Wednesday, August 29, 2012

ஒரு ஜீவனின் யாத்திரை

ஒரு ஜீவனின் யாத்திரை 

கிராமத்தில் இருக்கும் ஒருவன் நகரத்திற்கு செல்கிறான்.
அப்போது வீட்டில் இருப்பவர் வீட்டிற்கு தேவையான
முக்கியமான பொருட்களை வாங்கி வருமாறு. கேட்டுகொள்கிறார்.
நகரத்திற்கு கிளம்புபவன் அந்த சீட்டை எங்கோ மறந்து வைத்துவிடுகிறான் 

வெகுநேரம்  அதை தேடுகிறான். 
ஒருவழியாக அந்த சீட்டு அவன் சட்டை  பையிலேயே இருப்பது தெரிந்ததும் அந்த சீட்டை எடுத்து அதில் எழுதப்பட்டுள்ள விவரங்களை தெரிந்துகொண்டதும் அந்த சீட்டை தூக்கி போட்டுவிட்டு கிளம்புகிறான்.
இதைபோல்தான் ஒவ்வொரு ஜீவனும் 
இந்த உலகத்திற்கு பிறப்பெடுத்து வருகிறது 
அவ்வாறு வரும்போது அதற்குள் இருக்கும் ஆன்மா
சென்ற பிறவியை வீணடித்தது போல் 
இந்த பிறவியையும் உலக மாயையில் சிக்கி ஏமாந்துவிடாதே 
என்று சில அறிவுரைகளை சொல்லி அனுப்புகிறது 

ஆனால் தாயின் வயிற்றிலிருந்து  வெளியே வந்த ஜீவன் 
தாய் , தந்தை சுற்றங்கள் ,நண்பர்கள் ,ஆசைகள் ,பாசம் என 
பல பந்தங்களில் சிக்கி தான் உலகிற்கு 
வந்த நோக்கத்தையே  மறந்துவிடுகிறது. 

கணக்கற்ற ஆசைகள் மனதை பற்றிக்கொள்ள 
அதை நிறைவேற்றிக்கொள்ள உழைக்க, 
அதற்க்கு தடை செய்பவர்கள் மீது கோபம் கொண்டு 
பல  சிக்கல்களில் சிக்குகிறது.
,
பாடுபட்டு சேர்த்த காசை
செலவு செய்ய மனமில்லாமல் 
பிறர் பயன்படுத்தவும் விடாமல்
கஞ்சத்தனமும் ,கருமித்தனமும் மேலோங்கி
மனைவி, மக்கள், பொருட்கள் என மோஹம் மிக கொண்டு 
தன்னிடம் எல்லாம் இருக்கிறது என்று 
அகந்தையும் மிக கொண்டு 
பல நேரங்களில் தன்னை விட 
செல்வாக்கு உள்ளவர்களை கண்டு 
பொறாமை என்னும்  அழுக்காற்றில் மூழ்கிபோய் 
ஜீவன் நோய் வந்து அழுகுவதும் 
துன்பத்தால் அழுவதும் 
வாடிக்கையாகிவிடுகிறது. 

அப்போதுதான் அதற்க்கு தான் இந்த 
உலகிற்கு வந்த  நோக்கம் 
நினைவிற்கு வர அதை நிறைவேற்றும் வழி தெரியாது 
புத்தகங்களிலும்,போலி  காவி வேட்டி 
கட்டிய புரட்டர்களிடமும் சிக்கி தடுமாறுகிறது.முடிவில் ஒரு உண்மையான் ஞானியை சந்தித்தவுடன் அவர் நினைவுபடுத்துகிறார்.உன்னுடைய அனைத்து துன்பங்களுக்கும் திறவுகோல் உன் சட்டைப்பையில் இருக்கிறது,அதாவது நீ தேடும்  பொருள் உனக்குள்ளே இருக்கிறது. 
அதை உன் உள்ளே சென்று தேடு என்று நினைவுபடுத்துகிறார். .
சிலர் அதை புரிந்துகொண்டு சாதனையில் இறங்கி வெற்றி பெறுகிறார்கள்.
ஆனால் பலர் இவ்வுலகில் பலகாலம் அனுபவித்த இன்பங்களும் துன்பங்களின் பதிவுகளும் நிறைவேறாத ஆசைகளும் மனதை வாட்ட மரணத்தை தழுவுகிறார்கள் மீண்டும் அடுத்த பிறவியில் தேடுவதற்கு
ஆனால் அடுத்த மனித பிறவி கிடைப்பதற்கு முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே மீண்டும் மனித பிறவி கிடைக்கும் என்பதை இந்த பதிவை படிப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இக்கணத்திலிருந்தே அதற்க்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.  

ஒவ்வொரு அணுவும் ஒரு ஆன்மா என்று உணரவேண்டும் 
பலகோடி அணுக்களில் ஒன்றுக்குத்தான் மனித பிறவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது. எனவே 
விடுதலையை விரும்புபவர்கள் இந்த உண்மையை புரிந்துகொள்ளட்டும்.. 

4 comments:

 1. நாம் அடையும் இன்ப துன்பங்கள் எல்லாம் நம்மக்குள்ளேயே இருக்கிறது என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

  நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

  (New Interface : Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

  தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...

  ReplyDelete
 3. comment moderation removed.Pl.check up and inform me
  TRP

  ReplyDelete
 4. சார்... மிக்க நன்றி... சோதனைப் பதிவு...

  ReplyDelete