Thursday, August 9, 2012

கல்லா கட்டும் பாபாக்கள்


கல்லா கட்டும் பாபாக்கள்

கல்லா கட்டும் பாபாக்கள்

காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஸ்வாமிகள்
ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வரும் ஆனந்தாக்கள்

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு 
அதை வெளியே அப்புறபடுத்த வழி அறியாமல் 
அலையும் மனித இனம்
பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் 
தவிக்கும் குரங்குகள் போல் பலர்
சுயலாபத்திர்க்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து
தங்களின் சொந்த வாழ்க்கை 
பறிபோய் தவிக்கும் பலர்
மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு
மனித நேயமற்ற செயல்களில்
ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம்
உலகம் முழுவதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைப்படுத்துவதும் சிறுமைபடுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து அலையும் தீவிரவாத  கும்பல்கள் 

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள்
மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல் மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர்
அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும்
அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது

நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக 
மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம்

மனிதகுலம்  வாழ உணவையும் மழையையும் தந்து தாய் போல் காக்கும் கடலில் அனைத்து  கழிவுகளையும் விட்டு மாசுபடுத்தும் பொறுப்பில்லா மக்கள்
 
கடற்கரையை ,நீர்நிலைகளின் கரைகளை, சாலை ஓரங்களை பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் கருங்காலி கூட்டம் 

நிலத்தடி நீர் வழங்கும் ஏரிகளை சேரிகளாக்கி  அரசியல் துணையுடன் அசுத்த படுத்தும் அராஜக கூட்டம் .அதற்க்கு துணை போகும் அரசியல் கட்சிகள்  

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் 

அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் ,கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ,ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை 


இறைவா நீ அவதாரம் எடுத்து 
இவைகளையெல்லாம்
சரி செய்ய விரைவில் வரவேண்டும்.
வேறு வழியில்லை 


3 comments:

 1. எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு...

  நன்றி…

  ReplyDelete
 2. இன்று மக்கள் கடவுளுக்கும்
  பயப்படுவதில்லை
  சட்டங்களையும் மதிப்பதில்லை

  துன்பங்களும், துயரங்களும் வாழ்வில் பலமுறை சந்தித்தாலும் அவற்றிலிருந்து பாடங்களையும் கற்பதில்லை
  .
  பிறரை ஏமாற்றுவதில் ஆனந்தம்
  பிறரை வஞ்சிப்பதில் ஆனந்தம்
  பிறர் சொத்துக்களை அபகரிப்பதில் ஆனந்தம்,
  பிறரை சொல்லால், செயலால் துன்புறுத்தி இன்பம் அடைவதில் ஆனந்தம்
  தான் செய்த தவறுகளுக்கு விதி மீதும்,
  மற்றவர்கள் மீதும் சுமத்திவிட்டு
  தப்பிக்க நினைப்பதில் ஆனந்தம்
  என தவறான திசையில் மனித குலம் போய்க்கொண்டிருக்கிறது
  .
  உண்மை ஏட்டளவில்
  எழுத்தில்தான் இருக்கிறது

  நேர்மை என்றோ மனிதர்களிடமிருந்து
  விடை பெற்று சென்று விட்டது.

  ஒழுக்கம் ஒடுங்கிவிட்டது

  நேர்மையாக இருக்க நினைப்பவன்
  ஊழல்களை வெளிச்சம் போட்டு
  காட்டுபவனின் வாழ்க்கை
  இருட்டாக்கபடுகிறது
  வன்முறையாளர்களால்

  என்ன செய்ய?

  ReplyDelete
 3. ராம ரசத்தில் காம ரசத்தை ஒரு பதிவர் கலந்திருக்கிறார்.
  தவறில்லை. காம ரசம் தேவைதான் .அளவுக்கு அதிகமாக குடித்து நோய்வாய்ப்பட்டஅவருக்கு ராம ரசம் குடித்து வந்தால் நோய் மெல்ல மெல்ல நீங்கிவிடும்.

  ReplyDelete