Tuesday, August 28, 2012

ஆன்மிகம் என்னும் பல்பொருள் அங்காடி

ஆன்மிகம் என்னும் பல்பொருள் அங்காடியில் 
லட்சகணக்கான பொருட்கள் கிடைக்கின்றன
சில பொருட்கள் எல்லோருக்கும் பயனாக உள்ளது 
சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பயனளிக்கும்.
சில ஒரு கால கட்டத்தில் பயனளிக்கும் .பிறகு பயனளிக்காது.
சில என்றும் யாருக்கும் பயன்படாது.

மனம் உடையவன் மனிதன்.
மனதின் துணை கொண்டுதான் 
அவன் இந்த உலகத்தோடு தொடர்பு கொள்கிறான்.
மனதின் துணை இல்லாவிடில் அவனுக்கு எண்ணங்களோ 
அதன் விரிவாக்கமான செயல்களோ 
இந்த உலகமோ காலமோ இல்லை. 

மனம் புறத்தே வரும்போது புற உலகும் 
உறக்கத்தில் கனவுலகும் தோன்றுகின்றன. 
இரண்டும் வெறும் மாய தோற்றங்களே. 
ஆழ்ந்த உறக்கதிலோ,மயக்க நிலையிலோ ஏதும் இல்லை. 
இந்த இரண்டு நிலைகளையும் 
ஒரு வஸ்து நமக்குள் இருந்துகொண்டு பார்த்து கொண்டிருக்கிறது .
அதுதான் நமக்கு இரண்டு நிலைகளையும் உணர்த்துகிறது.
 இந்த இரண்டு நிலைகளையும் நாம் கடக்கும் வரை 
நமக்கு இன்பதுன்பங்களும் பிறப்பிறப்புக்களும்  இருக்கும் 
.
மனம் எண்ணங்கள் இல்லாமல் காலியாக வேண்டும் 
அதுவரை விமோசனம் இல்லை. 
அனைத்து மார்கங்களும் காட்டும் வழிகள் எல்லாம் 
தற்காலிகமானவையே. 

ஒவ்வொரு குருவாக போய்கொண்டிருந்தால் 
ஒரு பயனும் இல்லை.ஏனெனில் பொதுவாக 
ஒரு குரு சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை .
அவரவர்கள் தாங்கள் சென்ற/செல்லும் பாதைதான் சரியானது 
என்று கூறிவிட்டு அவர்கள் காலம் முடிந்தவுடன்.  
இவ்வுலகைவிட்டு சென்றுவிடுகின்றனர்
எனவே  உண்மையை உண்மையாக உணர்ந்த 
உண்மையான குருவை கண்டுபிடித்து.
நம் அகந்தையை விட்டு ஞானத்தை தேடவேண்டும்.
எதுவும் சுலபமாக  கிடைக்காது .













புத்தகங்கள் மூலம் ஒன்றும் கிடைக்காது.
புத்தகம் வெளியிட்டவர்களுக்கு காசு வேண்டுமானாலும் கிடைக்கலாம். 

தனக்குள்ளே உறையும் கடவுளை
தனக்குள்ளே தேடினால்தான் அவன் கிடைப்பான். 
அதற்க்கு வாழ்நாள்முழுவதும் முயற்சி தேவை.
அதற்க்கு நம்மை சுற்றி உள்ளோர் அனுமதிக்க மாட்டார்கள்.
அதையும் தாண்டி உண்மையை அறிய 
கடுமையான மன உறுதி மற்றும் நம்பிக்கை தேவை.

2 comments:

  1. நல்ல கருத்துக்கள்...

    /// புத்தகங்கள் மூலம் ஒன்றும் கிடைக்காது. ///

    இந்தக் கருத்துக்களுக்கு என்னைப் பொறுத்தவரை :

    புத்தகங்கள் இல்லையெனில் எதுவும் அறிந்து கொள்ள முடியாது... எதுவுமே இல்லை எனலாம்...

    வாழ்வின் கடைசி வரை துணை வருவதும் நல்ல புத்தகங்கள் தான்... இன்னும் நிறைய சொல்லலாம்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி திண்டுக்கல் கற்கண்டு அவர்களே

    புத்தகங்கள் அதை எழுதியவரின் அனுபவங்களை தெரிந்துகொள்ள உதவலாம்
    ஆனால் அந்த தகவல்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதை நாம்தான் நம் அனுபவத்தின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்

    ஆன்மிகம் என்னும் தேடலில் ஒரு கட்டத்தில் புத்தகங்கள் படிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்
    .
    எல்லா ஞானிகளும் மனம் இல்லாமல் செய்ய வேண்டும் என்று உரைக்கும்போது பலரின் கருத்துக்களை மனதில் நிரப்பிக்கொண்டு இருப்பது வீண் வேலை
    அது நம் நம் இலக்கை அடையமுடியாமல் செய்துவிடும்
    .
    நம்முடன் எப்போதும் உடன் வருவது நம்முடைய நல்வினைகளும் தீவினைகளும் மட்டுமே
    .
    நம் நினைவு தவறும்போதும் நாம் மெய்மறந்து உறங்கும்போதும் என்றும் நம்மை காக்கும் துணை இறைவன் மட்டுமே.
    மற்ற எல்லா துணைகளும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மை விட்டு அகன்று விடும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete