Sunday, January 26, 2014

கடவுள் எங்கிருக்கிறார்?

கடவுள் எங்கிருக்கிறார்?

கடவுள் எல்லா
இடத்திலும் நிறைந்திருக்கிறார்



அப்படி இருந்தும் அவரை நாம் ஏன்
காண முடியவில்லை ?

சிவவாக்கியர் நாதன்
நம் உள்ளிருககிறார்  என்கிறார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இறைவன்
 மாசற்றார் மனதில் உள்ளான் என்று சொல்கிறார்,

விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லா
உயிரின் உள்ளும் வாசுதேவனாக
இறைவன் இருக்கிறான்.என்று சொல்லுகிறது

பிரகலாதன் தூணிலும் இருக்கிறான்,
துரும்பிலும் இருக்கிறான், உன்னிலும் இருக்கிறான்,
என்னிலிலும் இருக்கிறான். ஒவ்வொரு
அணுவிலும் இருக்கிறான் என்கிறான்.



எல்லா இடத்திலும்இறைவன்
நிறைந்து  இருப்பதால் எங்கும்
அவனை தேடி அலையவேண்டியதில்லை

அதுவும் நமக்குள்ளே அவன்
இருப்பதால் வெளியே கூட அவனை
தேடி அலைய வேண்டியதில்லை

அப்படி இருக்க அவன்
எளிதில் அகப்படுவதில்லை.

எளிதில் என்ன ?
என்ன முயற்சி செய்தாலும்
அகப்படுவதேயில்லை.

எல்லாவற்றிற்கும் முதல் காரணம்
இறைவன் எப்படி இருப்பான் என்று
 யாருக்கும் தெரியாது.

கண்டவர்கள் உண்மையை
தெளிவாக சொல்லவில்லை.

அப்படி சொன்னவர்களும் அவரவர்
புரிந்துகொண்ட வகையில்
எழுதிவிட்டுப் போய்விட்டார்கள்.

நாம் நம்முடைய முயற்சியில்
வெற்றி அடையாமைக்கு காரணம்
அவநம்பிக்கை தான் காரணம்.

அவநம்பிக்கைக்கு காரணம்
நாம் நம்முடைய  பொருளை
திருடிய திருடனை
வழிகாட்டியாகக் கொண்டு
அவன் பின்னால் போய்க்
கொண்டிருப்பதனால்தான் .

எப்படி நமக்கு திருட்டுக்
கொடுத்த பொருள் கிடைக்கும்?
என்றும் கிடைக்காது.

அந்த திருடன்
வேறு யாருமல்ல
நம்முடைய மனம்தான்.

அவன்தான் நமக்கு போகாத ஊருக்கு
வழிகாட்டிக்கொண்டு நம்மை குழப்பிக்
கொண்டிருப்பதால்தான். நாம்
தெளிவில்லாமல் இருக்கிறோம்.

எனவே முதலின் நாம் செய்ய வேண்டியது
அந்த திருடனின் பேச்சைக் கேட்கக்கூடாது.

அவனை முதலில்
விரட்டி அடிக்க வேண்டும்.

எப்படி ?
அவன் காட்டும்
வழியில் போகக்கூடாது.



பகவான் ரமணர் அறிவுறுத்தியுள்ளபடி
நம் மனதில் தோன்றும் ஒவ்வொரு
எண்ணங்களையும் விசாரித்து தெளியவேண்டும்.

தினமும் இந்த
விசாரணை நடைபெறவேண்டும்.

மனதில் உள்ள எண்ணங்கள் அழிந்தால் தான்
ஆன்மாவை மறைத்திருக்கும்  திரை விலகும்
நிலவை மறைத்த மேகம் அகன்றதும்
நிலவு ஒளி வீசுவதுபோல்
ஆன்ம ஒளி வீசும்.

7 comments:

  1. அந்த திருடன் வேறு யாருமல்ல, நம்முடைய மனம்தான்....

    அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனதை மாடு என்கிறார் ஒரு சித்தர்

      மற்றொரு சித்தரோ அதை பேய் என்கிறார்.

      மனம் என்பது ஒரு மாபெரும் சக்தி என்கிறார் ஒருவர்

      மனம் ஒரு குரங்கு என்கிறார்கள் சில பேர்கள்.

      இப்படிதான் அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக காட்சி கொடுத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

      Delete
  2. மாசற்ற மனதில் இறைவன் இருக்கிறார்
    நன்றிஐயா

    ReplyDelete
    Replies
    1. அவரைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.

      Delete
  3. இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கவலையின்றி நம் கடமையை (நல்லபடி) நாம் செய்து கொண்டிருந்தால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. கடவுள் கிடக்கட்டும்
      கடமைகள் கிடக்கட்டும்.
      கவலையில்லாதவன் எவனாவது இருக்கிறானோ இந்தப் பாரினில் ?

      Delete
  4. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
    தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete