Sunday, August 12, 2012

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி 

சினம் என்ற உணர்ச்சி இன்று உலகில்
அனைவரிடமும் மிகையாகவே காணப்படுகிறது

தனி மனிதனிடம் காணப்படும்சினம் 
அவன் வாழ்வை அழிக்கிறது
அவன் ஆரோக்கியத்தை அழிக்கிறது 
அவன் குடும்பத்தை அழிக்கிறது 

மற்ற மனிதர்களால் தூண்டிவிடப்பட்ட சினம்
அவன் வாழும் சமூகத்தையே அழிக்கிறது

ஒரு சிலையை வைக்க போராட்டம்
சிலர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சிலவிஷமிகள் சிலையை உடைத்தால்அதற்க்கு போராட்டம்
இதனால் பொது சொத்துக்களுக்கு சேதம் பொதுமக்களுக்கு பாதிப்பு
பல உயிரிழப்புகள்

வதந்திகளால் 
ஓரிடத்தில்தொடங்கும் போராட்டம்
நாடு முழுவதும் பரவும்
ஊடகங்களின் உதவியினால் 

மதவெறி சாதி வெறிஇரண்டும் இன்று
இந்தநாட்டை நாசபடுதிகொண்டு வருகின்றன 
ஆளும் வர்க்கமும் அரசியல் கட்சிகளும் 
தங்கள் சுய லாபத்திற்காகஇந்த தீயை 
அணையாமல் காத்து தங்களை வள ப்படுதிகொள்ளவும்  வலுப்படுதிகொள்ளவும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருகின்றன

இதனால்வீட்டினிலும் அமைதியில்லை 
நாட்டினிலும் அமைதியில்லை
உலகெங்கிலும் அமைதியில்லை 

மக்களிடம் சிந்திக்கும்திறன் மங்கிவிட்டது 
விட்டுக்கொடுத்து வாழும் போக்கு அருகிவிட்டது
சுயநலம் பெருகிவிட்டது 

இந்நிலை மாறி மக்களின் மனங்களின்
 நல்ல சிந்தனைகள் துளிர்விட்டு பெருகி
உலகில் அமைதியும் ஆனந்தமும் பெருக
இறைவன் அருள் செய்ய வேண்டும் 


2 comments:

  1. இறைவன் அருள் புரிவான்

    ReplyDelete
  2. சினம் தன்னையே கொன்று விடும் என்பதை அறிய வேண்டும்...

    நல்ல கருத்துக்கள்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    ReplyDelete