Saturday, August 25, 2012

வால் -வாலை -வாலறிவு

வால் -வாலை -வாலறிவு 
வால் என்றவுடன் பக்தர்களின் 
நினைவுக்கு வருவது ஹனுமானின் வால் 

அந்த வாலை கொண்டு அவர் செய்த 
சாகசங்கள் ஏராளம் 
தன் வாலில் தீயை வைத்த ராவணனின் 
அயோக்கியர்களின் கூடாரமான 
லங்காபுரியையே 
தீக்கு இரையாக்கினார்

தன் வாலினால்தான் கோட்டை கட்டி 
ராமபிரானிடமிருந்து 
தன்னை காப்பாற்ற வேண்டுமென்று
 சரணடைந்த ஒரு மன்னனை 
தான் ராமபிரானிடம் கொண்ட 
பக்தியால் ஹனுமார் காப்பாற்றினார்

இது போன்று ஏராளமான சம்பவங்கள் ராமாயணத்தில் 
காணலாம்

அதனால்தான் வாலில் மணியோடு கூடிய 
ஹனுமானை பக்தர்கள் பணிந்து கொண்டாடி மகிழ்கிறார்கள்
  
வெற்றியை அடைந்த அனுமான் 
வெற்றியைதரும் கடவுளாக கருதி 
வெற்றிலை மாலை அணிவித்து .பூஜிக்கிறார்கள்

தடைகளை தகர்த்த அனுமானுக்கு
 தங்கள் வாழ்விலும் 
தடைகள் நீங்க வேண்டி 
உளுந்து வடைகளால் 
செய்த மாலைகளை 
சாற்றி வழிபடுகிறார்கள்

ராம நாமத்தை கேட்டவுடன் வெண்ணையை போல் எளிதில் உருகிவிடும் அனுமானுக்கு வெண்ணை காப்பு சாற்றி  தங்களுக்கும் அந்த பக்தி நிலை கைவர வேண்டும் என்று வேண்டுகிறார்கள் 


வாலியின்  வாலில்தான் பத்து தலை பூச்சி என விளையாட்டுக்காக 
வாலியின் மகனான அங்கதன் குழந்தையாய் தொட்டிலில் படுத்து கிடந்தபோது கட்டி தொங்கவிடப்பட்ட ராவணன் மாட்டிகொண்டு தப்பினோம் பிழைத்தோம் என்று பயந்து சரணடைந்து உயிர் பிச்சை பெற்றான்


பாமர மக்களுக்கு தவறுகளை தொடர்ந்து செய்பவர்களை குறிக்கும் போது வால் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன செய்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது

தன்னை எதிர்ப்பவர்களின், வாலை ஓட்ட நறுக்கிவிடுவேன் என்று சிலர் கூறுவது உண்டு 

வாலில்லா குரங்குகள், சிங்கவால் குரங்கு என்ன குரங்குகளில் பலவகை உண்டு

திருக்குறள் படித்தவர்களுக்கு நினைவுக்கு வருவது கல்வி கற்பதனால் 
பெறும் பயன் என்னவென்றால் வாலறிவு எனப்படும் இறைவனை
உணர்ந்த நல்லவர்களுடைய திருவடிகளை அடைந்து உய்வதுதான் என்பர்

பள்ளியின் வால் துண்டுபட்டு கீழே விழுந்தாலும் சில உயிரோடு 
அது துடித்துகொண்டிருக்கும்.
சில பாம்புகளுக்கு வாலில் விஷம் உண்டு 

சித்தர்களின் தெய்வம் வாலை 
அவள் என்று குமரியாய் இருப்பதால்  வாலைக்குமரி.
அண்டங்களையும் அதில் உயிர்களையும்  ஈன்றெடுத்த பின்னரும்
அவள் குமரியாய் விளங்குகிறாள் அதுவும் கன்னியா குமரியாய் 
.
வால் மிளகு , வால் பாறை, வாலீஸ்வரர் ,வாலாஜா ,வாலிஸ்  என வால் தொடர்புடைய பொருட்களும், இறை நாமங்களும் ,ஊர் பெயர்களும் ஏராளம்

எது எப்படி இருந்தாலும் வாலின் மகத்துவம் அதை புரிந்துகொண்டவர்களுக்கு தெரியும். அதை உடைய ஸ்ரீராம பக்த ஹனுமானின் பக்தர்கள் அவருக்குஅவர் எடுத்த விஸ்வரூபத்தை போல் பெரிய அளவில் கோயில்கள் எழுப்பி வழிபாட்டு வருவது வால் என்று சொல்லுக்கு இருக்கும் மகத்துவத்தை பறைசாற்றுகிறது 

No comments:

Post a Comment