Wednesday, August 8, 2012

பக்தி என்று நினைத்து கொண்டிருக்கும்?

பக்தி என்று நினைத்து கொண்டிருக்கும்?

பக்தி என்றால் என்ன?
பிறரை ஏமாற்ற பட்டை போடுவது,மறைவில் பட்டை அடிப்பது பக்தி அல்ல

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ஆண்டில் சில நாட்கள் பாடுவது 

அது முடிந்ததும் ஆண்டு முழுவதும் கள்ளும் உயிர்களை வதைத்து முள்ளால் குத்தி கறி சோறு தின்பதும் பக்தி அல்ல
தன்னை காப்பாற்ற வேண்டி கோவிந்தா கோவிந்தா என்று கோயிலில் கூவிவிட்டு வெளியில் வந்ததும் தன்னை  நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு வேடிக்கை பார்ப்பது பக்தியல்ல

தன் ஒரு கன்னத்தில்  அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்று வசனம் படித்துவிட்டு கன்னத்தில் அறைந்த நாட்டின் மீதே படையெடுத்து அப்பாவி அந் நாட்டு மக்களையே அழித்தொழிப்பது பக்திஅல்ல
ஒரே இறைவன்,அனைவரும் சகோதர்கள் என்று அனு தினமும் போதித்து கொண்டு தன் சகோதர மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பது பக்தியல்ல 

அன்பே சிவம் அன்பே சிவம் என்று ஒவ்வொரு கணமும் உச்சரித்துக்கொண்டு வாயில்லா அப்பாவி பிராணிகளை கொன்று தின்று வயிறு வளர்ப்பது   பக்தியல்ல

அகிம்சையே உயர்ந்த தர்மம் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு உதவுவதுபோல் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கி பிழைப்பு நடத்துவதும் பக்தி ஆகா
தான் வாழ இவ்வுலகில் உரிமை இருப்பதுபோல் அனைத்து உயிர்களும் வாழ உரிமை இருப்பதை உணர்ந்துகொண்டு எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமல் அன்பு கொண்டு வாழ்வதே உண்மையான பக்தி
அந்நிலையில்தான் உலகில் அமைதி நிலவும். 

1 comment:

  1. ஒவ்வொரு வரியும் சாட்டையடி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி…

    ReplyDelete