல்படுகிறோம் 

அன்னை தமிழுக்கு 
ஏற்றம்தரும் நாள் என்று வருமோ?



முருகப்பெருமான் அருளியதெய்வத்  தமிழ் 
ஆழ்வார்களும்,,நாயன்மார்களும், திருவள்ளுவரும், மற்றும் ஆயிரமாயிரம் புலவர்கள் போற்றி புகழ்ந்து நூல்களை உலகத்திற்கு அருளித் தந்த தமிழ் இன்று தகுதி அற்றவர்களின் நாவில் சிக்கி படும் பாட்டைக்  காணும்போது உள்ளத்தில் வேதனை பொங்குகிறது. 


  நம் வாழ்வு உண்மையிலே சிறக்க வேண்டுமென்றால் 
அவள்தான் நம் அகக்கண்ணை அருள் கூர்ந்து திறக்கவேண்டும் 

அந்நாள்  விரைவில் மலர 
தமிழ் மீது பற்றுக்கொண்டோர் 
பிரார்த்தனை செய்வோமாக 



14 comments:

  1. உங்கள் பாணியில் விளக்கம் அருமை ஐயா... நன்றி... தொடர்கிறேன் அடுத்த பகிர்வை...

    ReplyDelete
  2. தமிழில் 'போதுமென்ற மனமே மொழி' இருக்கிறது என்பது தெரியும். படித்திருக்கிறேன். இது அன்னை தெரசா சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. உங்கள் பதிவைப் படித்தபோது 'சட்'டென நினைவுக்கு வந்ததைச் சொன்னேன்! :)))

    மரணத்துக்குப் பின் அழைத்துப்போக வரும் கடவுள் அப்படித்தானே பேசியிருப்பார் என்று எண்ணம் எனக்குத் தோன்றியது. இறந்தபிறகு உடலே அவனுக்குச் சொந்தமில்லை. ஆன்மா என்பது பரமாத்மாவின் ஒரு துளி ஆகும்போது சொந்தங்கள் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தமில்லையே என்று எண்ணியே அந்த வார்த்தையைச் சொன்னேன்! :))


    விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஸார். உங்கள் கால் குணமாகி விட்டதா? தேவலாமா?

    ReplyDelete
    Replies
    1. // உங்கள் கால் குணமாகி விட்டதா? தேவலாமா?//

      ஒருக்கால், அவர் கால், குணமாகியிருக்கலாம். ;)

      Delete
    2. இறைவன் அருளால் .காலில் பட்ட காயம் குணமாகிக்கொண்டு வருவதாக நேற்று பரிசோதித்த மருத்துவர் கூறினார் வலி சற்று குறைந்துள்ளது அடுத்த வாரம்தான் நிற்க இயலுமா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். எல்லாம் அவன் செயல். இவனை 16 நாட்களாக படுக்கையில் முடக்கி போட்டதும் ஏதோ ஒருகாரண த்திற்காகத்தான் தான் என்று இவனுக்கு தெரியும்..உங்கள் அன்பு விரைவில் இவனைக் குணமாக்கி எழுந்து நிற்க வைத்து நடக்கவும் வைத்துவிடும்.

      Delete
    3. ஒரு ஜீவன் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சுவாமி சிவானந்தர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் .அதைப் படியுங்கள் விளக்கம் கிடைக்கும் ஸ்ரீராம். .

      Delete
    4. மரணத்துக்குப்பின் சுவாமி சித்பவானந்தர் எழுதியதும், ஒரு யோகியின் சுயசரிதையும் படித்திருக்கிறேன். சுவாமி சிவானந்தர் கிடைத்தால் அவசியம் படிக்கிறேன் ஸார்.

      Delete
    5. யோகியின் சுய சரிதை அவரின் உண்மை அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது
      இவனும் படித்திருக்கிறான்.
      மற்றவர்கள் எழுதியது சாத்திர நூல்களின் அடிப்படையில் எழுதியது.தாயின் வயிற்றில் கருவாக உருவான முதலே
      மரணம் நம்மை ஒவ்வொரு கணமும் துரத்திக்கொண்டேதான் இருக்கிறது .யாராவது அதன் நினைவு படுத்திவிட்டால்தான் அது நம்மை பயமுறுத்துகிறது.
      இல்லாவிடில் அது மீண்டும் பிறக்கும்வரை ஒரு உறக்கம். அவ்வளவுதான்.
      புதிய உடலில் மீண்டும் எழப்போகிறோம்
      அது விளங்க மனிதனா என்பதை நம்முடைய கடந்த கால செய்கைகள் முடிவு செய்யும். .

      Delete
    6. Pl. read விளங்க as விலங்கா அல்லது மனிதனா

      Delete
  3. //ஒரு மனிதன் எல்லாப் பெண்களையும் விரும்புகிறான்.//

    ஒரு மனிதன் எல்லாப் பெண்களையும் விரும்புவது இல்லை. இதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.

    //அது காதலாகவோ, கவர்ச்சியாகவோ //

    காதலாவது கத்தரிக்காயாவது; கவர்ச்சியாவது கண்றாவியாவது !

    //ஏதாவதொரு பண்பாகவோ, அல்லது குணத்தாலோ//

    இது சொன்னீங்களே OK OK OK OK ஒப்புக்கொள்கிறேன். அதே அதே !

    // வெளிப்புறத் தோற்றத்தாலோ இருக்கலாம் //

    இதுகூட ஒரு அறியாமையின் செயல் மட்டுமே, என்பேன். வெளிப்புறத் தோற்றம் என்பது ஓர் மாயை மட்டுமே.

    என்னதான் வீடு முழுவதும் வெள்ளையடித்து, பெயிண்ட் அடித்து ஜகத்ஜோதியாக இருப்பினும், அடுப்படி என்று ஒன்று இருக்குமே அது கொஞ்சம் கரிபிடித்து அழுக்காகவும், அசிங்கமாகவும், வாடை அடிப்பதாகத்தானே இருக்கும்????? ;)

    என்னவோ போங்கோ, ஏதேதோ எழுதுகிறீர்கள். இவனாலும் சும்மா இருக்க முடிவதே இல்லை. ஏதாவது பதில் எழுத வேண்டி ஆகிறது.

    ’ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்’ சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. அதனால் இத்துடன் அடியேன் எஸ்கேப். ;)

    ReplyDelete
    Replies
    1. எதை எழுதினாலும் பலமுறை சிந்தித்துதான் எழுதுகிறேன். எடுத்தேன் கவுத்தேன் என்று எழுதுவதில்லை. முடிந்த அளவிற்கு இவன் புரிந்துகொண்டதை பதிலாக அளிக்கிறேன். ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இவன்எதற்கும் கவலைப்படுவதில்லை.
      இந்த கட்டுரை என் நண்பர் ஆங்கிலத்தில் அனுப்பியதன் தமிழாக்கம் மட்டுமே செய்தது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் எழுத்துகள் உங்கள் உள்ளத்தில் உள்ளதை காட்டிக்கொடுத்துவிடும் என்பதை மறவாதீர்கள். உங்கள் எழுத்து என்ன சொல்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். .இவ்வளவு காலம் கடந்த பிறகு கடந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தை இழக்க வேண்டாம் என்பதே இந்த கட்டுரையின்
      தலையாய நோக்கம் என்பதை புரிந்து கொண்டால் சரி.

      Delete
    2. என்னதான் வீடு முழுவதும் வெள்ளையடித்து, பெயிண்ட் அடித்து ஜகத்ஜோதியாக இருப்பினும், அடுப்படி என்று ஒன்று இருக்குமே அது கொஞ்சம் கரிபிடித்து அழுக்காகவும், அசிங்கமாகவும், வாடை அடிப்பதாகத்தானே இருக்கும்????? ;)

      எந்த காலத்தில் இருக்கிறீர்?

      அதெல்லாம் அந்தக்காலம். விறகு அடுப்பும், கும்மிட்டி அடுப்பும், கரிஅடுப்பும் பயன்படுத்திய காலம். வீடு முழுவதும் புகையும் , கரியுமாய் இருக்கும்.
      இப்போது வாயு, இண்டக்க்ஷன் , மின் அடுப்புகள் வந்துவிட்டன.யாரும் எண்ணையை பயன்படுத்துவதே கிடையாது. சமையலறை பளிச்சென்று இருக்கிறது. உங்கள் வீட்டில் சரியாக பராமரிக்காததை வைத்து எல்லோரையும் எடை போடாதீர்.

      Delete
    3. //கடந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தை இழக்க வேண்டாம் என்பதே இந்த கட்டுரையின் தலையாய நோக்கம் என்பதை புரிந்து கொண்டால் சரி. //

      சரி அண்ணா ! கோச்சுக்காதீங்கோ அண்ணா. இவனின் படுத்தல் இன்னும் 4-5 நாட்களுக்கு மட்டுமே தானே அண்ணா. அதன்பின் ஓரிரு மாதங்களுக்கு ராமநாம ஜபம் மட்டும் தானே அண்ணா. தயவுசெய்து இவனைப் பொறுத்துக்கொள்ளுங்கள் அண்ணா. எல்லாம் நல்லபடியாக ஆசீர்வதியுங்கோ அண்ணா.

      ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் !

      அன்புடன் கோபு

      Delete
    4. புரிந்து கொண்டால் சரி.

      Delete