Thursday, January 30, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !(part-2)







   
குறை ஒன்று (ம் ) இல்லை 
மறை மூர்த்தி கண்ணா ! (பகுதி-2)




வாழ்க்கையில் எவ்வளவோ
சோதனைகளை சந்தித்தபோதும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.பொதுவாக
தன்னுடைய பாதிப்புகளை
வெளிப்படுத்தியது மிக அரிதே
என்று மாத்ருபூமி இதழ் ஆசிரியர்
திரு. கே பி. கேசவமேனன் தெரிவிக்கிறார்.

அவர் குறை ஒன்றும் இல்லை என்ற பாடலை இயற்றியபோது என்ன  நினைத்து அதை எழுதியிருப்பார். என்று பார்க்கும்போது ,அதை எம் எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தெய்வீகக் குரலில் கேட்கும்போது அவர் பாடுவதற்காகவே அந்த பாடலை இயற்றி இருப்பார்  என்றே தோன்றுகிறது.

அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பாடிய பிரார்த்தனைப் பாடல்களும், தேசிய கீதங்களும் அனைவரையும் அன்று மெய் மறக்கச் செய்தன. இன்றும் அப்படியே. கேட்பவர்களின் மனதை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பதில் யாருக்கும் மறு கருத்து  இருக்க நியாயமில்லை.

வைணவ இலக்கியங்களில் அவருக்கு உள்ள புலமை



 ராமாயணம், மற்றும்



மகாபாரதம் என்னும்  நூலாகவெளிவந்தது

வைணவ சித்தாந்தத்தில் சரணாகதி தத்துவம் முடிவான் தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறை ஒன்றும் இல்லை என்ற பாடலில் தொகுத்து கொடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

அனைவரும் அதைபாடி பொருள் உணர்ந்து கலங்கிய மனம் தெளிவு பெரும்  வகையில் வரிகள் அமைந்துள்ளதுதான் இன்று அனைவரும் பக்தியுடன் பாடி பரவசம் அடைவதற்கு உதவியாக உள்ளது



பண்டித நேரு ராஜாஜி அவர்களைப் பற்றி கூறுகையில் அவர் ஒளி  வீசும் தெளிவான அறிவினைக் கொண்டவர், தன்னலமற்ற  தியாகி, எந்த பிரச்சினைகளையும் தன்  கூர்ந்த அறிவினால்  ஆராய்ந்து தெளிவான விளக்கும் ஆற்றலைக் கொண்ட அவர் சுதந்திர இயக்கத்திற்கு ஒரு சொத்தாக விளங்கியவர் என்று போற்றுகிறார்.

 

மகாத்மா காந்திக்கு பல விதங்களில் நல ஆலோசனைகளை கூறியவர் ராஜாஜி என்று ஹிரேன் முகர்ஜி தெரிவிக்கிறார்.



மூதறிஞர் ராஜாஜியைப் போல் வாழ்வில்
தொடர்ந்து துன்பங்களையும் சோகங்களையும் அனுபவித்தும் நிலை குலையாமல் நின்றவர்கள் வெகு சிலரே.

இன்று ஒரு சிறிய ஏமாற்றத்தைக் கூட தாங்கும் மன உறுதி இல்லாமல் தற்கொலைக்கு முயலும் கோழைகள் அவரின் வாழ்க்கை  வரலாற்றைப் படித்தால் நிச்சயம் மன உறுதி பெறுவது திண்ணம்.

அவருடைய வாழ்க்கை முழுவதும்,துன்பங்களும் துயரங்களும் நிரம்பியது. இருந்தும் அவர் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நாட்டின் விடுதலைக்காக  அர்ப்பணித்துக்கொண்டார் என்றால் அவருடைய மன உறுதியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன அவர் வாழ்வில் நடந்தது ?

(இன்னும் வரும்)

படங்கள்-நன்றி-கூகிள்





3 comments: