Wednesday, January 15, 2014

இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?


இறக்கும்போது 
என்ன கொண்டு செல்கிறோம்?

 ஒரு மனிதன் இறந்துவிட்டான் 

அதை  அவன் உணர்ந்தவுடன்
இறைவன் அவனை நோக்கி
கையில் ஒரு சூட் கேசுடன் வருவதைக் கண்டான்



இறைவன் சொன்னார்
,புறப்படு நீ செல்லும் நேரம் வந்துவிட்டது என்றார்.

ஆச்சரியப்பட்ட மனிதன் இப்போழுதேவா?
இவ்வளவு சீக்கிரமா ?எனக்கு இங்கு இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கின்றன என்றான்

இறைவன் சொன்னார்
 என்னால் உனக்கு உதவ முடியாது. நீ கிளம்பும் நேரம் வந்துவிட்டது ஆகையால் கிளம்பு என்றார்.

அது சரி , உங்கள் கையில்
ஒரு சூட் கேஸ் வைத்திருக்கிறீர்களே
அதில் என்ன இருக்கிறது என்றான்

இறைவன் பதில் சொன்னார்.
அதில் உன்னுடைய உடைமைகள் எல்லாம் இருக்கிறது.என்றார்

என்னுடைய உடைமைகளா ? என்னுடைய துணிமணிகள்,என்னுடைய பொருட்கள், நான் சம்பாதித்த பணம்  ஆகியவைகள்தானே ? என்றான் மனிதன்

இறைவன் சொன்னார் :நீ சொன்னவைகள் எல்லாம் உன்னுடையவைகள்அல்ல அவைகள் இந்த பூமிக்கு சொந்தம்

அப்படி இல்லை என்றால் என்னுடைய நினைவுகளா என்று கேட்டான்
இறைவன் பதிலளித்தார்:அவைகள் உன்னுடையதல்ல .அவைகள் எல்லாம் காலத்திற்கு சொந்தம்

அப்படியானால் அவைகள் என்னுடைய திறமைகளா? என்று கேட்டான் மனிதன்

அவைகளும் உன்னுடையதல்ல அவைகள் சூழ்நிலைகளுக்கு சொந்தம் என்றார் இறைவன்

அப்படியானால் அவர்கள் என்னுடைய நண்பர்களும் உறவினர்களுமா என்றான் மனிதன்

மன்னிக்க வேண்டும்  அவர்களும் உன்னுடையதல்ல .அவர்கள் உன் வாழ்க்கைப் பாதையில் வந்து போனவர்கள்

என்னுடைய மனைவியும், மகனுமா என்று கேட்டான் அவன்

இல்லை இல்லை அவர்கள் உனக்கு சொந்தமானவர்கள் அல்லர். அவர்கள் உன் இதயத்திற்கு சொந்தமானவர்கள் என்றார் இறைவன்

அதில் எனது உடலா? என்றான் அவன்

அதற்க்கு இறைவன் அதுஎன்றுமே   உனதல்ல
அது அணுக்களுக்கு சொந்தம் என்றான்

அது என்னுடைய ஆத்மா தானே என்றான் அவன்

இறைவன் சொன்னார். முட்டாளே
அதுவும் உனக்கு சொந்தம் கிட்டையாது
அது எனக்குத்தான் சொந்தம் என்றார்

பயத்துடன் இறைவனிடமிருந்து சூட் கேசை வாங்கி திறந்து பார்த்தான்,அதற்குள் ஒன்றுமே  இல்லை காலியாக இருந்தது. 

கண்களில் நீர் வழிய இறைவனிடம் கேட்டான்.
இறைவா எனக்கென்று ஒன்றுமே கிடையாதா என்றான் 

இறைவன் பதில் சொன்னார். எல்லோரும் கேட்டுக்கொள்ளுங்கள் 

நீ இந்த உலகில் வாழ்ந்த
ஒவ்வொரு கணம் மட்டும்தான் உனக்கு சொந்தம்

வாழ்க்கை என்பது ஒரு கண் சிமிட்டும் நேரம்தான் .
அது மட்டும்தான் உனக்குச் சொந்தம் .

அதனால் உனக்கு கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும்  மகிழ்ச்சியாக செலவிடு

தலைக் கனம் கொள்ளாதே ,
நீயும் மகிழ்ச்சியாக இரு.
மற்றவரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு .
 எந்த சக்தியும் அதை தடுக்கும் வகையில் நடந்து கொள்ளாதே
,
இந்த கணமே வாழப் பழகிக்கொள்
இந்த கணத்தை  வீணடித்துவிட்டு
எதிர்காலத்தில் நன்றாக வாழலாம்
என்று மனக்கோட்டை கட்டாதே .
என்னென்றால் அடுத்த கணம்
உன்னுடையதாக இல்லாமல் போகலாம்
என்பதை நினைவில் கொள் 

இப்போதே வாழத் தலைப்படு
வாழ்க்கை வாழ்வதற்கே

இவ்வுலகில் பாடுபட்டு சேர்க்கும்
எந்த பொருளும் உன் உயிர் இந்த
உடலை விட்டுப் போகும்போது
உன்னுடன் என்றும் வராது என்பதைப் புரிந்துகொள்வாயாக
என்று இறைவன் மறைந்துபோனார்.

( ஒரு நண்பர் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பியதின் தமிழாக்கம்)

8 comments:

  1. //அடுத்த கணம் உன்னுடையதாக இல்லாமல் போகலாம் என்பதை நினைவில் கொள். இப்போதே வாழத் தலைப்படு. வாழ்க்கை வாழ்வதற்கே. இவ்வுலகில் பாடுபட்டு சேர்க்கும் எந்த பொருளும் உன் உயிர் இந்த உடலை விட்டுப் போகும்போது உன்னுடன் என்றும் வராது//

    உண்மை. அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. //இப்போதே வாழத் தலைப்படு. வாழ்க்கை வாழ்வதற்கே.//

      இருக்கும்வரை சந்தோஷமாக வாழ ஓரளவாவது பணம் வேண்டுமே, அண்ணா. ;)))))

      Delete
    2. சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை
      அது நம் மனத்தின் உள்ளேதான் உள்ளது
      என்பதை புரிந்து கொள்ளாதவரை
      உம்மைப் போன்றவர்களுக்கு
      அதை வெளியே பொருட்களில்
      தேடி அலைந்து துன்பப்படுவதை
      தவிர்க்கமுடியாது

      மருத்துவமனையில் உயிருக்குப்
      போராடிக் கொண்டிருக்கும்
      ஒரு கோ டீச்வரநோயாளியைப் பார்த்து
      மருத்துவர் ,என்னால் ஆனதை செய்துவிட்டேன்
      இனி இறைவன் விட்ட வழி என்கிறார்.

      அப்போது அவரிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் சந்தோஷத்தைக் கொடுக்குமா? என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்

      அதுபோல் ஏராளமான செல்வம் உள்ளது, இளமை உள்ளது எதையும் அனுபவிக்க முடியாமல் நோய் வந்துவிட்டது.

      அப்போது அவரிடம் உள்ள செல்வம் சந்தோஷத்தைக் கொடுக்குமா? என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்

      இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் வேண்டும்.
      திருப்தி இல்லாதவனுக்கு சந்தோஷம் என்பதே அவன் வாழ்நாளில் கிடைக்காது

      Delete
  2. அருமை. மனைவியும் மகனும் இதயத்துக்குச் சொந்தமானவர்கள் என்ற வரி மட்டும் சேரவில்லை. உடலே என்னுடையதில்லை எனும்போது! மாயை அல்லது அவர்களும் வழிப்பயணத்தில் உடன் வந்தவர்கள் என்று சொல்லலாமோ..

    நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை இன்று என்பதுதான் கையில் உள்ள வீணை என்பார் எனக்கு யோகா கற்றுக் கொடுத்த ஆசிரியர். (Present is the present given by God) பொதெமென்ற மனம் கொடவன்தான் பெரிய பணக்காரன் என்பதை அன்னை தெரசா சொல்லியிருப்பதாக ஞாபகம்.

    ReplyDelete
  3. காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - பட்டினத்தார்

    றப்பான பகிர்வு ஐயா... நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. Dr Srinivasan
    Jan 15 (3 days ago)

    to me
    Dear sir,

    Enjoyed your translation which vividly brought out the essence of LIFE.

    Shall be thankful if you can send me the English version to enable me to share with my non-Tamil friends.

    Regards

    ReplyDelete