Saturday, January 18, 2014

ஆமையும் நாமும்


ஆமையும் நாமும் 


ஒரு ஆமை
இந்த உலகில் பிறந்தது

அதற்க்கு ஒரு தலை  நான்கு கால்
மற்ற மிருகங்களுக்கு இல்லாத
கடினமான ஓடு அதன் பாதுகாப்பிற்காக
இறைவன் படைத்துள்ளான்.

அதனால் அதற்க்கு
 தலைகால் புரியவில்லை
கடலில் நீந்திக் கொண்டு சுகமாய்



காலத்தைக் கழிக்காமல்
கடலை விட்டு
கரைக்கு வந்தது.



தரைக்கு வந்த மகிழ்ச்சியில் தன்னை
சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்
கவனிக்க மறந்தது. .

ஆதவன் உதிக்கத்
தொடங்கினான் வெப்பம் ஏறியது.
கடலைத்தாண்டி சற்று தள்ளி
வந்துவிட்டதனால்  உடனடியாக
கடலுக்கு; செல்லமுடியவில்லை

கடற்கரையில் தள்ளாடி
திரிந்துகொண்டிருந்த
ஆமையை ஆமையை வடை போட்டு
தின்பவர்கள் கண்டார்கள்.



அதை பிடித்துக் கொண்டு போய்
ஒரு அகண்ட பாத்திரத்தில்
நிறைய தண்ணீர் விட்டு அதில்
ஆமையைப் போட்டார்கள்



வெயிலில் அலைந்து திரிந்த
ஆமை குளிர்ந்த நீரில் போட்டதும்
அந்த பாத்திரத்தில் மகிழ்ச்சியாக சுற்றி சுற்றி வந்தது.

ஆமையை பிடித்தவர்கள்
அதை சமைப்பதற்காக அந்த
பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து
நெருப்பு மூட்டினார்கள்.

பாத்திரத்தில் இருந்த குளிர்ந்த நீர் சிறிது
சிறிதாக சூடேற ஆரம்பித்தது
பிறகு கொதிக்கத் தொடங்கியது.

பிறகுதாம் ஆமைக்கு தாம் பெரும் ஆபத்தில்
சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

சூடு தாங்காமல் அலறியது
 யார் காதிலும் விழவில்லை
சூட்டில் வெந்து மாண்டது .

அதை தண்ணீருக்குள் போட்டவர்களின்
வயிற்ருக்குள் அதன் உடல் சென்று விட்டது.

கொடிய துன்ப நினைவுகளுடன்
அதன் ஆத்மா விண்ணில் சுற்றிகொண்டிருக்கும்
அடுத்த பிறவி வரும் வரை.

இந்த கதையிலிருந்து ஒரு
உண்மையை தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆமை என்பது வேறு யாருமல்ல
 நம்மைப்போன்ற ஒரு ஜீவன்.

நாலு கால் ஒரு தலை என்பது
ஐம்புலன்களைக்குறிக்கிறது.

அதன் மீது உள்ள ஓடு
அதன் புத்தியைக் குறிக்கிறது.

அது கடலில் இருக்கும்வரை அது
 பாதுகாப்பாக இருக்கிறது
(ஆனால் இந்த உலகில் பிறவி எடுத்தால்
எப்படியும் ஏதாவது ஒரு வகையில் மரணத்தை தழுவித்தான் ஆகவேண்டும்  என்பது விதி என்பது வேறு விஷயம்)

அதை விட்டு கரைக்கு வந்ததும்
புலன்களின் கட்டுப்பாட்டை இழந்ததால்
ஆபத்தில் சிக்கி கொண்டு தன் உயிரையும் இழந்தது.
 தன்  மீது உள்ள ஓட்டிற்குள் அது நான்கு கால்களையும்,
தலையையும் இழுத்துக்கொண்டிருந்தால்.
 அது வெப்பத்தின் தாக்கத்திலிருந்து
தன்னை காத்துகொண்டு இருக்கலாம்.
வேட்டையாடுபவர் கண்களிலிருந்தும் தப்பியிருக்கலாம்..

மனித ஜீவர்களும் அப்படியே .
புலன்களின் கட்டுப்பாட்டை இழந்தால்
ஆபத்தில் சிக்கி உயிரை இழக்கத்தான். நேரிடும்

.நம் அலறலை யாரும் கேட்கமாட்டார்கள்.
அதனால்தான் புலன்களை கட்டுப்பாட்டில் வைத்து
 நம் அறிவைப் பயன்படுத்தி
அழியும் இந்த உடலைக் கொண்டே
நமக்குள் இருக்கும் அழியா ஆன்மாவை அறிந்து
உணர்ந்து  தெளிந்து மீண்டும்
இவ்வுலகில் பிறந்து அவதிப்படாமல்
இருக்கும் வழியைக் கண்டு கொள்ளவேண்டும்.



அதற்க்கு நம்மையெல்லாம் காக்கின்ற பாற்கடலில் பள்ளி கொண்ட  பரந்தாமனை வணங்கி மீண்டும்
பிறவிக் கடலில் விழாமல் 
தப்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.

சிறிது நேரமே இன்பம் தரும்
அற்ப புலனின்பங்களை நாடினால்
கொடிய நோய்கள், துக்கம், துயரம்,
மரணம் போன்றவற்றை மீண்டும் மீண்டும் தொடர்ந்து
சந்தித்துக் கொண்டிருப்பதை
தவிர வேறு வழியில்லை. 

படங்கள்-கூகிள்- நன்றி 

7 comments:

  1. நல்லதொரு உவமையுடன் அழகாய் விளக்கினீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. ஒப்பிட்ட விதமும், சொன்ன விதமும் மிகவும் அருமை... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமையான உவமைகளுடன் ஓர் அசத்தலான நீதிக்கதை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. தங்களின் பதிவுகள் மிகவும் புனிதமானவை. அவற்றில் அசைவம் பற்றிய செய்திகளோ படங்களோ தயவுசெய்து இருக்கக்கூடாது என மிகத்தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete