Friday, December 30, 2011

உண்மை என்பது கடவுள்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை

என்ற வரிகளை சீர்காழி கோவிந்தராஜன்
பாடியதை அந்த கால ரசிகர்கள்
மறந்திருக்க மாட்டார்கள்

ஆனால் இன்று உலகில் என்ன நடக்கிறது?

உள்ளம் ஒன்று நினைக்கிறது
உதடு ஒன்று சொல்கிறது

வீட்டிற்குள்ளும் அதே நிலைமை
வெளியிலேயும் அதே நிலைமை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்லுகிறார்கள்
பல நேரங்களில் உண்மை பேசும் குழந்தைகளை பொய் சொல்ல சொல்லி
கட்டாயபடுத்துகிரார்கள் இல்லை கட்டாயபடுத்தபடுகிரார்கள்

இதனால் தூய மனதுடன் இவ்வுலகிற்கு வந்த குழந்தையின் உள்ளம்
கெடுகிறது

பிறகு அது பொய் சொல்லுவதை தன இயல்பாக கொண்டு விடுகிறது

பெற்றோர்களின் இந்த கொடுஞ்செயல் அவர்களுக்கு எதிராகவே
பிற்காலத்தில் முடிகிறது

இதனால் வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியேயும் பொய்தான் ஆட்சி செலுத்துகிறது

உண்மைக்காக வாழ்ந்த ஹரிச்சந்திரன் இருந்த இந்நாட்டில் அவன் வாழ்ந்த நெறியை கடைபிடிக்க சமீப காலத்தில் முயற்சி செய்தவர் மகாத்மா காந்தி

அது அவரோடு போய்விட்டது

உண்மை என்பது கடவுள் 
கடவுள் என்றால் உண்மை 
இரண்டையும் பிரிக்கமுடியாது

அவ்வாறிருக்க உண்மை பேசாமல்,
உண்மை நெறியை கடைபிடிக்காமல்
கடவுளை அடைவது என்பது
சாத்தியமற்றது என்பதை
கடவுளை நோக்கி
வழிபாடு செய்யும் மனிதர்கள்
உணரவேண்டியது அவசியம்

வரும் புத்தாண்டிலாவது
உண்மை நெறியை இயன்றவரை
கடைபிடிக்க முயற்சி செய்தால்
உள்ளத்தில் அமைதி பிறக்கும்

அமைதியை நாடி எங்கும்
செல்லவேண்டிய அவசியமும்
இருக்காது 

  

Sunday, December 25, 2011

காக்கும் கடவுளான நாராயணா இந்த மனித குலத்தை நீதான் காப்பாற்றவேண்டும்


காக்கும் கடவுளான நாராயணா இந்த மனித குலத்தை நீதான் காப்பாற்றவேண்டும் 

புராண காலத்தில் காக்கும் கடவுளான நாராயணன் மது,கைடபன் என்ற
அரக்கர்களை அழித்ததாக கூறப்பட்டுள்ளது

மக்களின் மதியை மயக்கி உடல்நலனை சீரழித்து வாழ்வை அழிக்கும் மதுவை
மதுவை உற்பத்தி செய்பவர்கள்,விற்பவர்கள் ஆகியவர்களை அழித்து தன படைப்புகளை காக்க இறைவன் அவதாரம் எடுதுள்ளதாகதான் இதை கருத வேண்டும்

இன்றும் அதே சூழ்நிலை தான் நீடிக்கின்றது

மதுவினால் இன்று கோடிகணக்கில் மக்களின் மதி மயங்கி
உடல் நோயுற்று துன்புறுகின்றனர்

கொள்ளை கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்
குடும்பத்தில் மனைவி குழந்தைகள், பெற்றோர் ஆகியோரை துன்புறுத்தி
அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுப்பதுடன்  குறைந்த ஆயுளிலேயே மாண்டு போகின்றனர்

இதனால் நாட்டில் ஆதரவற்ற,குழந்தைகள்,பெண்கள்,முதியோர் என சமுதாயத்தில் எண்ணிக்கை பெருகிவருகிறது

இந்த தீய செயலிலிருந்து மக்களை காக்க வேண்டிய அரசுகளே அதை தடுக்காமல் அவைகளே மதுவை தயாரித்து மக்களை குடிக்க வைத்து
தங்கள் சுயநல் நோக்கங்களுக்காக மக்களை பகடைகாய்களாக பயன்படுத்தி (கொள் )கொல்கின்றனர்

கடந்த காலத்தில் மகாத்மா காந்தி மதுவிற்கு எதிராக போராடிமக்களை
காப்பாற்றினார்.

தற்போது மீண்டும் இறைவன் நாராயணன் அனைவரின் வாழ்வை சிதைக்கும் மது என்ற அரக்கனை கொன்று மக்களை காக்க அவதாரம் எடுக்கவேண்டும் என்று முழுமனதுடன்பிரார்த்திப்போமாக 

யாருக்கு அடிமை செய்ய வேண்டும் ?

யாருக்கு அடிமை செய்ய வேண்டும் ?
பரிபூரணனுக்குதான் அடிமை செய்ய வேண்டும் 
என்றான் மகாகவி பாரதி 

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

சிலர் பெண்களிடம் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
பலர் பிறரை ஆட்டுவிக்கும் அதிகார போதைக்கு 
அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
கோடிகணக்கான மனிதர்கள் மதுவுக்கும்,
போதை பொருளுக்கும் ,பலவிதமான சூதாட்டங்களுக்க்கும் 
அடிமைப்பட்டு பொருளை இழந்து, தன்னை இழந்து,அதிலிருந்து
வெளி வர முடியாமல் மூழ்கிகொண்டிருக்கிரார்கள் 
 
பலர் புகழுக்கு அடிமைப்பட்டு 
இகழ்ச்சியைவலிய தேடிகொள்ளுகிரார்கள்

வலிமையான நாட்டிற்கு வலிமை குறைந்த
 நாடுகள் அடிமைப்பட்டு சிறுமைபட்டுகொண்டிருக்கின்றன

இப்படியாக இன்று யாருக்கும்
உண்மையான விடுதலை இல்லை 
விடுதலை வேண்டும் என்று 
தறுதலையாக தாறுமாறாக நடந்துகொண்டு
சூழ்ச்சி வலையில் சிக்கி கூண்டோடு 
அழிந்து போய்கொண்டிருக்கிறார்கள் 
என்பதை வரலாறு சொல்லும்
 
நம்மை சுரண்டி நம்மை பூண்டோடு அழிக்கும் 
மனிதர்களிடம் நாம் உதவி தேடி சென்றால் 
மேற்கொண்டவாறுதான் நிகழும்

நம்மை நாம் காப்பற்றிகொள்ளமுடியாத
நிலை வரும் போது நம் நிலையை புரிந்துகொண்ட
நம்மை காப்பாற்றக்கூடிய 
நல்லவர்களிடம்,வல்லவர்களிடம்தான் 
நம்மை ஒப்புவிக்கவேண்டும் 

அதற்க்கு தகுதியானவர் இறைவன் ஒருவன் மட்டுமே
அவனிடம் முழுவதுமாகநம்மை ஒப்புவித்தால் 
அனைத்து துன்பங்களிலும் இருந்து 
விடுபடுவோம் என்பதில் ஐய்யமில்லை 

Thursday, December 22, 2011

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும் நம்மால் ஏன் அவரை காண முடியவில்லை?

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும் 
நம்மால் ஏன் அவரை காண முடியவில்லை?

அதற்க்கு காரணம் நம் மனம்தான்
நம் மனதில் கடவுளை பற்றிய பலவிதமான
கற்பனைகள் நிறைந்துள்ளன
பொதுவாக நாம் கடவுளை பல வடிவங்களில் இருப்பதாக 
கற்பனை செய்து வைத்துகொண்டு 
அதை கடவுள் என்று வழிபடுகின்றோம் 
இந்த எண்ணம் எல்லோரின் மனதிலும் 
ஆழமாக பதிந்துவிட்டது

பிறந்ததிலிருந்தே நாம் அப்படிதான் வழிபாடு 
செய்ய கற்பிக்கபட்டிருக்கிறோம்
அந்த எண்ணத்தை தாண்டி நம் சிந்தனை செல்வதில்லை 
அப்படி செல்லவும் நம்மை சுற்றியுள்ளவர்களும் 
நம்மை விடுவதில்லை
கோடிகணக்கான மனிதர்களில் பகவான் ரமணர் 
போன்றவர்கள்தான் இந்த எண்ணத்திலிருந்து 
வெளியே வந்து சில உண்மைகளை 
வெளிப்படுத்தி அதன்படி வாழ்ந்தும் காட்டினர்

ஆனால் அவர் வெளிபடுத்திய உண்மைகளை இந்த உலகம் 
இன்னும் புரிந்துகொள்ளவில்லை 
மாறாக அவரையே கடவுளாக்கி சிலை வைத்து
கோயில் கட்டி வழிபாடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்

எத்தனையோ மகான்கள் புற வழி பாடுகளை 
மேற்கொண்டாலும் அவர்கள் எழுதிய நூல்களில்
தெளிவாக இறைவன் நமக்குள்ளேதான் இருக்கின்றான் 
என்று எழுதி வைத்துள்ளதை யாரும் கவனிப்பது கிடையாது
அக வழிபாட்டிற்கு முக்கியத்வம் அளிக்காமல் புற வழிபாட்டிலேயே 
தங்கள் வாழ்நாள் முழுவதையும் வீணடித்து இறைவனை 
அறியாமலேயே மீண்டும் பிறப்பு இறப்பு சுழலில் 
சிக்கிக்கொண்டு அவதி பட்டுகொண்டிருக்கின்றனர். 

Sunday, December 18, 2011

உண்பதும் உறங்குவதும்தான் உன் வாழ்க்கையின் லட்சியமோ?

உண்பதும் ஊர் சுற்றுவதும் உறவு கொள்வதும் 
உறங்குவதும் பிற உயிர்களை 
துன்புறுத்தி இன்பம் காண நினைப்பதுவும்தான் 
உன் வாழ்க்கையின் லட்சியமோ?

ஓரறறிவு முதல் ஐந்தறிவு 
படைத்த உயிர்கள் செய்யும் 
வேலையை நீ செய்வதற்கு 
உனக்கு ஆறறிவு எதற்கு?

சிந்தனை செய்வாய் மனமே 
சிந்தனை செய்வாய் 
சிந்தனை செய்யும் மனதை அளித்த
அந்த மாதவன் கேட்கின்றான் 
பதில் சொல் மனமே சொல் 
பதில் சொல் மனமே சொல்

தாமரை பூவில அமர்ந்தருள் செய்யும் இலக்குமியை 
வணங்கி  மகிழாது கண் விழித்தெழுந்தது 
முதல் உறங்கும் வரை தறி கெட்டலைந்து  
உன் மனமென்னும் பொறியில் 
அகப்பட்ட பூச்சிகள் போல் துடிப்பது ஏனோ?

வீணை ஏந்தி கானம் செய்யும் கலைமகளை வணங்காது 
வீண் கதைகள் பேசி சுற்றி திரிந்து வாழ்வை 
வீணாக்கலாகுமோ சொல் மனமே சொல்

மாலவனை அடைய மாதவம் 
செய்திடவே அளித்த இந்த 
கிடைத்தற்கரிய இப்பிறவியை 
வீணடிப்பது முறைதானோ சொல் 
முறைதானோ சொல் மனமே
முறைதானோ சொல் மனமே சொல்

ஊரெங்கும் கோயில் கொண்டு 
உனக்கு உணர்த்த நான் சிலையாய் 
நின்றிடினும் உலக போகம் என்னும்
மாய வலையில் நீ சிக்கி 
வீணே மடிவது சரிதானோ
சரிதானோ சொல் சரிதானோ 

எச்செயலுக்கும் கால அட்டவணை போடும் மனிதா
காலன் உனக்கு போட்டு வைத்த அட்டவனையை 
நீ அறிய மறுப்பதேனோ? 
அறிய மறுப்பதேனோ சொல்?

அனைத்துமாய் நான் இருந்தாலும் 
மாதத்தில் நான் மார்கழியானேன் 
உன் பாவங்கள் கழிந்து நீ புனிதமடைய 
இப்புவியில் நலமாய் வாழ

இன்றே என்னை அடைக்கலம் புகுவாய்
துன்பமற்ற இன்ப வாழ்வை பெற
ஆலயம் வந்திடுவாய் 
கண் குளிர கண்டிடுவாய் என் வடிவம் 
இனிய இசையுடன் என்னை துதித்திடுவாய்
ஆனந்தமுடன் அன்றாடம் 
பணிகளை ஆற்றிடுவாய்

கவசம் போல் உன்னை நான் காப்பேன் 
காலமெல்லாம் என் கண்ணுக்குள் வைத்து 


தண்ணீருக்காக கண்ணீருடன் அலையும் மக்களே

சிந்தனைக்கு சில வரிகள்

எந்த பிரச்சினைக்கும் கூட்டம் சேர்த்து 
கூப்பாடு போடாதீர்கள் 
கூப்பாடு போட்டு முடிந்த பின்
கூட்டம் கலைந்து விடும் 
எந்த பிரச்சினையும் தீராது 

கூட்டமாக இணைந்து இறைவனை 
நோக்கி வழிபாடு செய்யுங்கள்
உங்கள் பாடும் தீரும் 
பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் 

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் 
பிரச்சினையை தீர்த்துவைப்பது
அரசியல்வாதிகளோ நீதிமன்ற தீர்ப்புகளோ அல்ல
வருண பகவான்தான் தீர்த்துவைக்கிறான் 
என்பதை புரிந்து கொள்ளுங்கள்

தண்ணீருக்காக கண்ணீருடன் அலையும் மக்களே 
இறைவன் ஆண்டுதோறும் வெள்ளமென மழையை 
அளவின்றி அளிக்கிறான்
அதை சேமித்து வைத்துகொள்ள வழியின்றி 
கடலில் விட்டுவிட்டு அண்டை மாநிலங்களுடன் 
சண்டையிடுவதால் யாருக்கு பயன்?

இறைவனிடம் தூய உள்ளத்துடன்  மன்றாடுங்கள் 
அவன் எல்லா பிரச்சினைகளையும் நிரந்தரமாக 
தீர்த்து வைப்பான்
 .
மனிதர்களை நம்பாதீர்கள்
அவர்களின் உள்ளம் சுயலமும் உள்நோக்கமும் 
கொண்டு மாசடைந்துள்ளது
நம் அரசுகள் அதேபோன்ற உள்ளங்களை கொண்ட
மனிதர்களால் ஆக்கப்பட்டுள்ளது
அதனால்தான் எந்த பிரச்சினைக்கும் அவர்களால் தீர்வு
காணமுடியவில்லை
.
அனைவருக்கும் நல்லஉள்ளம் அமைய வேண்டும் என்று 
தினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

தூய உள்ளம் கொண்டவர்களால்தான் அனைவருக்கும்
நன்மை பயக்கும் செயல்களை செய்ய முடியும்  


  

Wednesday, December 14, 2011

மனம் என்பது ஒரு கட்டுபாடற்ற சக்தி அதை ஒருமைபடுத்தி அதிக சக்தியை பெறலாம்

நாம் காண்பதனைத்தும் உண்மையா?

நம்முடைய கண் என்னும் கருவி மூலம்
காண்பது உண்மையின் பிரதிபலிப்பா?

கண்ணால் கண்ட காட்சியை மனம் ஒருவாறு பார்க்கிறது
புத்தி ஒருவாறு புரிந்து கொள்கிறது

ஆனால் உண்மை என்ன என்பதை எப்படி அறிந்துகொள்வது?
மனம் என்பது கடந்த கால பதிவுகளின் தொகுப்பு
எந்த காட்சியை கண்டாலும் ஏற்கெனவே அக்காட்சி தொடர்பாக
மனதில் உள்ள காட்சி பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து
முடிவுக்கு வரும்
அது சரியா தவறா என்பதை புத்திதான் முடிவு செய்யும்

மனதில் எந்த விதமான எண்ணங்கள் நிறைந்திருக்கிறதோ
அதை பொறுத்துதான் அதன் செயல்பாடு இருக்கும்
தீயவர்களோடு அது தொடர்பு கொள்ளும்போது பிறரை பாதிக்கும் தீய முடிவுகளையும் நல்லவர்களோடு தொடர்புகொள்ளும்போது பிறருக்கு நன்மை பயக்கும் முடிவுகளையும் எடுக்கும் .
இதில் குழப்பம் ஏற்படாமல் தடுக்க புத்தியினால்தான் முடியும்

மனம் தன்னிச்சையாக தவறாக முடிவுக்கு வரும்போதுதான் மற்றவர்கள் உனக்கு புத்தி இருக்கிறதா என்று கேள்வி கேட்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள்

மனம் என்பது ஒரு கட்டுபாடற்ற சக்தி
அதை ஒருமைபடுத்தி அதிக சக்தியை பெறலாம்
அதை கொண்டு இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை

இறைவனை அடையவும் மன ஒருமைப்பாடு  தேவை
மன ஒருமைப்பாடுடன் இறைவனை தியானித்தால் இறைவனை அடையலாம்
அதற்க்கு தியானம் செய்யவேண்டும்

அதற்க்கு நல்ல புத்தியை இறைவனிடம் வேண்டி பெறவேண்டும்
அதனால்தான் திருமூலரும் இறைவனை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன் என்று கூறியுள்ளார்
.
தொண்டரடிபொடி ஆழ்வாரும் தான் இவ்வுலகில் பட்ட துன்பங்களிலிருந்து
இறைவன் தன்னை விடுவிக்க 'போதரே என்று என் புந்தியுள்புகுந்தே  'என்று
திருமாலையில் கூறியுள்ளார்
.
இறைவன் நம் புத்தியில் புகுந்து நம்மை நல்வழியில்  அழைத்து செல்லுமாறு வேண்டுவோம்.


சிந்தனைக்கு சில வரிகள்

சிந்தனைக்கு சில வரிகள்

அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு

உள்ளிருந்து உன்னை இயக்குபவன் அவனன்றோ
எல்லாம் உன்னால்தான் என் நீ நினைப்பது தவறன்றோ

அன்போடு அனைவரின் நலம் நாடு
அதுவே அவனுக்கு நீ செய்யும் வழிபாடு

கண்ணால் காண்பதனைத்தும் அவன் வடிவே
உன் கண்ணில் காணும் ஒளியாய் இருப்பதும் அவனருளே

ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று நீ ஆராய்வது வீண் வேலை 

சாத்திரங்கள் எல்லாம் அவன் புகழ் பாடும்
நீ அவனை தோத்திரம் செய்தால் அருள் கூடும்

நல்லோரின் கூட்டுறவை நாடிடுவாய்
தீயோரின் கூட்டுறவை விட்டு ஓடிடுவாய்

பசித்தோருக்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
உன்னை பாசத்தோடு பக்கத்தில் நின்று காத்திடுவான்

அரிதாய் கிடைத்த மனித பிறவி
அவனை அறியாது போனால் கிடைக்கும் இழிபிறவி
உலக பற்றுகளை ஒதுக்கி இதை அறிந்தே
தவம் செய்வான்  துறவி

கடமைகளை தவறாமல் காலத்தோடு செய்திடுவாய்
கண நேரமும் கடவுளை மறவாமல் வாழ்ந்திடுவாய்
காலமெல்லாம் கவலையற்று வாழ
அவன் அருள் செய்திடுவான் 



Tuesday, December 13, 2011

நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நான் என்ற அகந்தையின் சாயம் ஒட்டிக்கொண்டு உண்மையை அறியவிடாமல் அது தடுத்துகொண்டிருக்கும்

மனம் என்று ஒன்றிருக்கும்வரை
எண்ணங்கள் இருக்கும்
எண்ணங்கள் இருக்கும்வரை
செயல்கள் இருக்கும்
செயல்கள் இருக்கும்வரை
விளைவுகள் இருக்கும்
விளைவுகள் இருக்கும்வரை வாழ்க்கையில்
இன்ப துன்பங்கள் இருந்துகொண்டே இருக்கும்
இன்பதுன்பங்கள் இருக்கும்வரை
மனதில் அமைதி இருக்காது

நமக்கு இன்பமும் துன்பத்தை தருகிறது
துன்பமும் இன்பத்தை தருகிறது
இன்பமும் துன்பமும் நிலையானதாக இல்லை
இரண்டும் மாறி மாறி வந்து நம்மை
ஆட்டி வைக்கின்றன
இதனால் மனித உறவுகளில் உரசல்கள்,
விரிசல்கள் ஏற்படுகின்றன

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
அப்பாற்பட்ட ஒரு இன்பம் இருக்கிறது
அது எங்கே கிடைக்கும்?
அதை எப்படி அடைவது?
அந்த நிலையான இன்பத்தை நாடிதான்
ஒவ்வொரு மனித உயிரும் வாழ்நாள்
முழுவதும் அலைந்து கொண்டிருக்கின்றன
அதை நாம் அடையும் வரை
நம் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்

எதை தேடுவது?
எங்கே தேடுவது?
யாரிடம் தேடுவது?
எப்படி தேடுவது?
அந்த தேடலில்தான் எவ்வளவு குறுக்கீடுகள்
எவ்வளவு ஏமாற்றங்கள்
எவ்வளவு இழப்புக்கள்
புற உலகில் அதை தேடி அலைந்து
மனிதர்கள் வாழ்நாள் வீணாகிவிடுகிறது
உண்மையில் அது, அந்த நிலையானஇன்பம்
நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது
என்பதை அறியும்போதுதான்
நமக்கு உண்மை விளங்குகிறது
அப்போதுதான் நமக்குள் இருப்பதுதான்
அனைத்திற்குள்ளும் இருக்கிறது
என்ற அறிவு ஏற்படுகிறது
அப்போதுதான் இந்த உலகத்தின் மீதும்
அனைத்து உயிரினங்களின் மீதும்
உண்மையான அன்பு ஏற்படுகிறது

அன்பிருக்கும் இடத்தில எதிர்பார்ப்புகள் இல்லை
எதிர்பார்ப்புகள் இல்லாமையால் ஏமாற்றங்கள் இல்லை
ஏமாற்றம்  இல்லையேல் மன அழுத்தம் இல்லை
மனம் எப்போதும் அமைதி நிலையில் இருக்கிறது
இவ்வுலக வாழ்வே இனிக்கிறது
மரணத்திற்கு பிறகும் நம்மை தொடர்ந்து வரும்
உயிரின் உண்மை நிலை அதுவே
அதை அடைந்த பிறகு மனது அமைதியடைந்து
வேறு எதையும் நாடுவதில்லை

அந்நிலையை அடையும் வரைக்கும்
நாம் செய்யும் அனைத்து செயல்களிலும்
நான் என்ற அகந்தையின் சாயம் ஒட்டிக்கொண்டு
உண்மையை அறியவிடாமல் அது தடுத்துகொண்டிருக்கும்

நமக்கு இறைவன் அனைத்தையும் அளித்திருந்தாலும்
அனைத்தையும் அவன்தான் நம் உள்ளிருந்து  இயக்குகிறான்
என்ற தெளிவு வரும்வரை இந்த நான் என்ற எண்ணம்
நம்மை விட்டு நீங்க வாய்ப்பில்லை  

மிக குறுகிய காலமே இந்த உலகில் வாழ போகும் நாம் இருக்கும் காலம் வரை பிறருடன் அன்பாக, நல்ல உறவை பேணி திருப்தியாக மன அமைதியுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும்

என் உள்ளம் வெள்ளை என்றால் என்ன பொருள்?
சிலர் சொல்வார்கள்
உண்மையை உள்ளபடி உரைப்பவர்கள்
அப்படி உரைப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி
சிந்திக்காமலே
 
சிலர் பொருள் கொள்ளுவார்கள்
குழந்தை போன்ற உள்ளம் கொண்டவர்கள்
குழந்தைகள் உடனே அனைத்தையும் மறந்துவிட்டு
உடனே நடப்பதை ஏற்றுகொள்ளும்

அது குழந்தையாக இருக்கும்போது சரியாக வரலாம்
வளர்ந்த பிறகு அந்த குணம் சரிப்படுமா?
நமக்கு கெடுதலை செய்தவர்களை பழி
வாங்காமல் எப்படி இருக்க முடியும் ?
நம்மை வெறுத்து ஒதுக்கியவர்கள் மீது
அவர்கள் செயலை மறந்து எப்படி நாம் அன்பு
காட்ட முடியும்?

இப்படியாக சிந்தித்து கொண்டு
போனால் வாழ்வில் போராட்டங்களுக்கும்
துன்பங்களுக்கும்
நம் முடிவு வரை முடிவில்லை

பழி வாங்கும் எண்ணம் நீங்க வில்லை என்றால்
அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து
போய்கொண்டிருக்கும்

சரி. இனி தலைப்புக்கு வருவோம்

திரைப்படம் காட்டப்படும் திரை வெண்மையாக இருக்கிறது
படம் காட்டப்படும்போது பல வண்ணங்களில்
அது ஜொலித்தாலும் படம் காட்டி முடிந்த பிறகு
அது வெண்மையாகவே காட்சியளிக்கிறது

ஒவ்வொருமுறை காட்டப்பட்ட படங்களின் வண்ணங்களை
அது அப்படியே வைத்திருந்தால் மீண்டும் மீண்டும் படம்
அதில் பார்க்க முடியுமா?
அல்லது படங்கள் நன்றாகதான் தெரியுமா?

அதைபோல்தான் நம்முடைய மனமும் ஒரு வெள்ளை திரை
நாம் ஒவ்வொருமுறை கண் விழித்து படம் பார்க்கிறோம்
தூங்கும்வரை அப்போது நடைபெறும் அனைத்து உணர்ச்சிகளும் திரையிலேயே பசை போல் ஒட்டிகொள்கின்றன 
அவை கோபமோ,தாபமோ , துக்கமோ,
மகிழ்ச்சியோ நம் மனத்திரையில் தங்கிவிடுவதால் நம்மால்
நம் வாழ்க்கை படங்களை சரியாக காண விடாமல் அமைதியின்றி தவிக்கின்றோம்

எனவே அடுத்த முறை படம் கண்டு மகிழ வேண்டுமென்றால்
நம் மனத்திரையை வெள்ளையாக  வைத்துகொள்வோம்.
ஏற்கெனவே கண்ட காட்சிகளை மறந்துவிட்டு
தினமும் புதிய புதிய காட்சிகளை கண்டு மகிழ்வோம்

இரவு உறங்கியவுடன் நாம் இறந்து மீண்டும் விழிக்கும்போது
புதிய பிறவி எடுப்பதால் முக்கியமாக பழைய தீய  நினைவுகளை மறந்து
தினமும் புதிய சிந்தனைகளுடன் இன்பமான வாழ்வை எதிர்கொள்வோம்

அதற்க்கு மிக எளிய வழி நாம் யாரை சந்தித்தாலும்
அவர்களை பற்றிய எண்ணங்கள் நம் மனதில் எழாது
அவரை அப்போதுதான் முதல்முதலாக சந்திப்பதாக கருதி
அவருடன் நல்லுறவை பேண முயற்சிக்கவேண்டும்
.
மிக குறுகிய காலமே இந்த உலகில் வாழ போகும் நாம்
இருக்கும் காலம் வரை பிறருடன் அன்பாக,
நல்ல உறவை பேணி திருப்தியாக மன அமைதியுடன்
வாழ முயற்சி செய்ய வேண்டும்
இந்த அணுகுமுறை நிச்சயம் பலன் தரும்



Sunday, December 11, 2011

பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும் இறந்தால் பிறந்துதான் ஆகவேண்டும்

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய்?
இல்லை ஒரு  பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே?
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
இங்கு வந்து ஏன் பிறந்தாய் மகனே
என்ற வரிகளை முந்தைய தலைமுறை மக்களுக்கு
தெரியாமலிருக்க முடியாது

அதே நேரத்தில் கண்ணன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான் என்று
உலகமே கொண்டாடும் பிறப்பும் இவ்வுலகில் உண்டு

பெண் சிசு என தெரிந்தால் சுற்றதிர்ற்கு அஞ்சி
கருவிலேயே அழிக்கும் பெண்கள் ஏராளம்
இன்று உலகெங்கும் அங்கு இங்கு எனாதபடி
பெண்களை கொடுமைபடுத்தி அவர்கள் வாழ்வை
கேள்விக்குறியாக்கும் நவீன காம காம கொடூரன்களின்
பார்வையிலிருந்து தப்பி நல்லதோர் வாழ்க்கை
பெண்ணினத்திற்கு அமைவது இன்றைக்கு கேள்விக்குறி

வறுமையினால் வாழ்க்கையை தொலைக்கும்
 பெண்கள் ஒருபுறமிருக்க
வளமான வாழ்க்கையினால் மோகம் தலைக்கேறி
வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் ஏராளம்

இவ்வளவு புதை குழிகள் இருந்தும் கடவுளை தேடி
அலைகின்ற மக்களும்  இவ்வுலகில் இருக்கத்தான்
செய்கின்றனர்

உண்மையை தேடி பொய்களிடம் அடைக்கலம்
புகும் கூட்டம் தன இன்று அதிகம்
உண்மை எது பொய் எது என்று பகுத்தறிவது
மிக கடினம்

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு
காரணமில்லாமல் எந்த செயலும் இல்லை
நம் பிறப்புக்கும் நாம் முற்பிறப்பில் செய்த
நல்வினை,தீவினைகளே காரணம்

இப்பிறப்பிலாவது நல்லவர்களோடு சேர்ந்து
நல்லதை எண்ணி,நல்லவைகளை செய்து
நலம் பெறுவோம்
.
பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும்
இறந்தால் பிறந்துதான் ஆகவேண்டும்

இந்த வட்டத்திலிருந்து விடுபட வேண்டுமானால்
இறைவனிடம் எந்த நிலையிலும் அசைக்கமுடியாத
நம்பிக்கையும் முயற்சியும் வேண்டும்
அதை அந்த இறைவன்தான் நமக்கு தரவேண்டும்.



திருந்திய வாழ்க்கை அமிழ்தினும் இனிது என்றார்

இன்று உலகத்தில் தீய செயல் புரிபவர்களின்
எண்ணிக்கை பெருகிவிட்ட்டது

பிறரை துன்புறுத்தும்,வஞ்சிக்கும்,சுரண்டும்,
ஏமாற்றும் குணங்கள் ஒரு தனி மனிதனின் மனதில் தொடங்கி
,குடும்பத்தில் பரவி ,இன்று உலக அளவில் தீரா வியாதியாய்
மனித குலத்தை நிம்மதியாக வாழ முடியாமல் செய்துகொண்டிருக்கிறது
.
அவ்வப்போது தீயவர்கள்  அழிக்கபட்டாலும் அவர்கள் விட்டு சென்ற பணிகள்
தயவில்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றன என்ன சிகிச்சை அளித்தாலும்
சாகா வரம் பெற்ற முற்றிய  புற்று நோய் செல்கள் போல
.
நாளுக்கு நாள் விதவிதமான தீய செயல்கள் இவர்கள் மூலம் அரங்கேறிகொண்டிருக்கின்றன
.மக்களை ஆட்சி செய்யும் கூடாரத்திலும்
தீயவர்கள் நிறைந்திருப்பதால் அவர்கள் ஆளும் நாட்டு மக்களுக்கும் நிம்மதியில்லை,பாதுகாப்பில்லை,வசதியான வாழ்க்கையுமில்லை
.
வளம் கொழிக்கும் நாடுகள் வளம் குறைந்த நாடு மக்களிடையே சண்டைகளை மூட்டி அவைகளை ஒருவொருக்கொருவர் அழித்துக்கொண்டு சாவதை கண்டு ஆனந்தப்படும் வக்கிர புத்தியே மேலோங்கிகொண்டிருக்கிறது

இதற்க்கு மூல காரணம் இன்று மக்களிடையே ஒழுக்கம் இல்லை,நேர்மை இல்லை,அன்பில்லை,நல்லொதொரு பண்பு எதுவும் இல்லை
.
சுயநலமும்,பொறாமையும்,போட்டி மனப்பான்மையும்,பெருகிவிட்டதால்
மனித நேயமே அற்றுபோயவிட்டது

எண்ணங்கள் நல்லவையோ அல்லது தீயவையோ அவைகள் அழிவதில்லை
.
ஒரு கொடியவன் அழிக்கபட்டால் அவன் உடல்தான் அழிகிறதே தவிர அவன் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிவதில்லை

அதனால்தான் அவன் மீண்டும் இவ்வுலகில் வேறொரு உருவில் தோன்றி மக்களை துன்புறுத்துகிறான்.

எனவேதான் ஒரு மனிதன் இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள தீய குணங்களை விட்டுவிடவேண்டும் திருந்தி வாழ வேண்டும்.
 .
இறக்கும்போது தூய மனதுடன் இந்த உடலை விட்டால் அவனால் இந்த உலகத்திற்கு மீண்டும் துன்பங்கள் நிகழ வாய்ப்பில்லை
தவறுகள் செய்வது மனித இயல்பு

அதனால்தான் திருந்திய  வாழ்க்கை
அமிழ்தினும் இனிது என்றார் நம் முன்னோர். .
.  

Saturday, December 10, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே!
ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

இன்பமாக இருப்பதுதான் நம் ஆன்மாவின் இயல்பு
ஆனால் நடப்பது என்ன?

இறைவன் நாம் அனைவரும் இவ்வுலகத்தில் இருக்கும் வரை
சுகமாக,மகிழ்ச்சியாக வாழவே அனைத்து வசதிகளையும்
இலவசமாகவே வழங்கியுள்ளான்

ஆனால் இன்று உலகில் பெரும்பாலானோர் இறைவன்
அனைவருக்கும் வழங்கிய வசதிகளை தங்களுக்கு
மட்டும்தான் என கருதி சுயநல எண்ணத்துடன் பிறருக்கு
சேரவேண்டிய தனைத்தையும் தங்கள் ஆதிக்கத்தை
செலுத்தி அபகரித்துகொண்டுவிட்டனர்

அதனால் கோடிகணக்கான மக்கள்
அடிப்படை வசதிகள்,சுகங்கள் உரிமைகளின்றி துன்பபட்டுகொண்டிருக்கின்றனர்
.
தன சுகம்,சுயனலதிர்க்காக பிறரை துன்புறுத்தும்
குணம் கொண்டவர்கள் அரக்கர்கள்

ஆனால் எந்த காரணமும் இல்லாமல்
 பிறரை துன்புறுத்தி கொடுமை செய்து
கொலை செய்பவர்கள் ராஷதர்கள்

இவர்களை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால்
 மக்களிடையே ஒற்றுமை வேண்டும்

ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறம்,ஏழை,பணக்காரன்,
என பல பிரிவுகளாக பிரிந்து,அறியாமைக்கும்,
மூட நம்பிக்கைகளில்,மது போதை,சிந்திக்கும்  திறமையின்மை ,அவநம்பிக்கை போன்ற தீய  குணங்களால் ஆட்பட்டு
மதி மயங்கி உள்ளவர்களால் என்ன செய்ய முடியும்?

உலகெங்கும் அவர்களின் போராட்டங்கள் நசுக்கபடுகின்றன.ஒடுக்கபடுகின்றன

இந்நிலையில் அனைவருக்கும் தங்களை
 காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி
இறைவனின் பாதங்களை முழுமையாக சரணடைவதுதான்
.
பாற்கடலில்,பள்ளி கொண்ட அரங்கன்,குரங்கனோடு சேர்ந்துகொண்டு
ராம பிரானாக அவதரித்து அரக்கர்களை அழித்து நல்ல நிர்வாகத்தை மக்கள்
வாழ அளித்தான்

அவன் பதங்களை சரணடைந்தால்
 நம் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும்.
ராமன் பரப்ரம்ம ஸ்வரூபம்.
அனைத்து கடவுள்களும் அவனின்
வெவேறு வடிவங்களே என்பதை உணர வேண்டும்.


பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்
பல வழிகளில் கடவுளை தேடுகிறார்கள்
பலர் தாம் வாழும் இந்த உலகில்  தேடுகிறார்கள்.
சிலர் புத்தகங்களில் ,சிலர் தம் உள்ளத்தில்,
சிலர் மனிதர்களிடத்தில் என தேடல் பலவாறாக உள்ளது.
ஆனால் வெற்றியடைவது கோடியில் ஒருவரே.
அப்படிப்பட்ட சிலர் அந்த இன்பத்தில் மூழ்கி
அமைதியாக இருந்து விடுகின்றனர்.
ஒரு சிலர் அந்த அனுபவத்தை
மற்றவருக்கு சொல்ல முற்படுகின்றனர்.
ஆனால் உலக மாயையில் மூழ்கியிருக்கும் மக்கள்
அவர்கள் கூறுவதை செவி மடுப்பது கிடையாது.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற
ஏதாவது மார்க்கம் கோரி அவர்களை
துன்புறுத்துவதால் அவர்கள் வெறுப்படைந்து
மக்கள் முன் தோன்றாமல் தங்களை
மறைத்துக்கொண்டு வாழுகின்றனர்.
உலக வாழ்வோடு ஒட்டாமல்
உலக கடமைகளை பற்றில்லாமல் செய்து 
இறைவனை தேடுவது பகவத் கீதையில்
பகவான் காட்டிய சுலபமான வழி.
பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும்
மூல காரணம் .
ஒரு பொருள்,ஒரு மனிதர் மீது
பற்று வைக்கும்போதுதான்
,விருப்பு வெறுப்புகள்,ஏமாற்றங்கள்,
துன்பங்கள் ஏற்படுகின்றன
அதனால்தான் பாவ புண்ணியங்கள்
விளைகின்றன
அவைகள் சேர சேர பிறவிகளின்
எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது
இதை உணர்ந்து கொண்டு
ஆன்மாவை தேடும்  பயணத்தில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 

Friday, December 9, 2011

சுத்தம்தான் தான் கடவுள்

கடவுள் பற்றிய இலக்கியங்களின் உண்மை பொருளுணராது 
அவைகளை பழித்தும்,திரித்தும் ,இழிவு படுத்தியும் 
மக்களின் மனதில் கடவுளை பற்றிய காலம் காலமாக 
இருந்த நம்பிக்கைகளை அகற்ற கடும் முயற்சிகளை 
செய்தனர் நாத்திகவாதிகள் .
ஆனால் இன்று ஆன்மிகம் கரை புரண்டோடுகிறது
லட்சகணக்கான மக்கள் விரதம் இருக்கின்றனர்,
ஆலயங்களுக்கு செல்கின்றனர்.
வழிபாடுகள் செய்கின்றனர்.
நாத்திகம் பேசும் பகுதறிவாதிகளின் குடும்பத்தினரே அவர்களின் 
பேச்சை கேட்காமல் ஆன்மீகத்தை நாடுகின்றனர்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது ஆதிக்கம் 
செலுத்துவதும்,பிறரை இழிவுபடுத்துவதும் 
ஆன்மீகவாதிகளை விட இந்த பகுத்தறிவு பேசும்
கூட்டத்தினரிடையே அதிகம் என்பதை சாமானிய
மக்கள் நன்கு  அறிவர்
இன்று அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் 
அவர்களிடம் பிழைப்புக்காக நாத்திக வேஷம் 
போடுகின்றனரே  தவிர 
உண்மையில் அல்ல. 
கடந்த காலங்களில் கடவுள் மீது பய உணர்வு இருந்ததால்தான்
நதிகள்,நீர் நிலைகள்,ஆலயங்கள் ,பொது  இடங்கள் சுத்தமாக 
இருந்தன
.நாத்திகம் பேசிய நயவஞ்சகர்களால் இன்று 
தெய்வமாக போற்றி வணங்கப்பட்ட நதிகளில்,
இறைச்சி கழிவுகள்,சாய கழிவுகள்,மனித மிருக கழிவுகள் ,
ரசாயன கழிவுகள் அனைத்தையும் விட்டு நாசமாக்கிவிட்டனர்
.
தங்கள் நதிகளிளிருந்துதான் குடி நீரை பெற்று வாழ்கிறோம் என்பதை 
சிந்தித்து பார்ப்பதேயில்லை .
ஏரிக்கரைகள்,குளக்கரைகள் நதிகரைகள்.கடற்கரைகள் 
,காலியாக உள்ள இடங்கள் கட்டிடங்கள்,
சுற்றுலாதலங்கள்,ஆலய சுற்றுபுரங்கள் 
 என ஒரு இடம்கூட மிச்சம் வைப்பதே இல்லை 
எல்லாவற்றிலும், சிறுநீர்கழித்தும் ,மலம் கழித்தும்,
குப்பைகளை கொட்டியும் அசுத்தம் செய்வதையே
தங்கள் இயல்பாக கொண்டுவிட்டனர்.
அரசுகள் கழிப்பிடங்கள் கட்டி தந்தாலும்
முறையாக  பயன்படுத்துவதில்லை.
மேலும் அரசும் அவைகளை தொடர்ந்து பராமரிப்பதில்லை. 
சுத்தம்தான் தான் கடவுள் 
அதை புறக்கணித்துவிட்டு மற்ற புற வழிபாடுகள் 
அனைத்தும் அனுசரிப்பது நம்மை நாமே 
ஏமாற்றி கொள்ளும் செயலாகும் 
இயற்கையை அசிங்கபடுத்தும் இந்த மூடர்களுக்கு
இறைவன் அருள் கிடைக்கும் என்பது கானல் நீரே .

Thursday, December 8, 2011

நிலையற்ற உடலின் துணை கொண்டு நிலையான இறைஇன்பத்தை அடையத்தான் இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது

நமக்கு முடிவு நெருங்கிவிட்டது என 
உணர்த்த தலை முடி நரைக்கும்
ஆனால் அதை உணராது இன்று மக்கள்
நரை மயிருக்கு சாயம் பூசி 
முதுமைகோலத்தை மறைக்க 
பார்க்கிறார்கள் 
hair will die at any moment 
அழியபோகும் அந்த மயிருக்கு 
hair dye பூசுவதிலேயே பெரும் பணத்தை 
செலவழிக்கிறார்கள் 
இருந்தாலும் சில நாட்களுக்கு பிறகு சாயம் வெளுத்துவிடுகிறது 
ஒரு கால கட்டத்தில் ஒரு சாயமும் பயன்படுவதில்லை 
இன்னும் சிலர் தலை முழுவதும் வழுக்கை ஆகிய பின்னும்
விக் வைத்துகொண்டு திரிகின்றனர்
பணம் படைத்தவர்கள் மண்டையில் மயிர் முளைக்க 
பலவிதமான சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர்
மயிரை அறுவை சிகிச்சை மூலம் தலையில் நடும்
படலமும் அரங்கேறிகொண்டிருக்கிறது 
இப்படியாக உடலின் பழுதடைந்த ஒவ்வொரு 
பகுதியையும் சீர்படுத்த காலத்தையும் பணத்தையும் 
வாழ்நாள் முழுவதையும் வீணடிக்கின்றனர்
இவர்களை என்னவென்று சொல்வது?
பிறர் தம்மை மெச்ச வேண்டும் என்று இவர்கள்
இவ்வாறு செய்கின்றனர்
நிலையற்ற  உடலின் துணை கொண்டு நிலையான 
இறைஇன்பத்தை  அடையத்தான் 
இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது
என்று இவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசினால்
நம்மை பயித்தியக்காரர்கள் என்றும் ,
இவ்வுலக வாழ்க்கை எல்லா சுகங்களையும் 
அனுபவிப்பதற்கே என்றும் திமிராக பேசுகின்றனர்
ஆனால் வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களோ,
தீர்க்க முடியாத நோய்களோ,இழப்புகளோ 
ஏற்பட்ட பின்புதான் இவர்களுக்கு கடவுளை 
பற்றிய நினைப்பே வரும்
ஆனால் அப்போதும்கூட திருந்தாதவர் 
பலர் உண்டு. இவ்வுலகில் 


உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?




கிடைத்தற்க்கரிய இந்த மனித பிறவி கிடைத்தும்
இந்த மனித குலம் பிறவியின் நோக்கத்தை மறந்து
வாழ்நாள் முழுவதும் கிடைத்ததைஎல்லாம்
வயிற்றுக்குள் தள்ளுவதுதான் தன கடமையாக
நினைத்துக்கொண்டு மடமையுடன்
செயல்பட்டுகொண்டிருப்பது
வேதனைக்குரிய விஷயம்

ஒருநாள் பிணமாக போகும் மனிதன் பிற உயிர்களை கொன்று
அவைகளை விதவிதமாக சமைத்து தன உடலை கொழுக்க வைக்கின்றான்.
கொழுத்த உடல் பருத்து நோய்களின் இருப்பிடமாகி மடிந்து போய்
பருந்துகளுக்கும்,நரிகளுக்கும்,நாய்களுக்கும்,நெருப்புக்கும்  இரையாகி
போவதை தினம் தினம் கண்ணுற்றும் அவன் மனதில் எந்த சலனமும் ஏற்படுவதில்லை

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் .
உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே
என்றார் திருமூலர்

உயிர் அழியாமலிருக்க உடலை வளர்க்கத்தானே சொன்னார்
காண்பதனைத்தையும் தின்று கொழுக்க அல்லவே

உடலை வளர்த்தால் மட்டும் போதாது
உயிரையும் வளர்க்க வேண்டும் என்று சொன்னதை
மனிதர்கள் ஏன் மறந்தனர்?

உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?

இந்த ஊனுடலில் உத்தமன் கோயில் கொண்டுள்ளான்
என்பதை அறிந்து தெளிந்ததை நமக்கெல்லாம்
புரியும்படி  விளக்கியுள்ளார்

அந்த உயிரின் துணை கொண்டு இந்த உடலில் உறைந்து நம்மையும்
இந்த உலகனைத்தையும் இயக்குகின்ற ஒலி மற்றும்  ஒளி வடிவான
இறைவனை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
புற இருள் நீங்க உலகில் தீபம் ஏற்றி வழிபடுதலும்
அக ஒளியான இறைவனை காண சத்தியத்தையும்
கடைபிடிக்க சொன்னார்கள் ஆன்றோர்

கார்த்திகை தீப திருநாளில் இந்த சிந்தனையை மனதில் நிறுத்தி
கிடைத்தற்கரிய இப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குவோம்

வயிற்றை மட்டும் நிரப்பும் பணியை மட்டும் எந்நேரமும் செய்யாமல்
மணிவயிறு வாய்த்த கோசலை மகனான ராம நாமத்தை
உச்சரித்து உய்வடைவோமாக 


Sunday, December 4, 2011

என்று மறையும் இந்த விரோத போக்கு?


என்று மறையும்  இந்த விரோத போக்கு?
முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் மீது பகைமை கொண்டு 
அவர்களை பழி தீர்ப்பதும் அதற்க்கு பதிலாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மீது பழி தீர்ப்பதும்
பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த மோதல் போக்கில் அழிவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்களும் அந்த நாட்டு வளங்களும்
 போரினால் பெரிதும் பாதிக்கபடுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமே 

இரு மதத்தினரும் இந்து மதத்தை இழிவுபடுத்துவதையும் மக்களின்
அறியாமையையும் ஏழ்மையையும்,ஒரு சிலரின் சுயநலத்தையும் 
பயன்படுத்தி மதம் மாற்றம் செய்வதையும் சமீப காலமாக 
அதிகரித்து வருவதும் அதனால் இந்திய நாட்டில் பல இடங்களில் 
சமூக  அமைதி குறைந்து வருவதையும் நாம் பார்க்கின்றோம் 

மதத்தின் பெயரால் இன்று மக்களிடையே ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையும் ,அவர்களின் மனதில் மிருக உணர்ச்சியை தூண்டிவரும் 
ஒரு சில விஷமிகள் ஒற்றுமையாய் வாழும் மக்கள் ஒருவொருக்கொருவர் 
அடித்துக்கொண்டு அழிவதற்கு வழி வகுப்பதும்  தினசரி நிகழ்வாகிவிட்டது 

கடவுள் நம்பிக்கையில்லா சீன அரசும் அஹிம்சையை போதிக்கும் புத்த மதத்தை சார்ந்த திபெத்தை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை கொடுமைபடுத்தியதால்  லட்சகணக்கில் அகதிகளாக வேறு நாடுகளில் அந்நாட்டு மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் 

இன்று அநேகமாக உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வெவ்வேறு இனங்களை சேர்ந்த தலைவர்கள் மற்ற இனங்களை கொன்று துன்புறுத்தி அழித்து இன்பம் காண்பது தொடர்கதையாகிவிட்டது 

விலங்குகளை போல் அறிவில்லாமல் ,ஒருவொருகொருவர் அன்பு 
பாராட்டாமல் சுயநலத்துடன் பிறரை கொடுமைபடுத்தி,பிறரை வஞ்சித்து 
வாழ்க்கை நடத்தவா இந்த உலகை இறைவன் படைத்தான்?

நாம் கேட்காமலேயே கோடிகணக்கான இன்பங்களை இறைவன் அள்ளி அள்ளி தந்தது மானிடம் முழுவதும் அன்போடு ஒருவொருகொருவர் உதவி செய்துகொண்டு மகிழ்வோடு வாழவே 

ஆனால் இங்கு நடப்பதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது
மனதில் இரக்கமுள்ளவன் உறங்கமுடியவில்லை 
உருக்கமுள்ளவன் இறைவன் திருவடிகளிடம் இந்நிலை மாற பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை 

அன்பர்களே அனைவரும் இந்நிலை மாற தினமும் காலையில் எழும்போது 
தீய சக்திகளின் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி பகைமையற்ற  பொழுதாக தினம் விடிய வேண்டும் என்று ஒரு கணம் இறைவனிடம் இந்த உலகிற்காக மன்றாடுங்கள்

அதில்தான் அனைவரும் நலமும் அடங்கியுள்ளது. 

பாசம் என்பது சுயநலம் கொண்டது அன்பு சுயநலமற்றது

பாசம்தான் நம்மை பந்தத்தில் சிக்க வைக்கிறது 
பாசம்தான் நம்மை பாவம் செய்ய தூண்டுகிறது
பாசம்தான் நம் கண்களை மறைக்கிறது 
அப்படியானால் பாசம் இல்லாவிடில் இந்த உலகம் இயங்க முடியுமா?
ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் இல்லாவிடில் அது ஆரோக்கியமான 
மனநிலையில் வளரமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது
பாசம் தேவைதான்
ஆனால் அளவுக்கு மீறிய பாசம் பாசம் காட்டுபவரையும்
பாசத்திற்குஆளானவரையும் ஒரு சேர அழித்துவிடும் 
மகாபாரதத்தில் திருதராஷ்ட்ரன் தன் மகன் துரியோதன் மீது வைத்த 
அளவுகடந்த பாசத்தால் அவன் செய்த தீய செயல்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்ததால் அவன் தீயவனாகி தீய  செயல்களை செய்து 
அவனும் அவன் வம்சமும் அழிய காரணமாகிவிட்டான்
ராமாயணத்தில் கைகேயி தன் மகன் பரதனிடம் வைத்த 
பாசத்தால் தன் கணவனை இழந்தாள்,தன் மகனின் அன்பையும் இழந்தாள்
இப்படியாக ஒவ்வொரு குடும்பத்திலும்  இதுபோன்ற சம்பவங்கள்  
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன
ஆனால் யாரும் தங்களை திருத்திகொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது 
எல்லோரிடம் அன்பு காட்ட வேண்டும் 
பாசம் என்பது சுயநலம் கொண்டது 
அன்பு சுயநலமற்றது
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும் 


Saturday, December 3, 2011

பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால் பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்

ஒரு கவிஞன் எழுதினான்
தந்தை தவறு செய்தான்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம்
பந்தம் வளர்த்துவிட்டோம் என்று
பத்து மாத பந்தம் தாயுடன்
பிறக்கும்போதே பூர்வ ஜன்ம பந்தம்
பிறந்தவுடன் ஏற்ப்படும் பந்தங்கள் கணக்கற்றவை
உடலோடு தோன்றும் பந்தங்கள் மரணத்தோடு முடிவடைந்துவிடும்
ஆனால் மனதோடு தோன்றும் பந்தங்கள் என்றும் அழிவதில்லை
அவைகள் பிறவிதோறும் நம்மை தொடர்கின்றன
இதிலிருந்து எப்படி விடுபடுவது ?
உயிருடன் இருக்கும்போதே பந்தங்களை
உரிய முறையில் நீக்கிகொள்ள வேண்டும்
நம் கடமைகளை சரியாக செய்துவிட்டால்
ஒவ்வொரு பந்தமாக நம்மை விட்டு நீங்கிவிடும்
உதாரணத்திற்கு ஒரு தாய் தன் குழந்தையை
நன்றாக,ஒழுக்கமுள்ளவனாக வளர்க்க வேண்டும்
அதுபோல் ஒவ்வொருவரும் அவரவர்களின்
கடமைகளை சரியாக செய்து முடிக்க வேண்டும்
தவறினால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள்
மிகவும் மோசமாக இருக்கும் என்பதை
இன்றைய சமுதாயத்தில் பெருகிவிட்ட
ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களுமே இதற்க்கு சான்று
என்பதை அனைவரும் அறிந்ததே
அவ்வாறு செய்யாமல் பந்தங்களிலிருந்து
நம்மை விடுவித்துக்கொள்ள முடியாது
பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால்
பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்
நம்மிடமிருந்து பிரிக்கமுடியாத பந்தம் ஒன்று உண்டென்றால்
அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு
மற்ற பந்தங்கள் அனைத்தும் தற்காலிகமே
நாம் இறைவனை நினைத்துகொண்டே இருந்தால்
மற்ற பந்தங்களெல்லாம் தானே விலகிவிடும்.
இல்லாவிடில் இறைவன் நீக்கிடுவான்

அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் அதிகரிக்கும்

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தம்மையும்
இந்த உலகையும் படைத்த ஒருவனை
இறைவன்என்று நம்புகிறார்கள்
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தங்களை
கூறிகொள்ளும் நாத்திகர்கள் கூட தங்களுக்கு
புரியாமல் இருக்கும் விஷயங்களை இயற்க்கை என்று
பெயர் சூட்டி மக்களை குழப்புகின்றனர்
அறிவுடையவன் அவனை பற்றி
அறிந்து கொள்ள பல சாத்திரங்களை
படித்து பல வழிகளில் இறைவனை புரிந்து
கொள்ள கடும் முயற்சிமேற்கொள்ளுகிறான்
அவனுக்கு குழப்பம்தான் முடிவில் மிஞ்சுகிறது
ஏனென்றால் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வழியை கூறுகின்றன
ஒரு சாத்திரம் கூறும் வழியை மற்றொரு
சாத்திர ஆசிரியர் ஏற்றுகொள்ளமறுப்பதுடன்
கண்டிக்கவும் செய்கின்றார்
அதனால் ஒவ்வொரு முறையையும்
பரிசீலித்து பார்ப்பதிலேயே அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது
பலபுராணங்களை இயற்றிய வியாச பகவானே
மன அமைதியின்றி பகவான் கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் பக்தி இலக்கியத்தை இயற்றி
மன அமைதி அடைந்தார்.என்பது உண்மை
சாத்திரங்களை வாழ்நாள் முழுவதும் படித்துகொண்டிருப்பதில்
யாதொரு பயனும் இல்லை
அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும்
படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும்
அதிகரிக்கும் அதனால் ஆன்மீகத்தில்
எந்த முன்னேற்றமும் ஏற்ப்படாது
ஏதாவதொரு வழியை பின்பற்றி நம்பிக்கையுடன்
மன உறுதியுடன் இறைவனை அடைவதற்கு
முயற்சி செய்பவனே வெற்றி காண்கிறான்
பாமரர்கள் அவன் மீது கள்ளமற்ற உள்ளத்துடன் பக்தி செய்து
மிக சுலபமாக அவன் அருளை பெற்றுவிடுகின்றனர்
என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?
ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்து மரிக்கிறோம்
இந்த இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை குழப்பங்கள்
இறைவன் நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியதனைதையும்
நாம் இன்பமாக வாழ அளித்துள்ளான்
ஆனால் நம் ஏன் அவன் தந்தஇன்பங்களை அனுபவிக்காமல்
துன்ப கடலில் மூழ்கி கிடக்கிறோம் ?
எல்லாம் இருந்தும் அதை முழு திருப்தியுடன்
அனுபவிக்காமல் இல்லாததை நினைத்து
ஏங்குகிறோம்?
நம்மால் ஒரு அளவிற்குமேல் எதையும்
அனுபவிக்கமுடியாது என்று தெரிந்தும்
பிறரின் சொத்துக்களை அபகரித்து ஏன்
மற்றவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கிறோம்?
எல்லாவற்றிற்கும் காரணம் நம்முடைய சுயநலம்தான்
அந்த தீய அக்குணம் நம்மை விட்டு போகும்வரை
நாமும் நிம்மதியாக இருக்கமுடியாது
மற்றவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது
இறைவா நீதான் உன் படைப்புகளுக்கு
நல்ல குணத்தை அருள வேண்டும்

Friday, December 2, 2011

உன் வேதனைக்கு பிறரை நிந்தனை செய்வதை நிறுத்து

இறைவா உன்னை நினைக்க முடியாமல்
துன்பங்களை அடுத்தடுத்து தருகிறாயே
துன்பங்களை மறக்க முடியவில்லை
துன்பங்களை பொறுத்துகொள்ளும் உடல் உறுதியோ
மன உறுதியோ இல்லை
ஒரு துன்பம் நீங்கினால் அடுத்த துன்பம்
வாசலில் தயாராக நிற்கிறது
உடலில் நோய் என்ற நிலை மாறி
உடலே நோயாக மாறிவிட்டதே
எல்லாம் இந்த உடல் மீது வைத்த
பற்றினால் விளைந்தது
இந்த உடலுக்குள் உள்ளத்திற்குள்
உறைந்து என்னை இயக்கும் உன் மீது
பற்று வைக்காமல் வந்த வினைதான் இது
மனமே இனியாவது உன் கவனத்தை
இறைவன் மீது செலுத்து
உன் துன்பங்கள் குறையும்
அவன் நாமத்தை உச்சரி
அந்த நாமத்தின் நாதத்தின் மீது
சிந்தனையை செலுத்து
உன் வேதனைக்கு பிறரை நிந்தனை
செய்வதை நிறுத்து
வேதனைகள் குறையும்
வாதனைகள் நீங்கும்
பயிரை காக்கும் மழை போல்
உயிருக்குயிரான இறைவன்
உண்மையான பக்தனை காப்பான். .

இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்

இறைவன் தன்னை அறிய முயற்சிப்பவர்களுக்கு
உதவ தயாராக காத்துகொண்டிருக்கிறான்
ஆனால் யாரும் அவனை கேட்பதுமில்லை,விரும்புவதுமில்லை
அவனிடம் செல்பவர்கள் எல்லாம் தங்கள் கோரிக்கைகளை
நிறைவேற்றித்தருமாறு மட்டுமே கேட்கின்றனர்
அதற்காக எத்தனை துன்பங்களை வேண்டுமானாலும்
அனுபவிக்க தயாராக இருக்கின்றனர்
அங்க பிரதத்ஷனம் செய்ய வேண்டுமா?
மொட்டை போட வேண்டுமா?
பல நூறு கிலோமீட்டர் நடந்து பாதயாத்திரை செல்ல வேண்டுமா?
ஆடு கோழி பலி கொடுக்க வேண்டுமா?
இல்லை நர பலி கொடுக்க வேண்டுமா?
தங்க தேர் இழுக்க வேண்டுமா?
யாகம்,ஹோமம் பண்ண வேண்டுமா?
கிரி வலம் வர வேண்டுமா?
இல்லை தீ மிதிக்க வேண்டுமா?
இல்லை உடல் முழுவதும் அலகு குத்திக்கொள்ள வேண்டுமா?
மண்டையில் தேங்காயை உடைத்துக்கொள்ள வேண்டுமா?
இன்னும் எத்தனையோ பிரார்த்தனைகள்
கணக்கே இல்லை
இவையெல்லாம் எதற்கு செய்ய வேண்டும்
நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல்
நாம் ஏழையாகவோ,செல்வந்தனாகவோ இருக்கபோகிறோம்
நமக்கு நல்ல வாழ்க்கை அமைவதும் அதை பொறுத்ததே
பின் எதற்காக இத்தனை துன்பங்களை வேண்டி விரும்பி
ஏற்றுக்கொண்டு துன்பப்படவேண்டும்
நம் விருப்பம் நிறைவேறிவிட்டால்
அத்தோடு முடிவடைந்துவிடுமா நம் கோரிக்கைகள்?
ஒரு ஆசை முடியும் முன்பே அடுக்கடுக்காக ஏராளமான
ஆசைகள் வரிசையில் நிற்கின்றனவே?
ஆனால் இதையெல்லாம் யாரும் எண்ணி பார்ப்பதில்லை
அவர்களை சுற்றி இருப்பவர்களும் அவர்களை சிந்திக்க விடுவதில்லை
பொறுமையாக சிந்தித்தால் இவையெல்லாம் தேவையா என்று புரியும்
இந்த மாயையிலிருந்து விடுபடுவது மிக கடினம்
அதற்க்கு இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்
அப்போதுதான் வெற்றி கிடைக்கும்

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?
நிச்சயம் கிடைக்க போவதில்லை
எவ்வளவு காலம்தான் புராணங்களையும் பக்தி நூல்களையும் படித்து கொண்டிருப்பது?
எவ்வளவு காலம்தான் சித்தர்களையும் சாமியார்களையும்
கடவுளை காட்டுவார்கள் என்று நம்பி வாழ்நாளை வீணாக்கி கொண்டிருப்பது?
யாரும் எதுவும் காட்டபோவதில்லை
எவ்வளவுதான் சாத்திரங்களை கற்றாலும்
ஒன்றும் கடவுளை பற்றி அறிந்துகொள்ளமுடியாது
மனம் அடங்காமல் ஒன்றும் தெளிவாகாது
சினம் அடங்காமல் உள்ளத்தில் அமைதி பிறக்காது
ஆசைகள் இருக்கும்வரை மனம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்
ஆசைகளை அழிக்கமுடியாது. முதலில் அதன் எண்ணிக்கையை குறைத்து
இறைவனிடம் மட்டும் ஆசையை வளர்த்துகொள்ளவேண்டும்
அந்த ஆசை பலன் கருதா பக்தியாக கனிய செய்ய வேண்டும்
இறைவனிடம் பக்தி ஒன்றினால் மட்டுமே
அவனை அடைய முடியும்
ஒன்பது விதமான பக்தியில் நண்பனாக,குழந்தையாக தந்தையாக என
அவரவருக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து
இவ்வுலக கடமைகளை அந்த பாவனையுடன் ஆற்ற பழக வேண்டும்
அதை விடுத்து மலருக்கு மலர் தாவும் வண்டு போல்
எந்த முறையிலும் நிலைத்து நிற்காமல் போய்கொண்டிருந்தால்
எதுவும் சித்திக்காது
வாழ்நாளும் முடிந்துவிடும்

Thursday, December 1, 2011


இன்று யோகி ராம்சுரத்குமார் பிறந்தநாள்
காசியில் பிறந்து அண்ணாமலையில் சுற்றி திரிந்து
அங்கேயே அயிக்கியமான மகான்
ராம நாமத்தை ஜபித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்
என்று நம் கண் முன்னே நிரூபித்து காட்டியவர்
அவர் காட்டிய வழியில் சென்று நாமும் உய்வோம்

Wednesday, November 30, 2011

உலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்
இன்று நோயில்லாத மனிதர்களே இல்லை
நோய்கள் பலவிதமான அவதாரங்களை எடுத்து
மனிதர்களை வாட்டி வதைக்கின்றன
பிறக்கும்போதே நோயுடன் பிறக்கும் குழந்தைகள்
எப்போதாவது வந்து போகும் நோய்கள்
வந்தபிறகு நிரந்தர பாதிப்பை விட்டு செல்லும் நோய்கள்
வாழ்நாள் முழுவதும் வேதனைபடுத்தும் நோய்கள்
உணவிற்கு பதில் மருந்துகளே உண்டு வாழவேண்டிய நோய்கள்
மனதை பாதிக்கும் நோய்கள்
உடலை பாதிக்கும் நோய்கள்
மனம் உடல் இரண்டும் பாதிக்கும் நோய்கள் இப்படியாக நோய்களால்
மனித குலம் மிகுந்த துன்பங்களை சந்திதுகொண்டிருக்கிறது என்பது உண்மை
நோய் வந்தால் நோயால் பாதிக்கபடுபவர் மட்டும் துன்பபடுவது மட்டுமல்லாமல்
பெற்ற்றோர்கள் அவர்களை சார்ந்தவர்களும் துன்பபடுவது இயற்கையே
நோய்க்கு மருத்துவ சிகிச்சைகள் ஒரு புறம் இருக்க, மந்திரம்
,ஜோதிட பரிகாரம் மாந்திரீகம் கோயில்கள்,போலி சாமியார்கள் என தீர்வை தேடி அலைவது வேறு மக்களை அலைக்கழிப்பது நடக்கிறது
இப்படி நோய்களுக்கு ஏழைகள், செல்வந்தர்கள் என்ற விதிவிலக்கு கிடையாது
இந்த உலகில் பிறந்தவர்கள் நோயில்லாமல் வாழமுடியாதா?
நிச்சயம் முடியாது .நம்முடைய முன் வினைபயன்களால் நோய் வருகிறது
அதை பொறுமையுடன் அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்.
இனிமேலாவது தவறுகள் செய்யாவண்ணம்
வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்
செல்வம் உள்ளவர்கள் துன்பபடுவோர்க்கு உதவவேண்டும்
உடல் நலம் உள்ளவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்
எதுவும் செய்ய இயலாதவர்கள் இறைவனிடம் பிறர் துன்பம் தீர பிரார்த்தனை செய்ய வேண்டும்.
உலகத்திலேயே தீர்க்கமுடியாத பிணி பிறப்பும் பசியும்தான்
பிறந்தால் இறக்கவேண்டும் இறந்தால் மீண்டும் பிறக்கவேண்டும்
பசி உண்டால் நிற்கும் செரிமானம் ஆகியவுடன் மீண்டும் பசிஎடுக்கும்
தீர்க்க இயலா இரண்டு பிணிகளையும் தீர்க்க
இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை
மற்ற பிணிகளுக்கு நிச்சயம் இந்த உலகில் மருந்துண்டு. அதை தேடி பெறலாம்.

துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்

என்னாட்டவருக்கும் இறைவா என்கிறீகள்
அப்போது அந்த சிவபெருமான் மற்ற மதத்தினருக்கும் இறைவன்தானே
ஹிந்துக்கள் அவனுக்கு குழந்தைகள் என்றால் அவர்களும் அவனுக்கு குழந்தைதானே
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை
ஒருவன் ஆன்மீகவாதியாக இருக்கிறான்
ஒருவன் நாத்திகனாக இருக்கிறான்
ஒருவன் பண்புள்ளவனாக இருக்கிறான்
இவன் தீயவனாக இருக்கிறான்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருக்கின்றனர்
ஆனால் இறைவனுக்கு அனைவரும் ஒன்றே
இறைவனை அறிந்துகொண்டால்தான் மற்றவர் மீது விருப்பு வெறுப்பு அகலும்
தன்னை அறிந்தவனுக்குதான் பிறரை அறிந்துகொள்ளமுடியும்
அனைவரையும் இணைப்பது அன்பு ஒன்றுதான்
தனக்கு நன்மை செய்பவனும்,தன்னை வெறுப்பவனும் ஞானிகளுக்கு ஒன்றாகத்தான் தெரிகிறார்கள்
துஷ்டத்தனம் செய்யும் குழந்தைகளை தந்தையான இறைவன் பார்த்துக்கொள்ளுவார்
மற்றவர்களை திருத்தும் பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டு அவனிடம் பக்தி மட்டும் செலுத்துங்கள்
மற்ற மதத்தினரிடம் அவர்கள் செய்வது தவறேயாயினும் அவர்களிடம் விரோதம் பாராட்டுவதை விடுத்து நம் மதத்தினரின் நம்பிக்கைகளை பலபடுத்தும் செயல்களை ஊக்குவித்தால் நன்மைகள் விளையும்

தியாகம்தான் உலகில் உயர்ந்தது

மரங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
என்ன மரங்கள் என்றால் மட்டமா?
மனிதனுக்குள் ஆத்மா இயங்குவதுபோல்
ஒவ்வொரு மரத்திற்கும் உயிர் இருக்கிறது
.அதனுள்ளே ஆத்மா இருக்கிறது.
மரமும் ஒரு பிறவிதான்
பாகவதம் படித்தால் தெரியும்
நிர்வாணமாக திரிந்த இரு மனிதர்கள் ஆடையில்லாத
மரமாக பிறவி அடைந்தனர்
அவர்களுக்கு கண்ணபிரான் முக்தி அளித்தான்
மரங்கள் எங்கும் செல்வதில்லை.
ஆனால் அது வளருகிறது,பூக்கிறது,காய்க்கிறது,
கனிகள் தருகிறது,அடுத்த தலைமுறைக்கு விதைகள் தருகிறது.
வெயில் நேரத்தில் நிழல் தருகிறது.கால்நடைகளுக்கு உணவாகிறது.
ஆயிரகணக்கான பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் தங்க இடம் தருகிறது
.மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தருகிறது.
அவன் பிறக்கும்போது தொட்டிலாகவும் வாழும்போது கட்டிலாகவும்,உட்காரும்போது இருக்கையாகவும்,அவன் மரிக்கும்போது பாடையாகவும்,அவனை எரித்து சாம்பலாக்க விறகாகவும் உதவுகிறது.
மனிதர்கள் வெளிவிடும் கரிமிலவாயு போன்ற நச்சு வாயுக்களை
உட்கொண்டு உயிரினம் வாழ பிராணவாயு தருகிறது.
இப்படி தனக்கு என்று எதையும் வைத்துக்கொள்ளாமல்
அனைத்தையும் தியாகம் செய்துவிடுகிறது
அதனால்தான் அதற்க்கு வேண்டியதனைத்தையும்
இறைவன் அது இருக்கும் இடத்திற்கே அளித்து விடுகிறான்.

இவ்வுலகில் தனக்கென்று எதுவும் வைத்துகொள்லாமல் பிறருக்கேன்றே வாழும் உத்தமர்கள் இன்னும் இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது

ஆனால் மனிதன் வாழ்நாள் முழுவதும் சுயநலத்துடன் பொருளை தேடி அங்குமிங்கும் அலைந்து எதிலும் திருப்தியில்லாமல் திரிந்து மனதில் இருள் சூழ்ந்து மடிந்துபோகின்றான்
மரத்தை பார்த்தாவது இனியாவது மனிதர்கள் திருந்தட்டும்

தியாகம்தான் உலகில் உயர்ந்தது அதனால்தான் இந்த உலகம் அழியாமல் காப்பாற்றப்பட்டுவருகிறது

இறைவன் எங்கிருக்கிறார்?

இறைவன் எங்கிருக்கிறார்?
சங்கரர் சொல்கிறார்,நீயே கடவுள்
ராமானுஜர் சொல்கிறார் ,நீ பகவானுக்கு சரீரம்,
அவனிடம் பக்தி பண்ணு என்கிறார்
மத்வர் சொல்லுகிறார் பகவான் வேறு நீ வேறு
நீ அவனுக்கு தொண்டு செய்பவன் மட்டுமே
சதாசிவ ப்ரம்மேந்திரர் சொல்லுகிறார்
எனக்கு எல்லாம் ப்ரம்மாமாக காட்சியளிக்கிறது
ராமதாசர் சொல்கிறார் இந்த அண்டமனைத்தும் ராம மயம்
கண்ண பரமாத்மா சொல்கிறார் காண்பதனைத்தும் நானே ,
அதன் உள்ளிருந்து இயக்குவதும் நானே என்கிறார்
பொதுவாக எது எப்படி இருந்தாலும் இறைவன் ஆலயங்களில்
உறைந்து அருள் செய்வதாக நம்புகின்றனர்.அங்கு சென்று வழிபாடு என்ற பெயரில் எதையோ நினைந்து,எல்லோரும் செய்வதை செய்து விட்டு தங்கள் ஆன்மீக கடமை முடிந்துவிட்டதாக திருப்திபட்டு கொள்கின்றனர்

இறைவன் எல்லா இடத்திலும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதாக வேதங்கள் சொல்கின்றனவே ,ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆன்மீக பிரசாரகர்களை கேட்டால் ஒரு உதாரணம் சொல்கின்றனர்

நமக்கு பால் வேண்டுமென்றால் பசுவின் வாலையோ அல்லது கொம்பையோ பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா ? அல்லது அதன் மடியின் காம்புகளை பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா என்று கேட்கின்றனர்.
இறைவனின் சக்தி எல்லா இடத்திலும் நிறைந்திருந்தாலும் கோயிலில் பல காரணங்களால் அங்கு அதிக அளவில் சேமித்து வைக்கபட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

தன்னிடம் கடவுள் உள்ளதை உணர்ந்த ஆத்ம ஞானிகள் எங்கும் செல்வதில்லை.
அவர்களுக்கு எதுவும் தேவையில்லை

சராசரி மனிதனுக்கு தேவையில்லாமல் எதுவும் இல்லை
அதனால் அவன் தேவைகள் நிறைவேறும்வரை ஒவ்வொரு கோயிலாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றான்
எல்லாம் உண்மையே .
அவரவர்களின் ஆன்மீக முதிற்சிகேர்ப்ப இறைவனை அடையும் வழியை
தேர்ந்தெடுத்து கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது

Tuesday, November 29, 2011

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

இன்று ஆலயங்களுக்கு மக்கள் அதிகம் செல்லுகிறார்கள் ஆலய விழாக்களுக்கு மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள்
விரதம் இருந்து மாநிலம் விட்டு மாநிலம் ஆலயங்களுக்கு செல்லுகிறார்கள்
இருந்தும் நாட்டில் கொள்ளை,திருட்டு,பிறரை ஏமாற்றுதல் ,பெண்களை கொடுமைபடுத்துதல் கொலைசெய்தல், போன்ற குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.
விரதம் இருக்கும் காலத்தில் மட்டும் மாமிச உணவை,குடியை,போதை பொருளை தவிர்க்கிறார்கள்
எதற்காக செல்லுகிறீர்கள் என்று கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது
நினைத்த காரியம் நிறைவேறுகிறது என்றெல்லாம் சொல்லுகிறார்கள்

விரதம் முடிந்த பிறகு சில நாட்கள் விட்டிருந்த கெட்ட பழக்கங்களை எல்லாம் வருடம் முழுவதும் ஒழுங்காக கடைபிடித்து ,தீய வழியில் வாழ்க்கை வாழ்ந்து தானும் அழிந்து தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள்
இதனால் இன்று சிறைசாலைகளில் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது.
நீதிமன்றங்களில் வழக்குகள் லட்சகணக்கில் தேங்கி கிடக்கின்றன
மக்களிடம் ஒழுக்கம் இல்லை மாறாக ஒழுக்க கேடுகள் பெருகிவிட்டன
ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான்
இதனால் யாருக்கு நன்மை?
இந்த ஆன்மீகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்குதான் நன்மை
ஒரு மனிதன் எதை செய்தாலும் அதன் பதிவுகள் அவன் மனதில் நிலைத்துவிடும்
நன்மையோ அல்லது தீமையோ இரண்டும் பதிவாகும்
ஒரு மாதம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாள் நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டு பிறகு அதற்க்கு நேர்மாறான வாழ்க்கை வாழ்வதால் எந்த பயனும் இல்லை
தீயவை தீய பயத்தலால் தீயினும் அஞ்சப்படும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்
தீ என்ற சொல் நெருப்பு .
நெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாகிவிடும்
அதைபோல் தீய எண்ணங்கள் அதன் விளைவால் தீய செயல்கள்,தன்னையும், தன் குடும்பத்தையும் அழித்துவிடும்.
உண்மையான் பக்தி இறைவனிடம் இருந்தால்தான்
மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும்,அன்பு தோன்றும்,பண்பு தோன்றும்
அதை விடுத்தது வெளிதோற்றத்தில் மட்டும் பக்தனாக வேஷம் போடுவதால்
போடுபவனுக்கும் பயனில்லை இந்த சமூகத்திற்கும் பயனில்லை.

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

Monday, November 28, 2011

விழித்துகொள்ளாவிடில் நஷ்டம் நமக்குதான்

பிறவியை பெருங்கடல் என்கிறார் திருவள்ளுவர்
பெருங்கடல் என்றால் ஆழம் காணமுடியாதது
ஆபத்துகள் நிறைந்தது
கரையை விட்டு புறப்பட்டால் மறு கரையை காண்போமா
அல்லது நடு கடலில் மூழ்கி விடுவோமா என்று யாருக்கும் தெரியாது
கடலில் திமிங்கிலங்களும்,சுழல்களும் ,சுறாக்களும் போன்ற
எண்ணற்ற பேராபத்துக்கள் நிறைந்துள்ளது
அதைபோல்தான் நம் வாழ்க்கையும்
நாம் நம் ஆயுட்காலத்தில் உறக்கத்தில் தினமும்
அனைத்தையும் மறந்து கிடக்கிறோம்.
அப்போது நம் உடலையும்,உயிரையும்,உடைமைகளையும்
பாதுகாப்பது யார்?
ஆனால் நாம் விழித்திருக்கும் நேரம் நம்முடைய உடலையும்,உயிரையும் ,உடைமைகளையும் மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறோம்
சில நேரங்களில் நம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தடம் புரண்டு விடுகின்றனவே,
அது ஏன் என்றுயாரும் நினைத்து பார்ப்பதில்லை
நம்முடைய சக்தியையும் மீறி எதோ ஒரு சக்தி நம்மை ஆட்டி படைக்கிறது
என்பதை ஏற்று கொள்ள மறுக்கிறோம்
நமக்கு அனைத்து வசதிகளிருந்தும் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் வாய் மூடி மெளனமாக இருக்கிறோமே அது ஏன்?
நமது தேவைக்கு மீறி நாம் சேகரிக்கும் பொருட்கள் நமக்கு நிச்சயம் பயன்படாது
ஒரு சிறு குண்டூசி உட்பட
நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருந்தாலும்,
விபத்துக்கள் ஏற்படுகின்றன,நோய்கள் வருகின்றன.மரணம் வருகிறது நம்மால் ஒன்றும் தடுக்கமுடியவில்லையே
நாம் மயக்கத்தில் அல்லது உறக்கத்திலே இருக்கும்போது
நம்மை காப்பற்றிகொண்டிருக்கும் கடவுள் மீது நமக்கு
ஏன் நம்பிக்கை வருவதில்லை?
எல்லாவற்றிற்கும் காரணம் அகந்தை
அகந்தை இருக்கும் இடத்தில,காமம் இருக்கும்,மோகம் இருக்கும்,
கோபம் இருக்கும்,கர்வம் இருக்கும்,பொறாமை இருக்கும்,
இவ்வளவு நல்லவர்களை நம் கூட்டாளிகளாக வைத்து கொண்டிருந்தால்
நமக்கு நன்மைகள் எப்படி கிடைக்கும்?
அகந்தை இருக்கும் வரையில் நமக்கு மன அமைதி கிடைக்காது
அகந்தை இருக்கும் வரையில் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது
நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது
இறைவன் மீது பக்தி செலுத்த முடியாது
இறைவனின் மீது நம்பிக்கை வராது
நம்முடைய வழிபாடுகள் எல்லாம் போலியாகத்தான் இருக்கும்
சாத்திரங்களை தினமும் படிப்பதாலோ,தோத்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதாலோ,தினமும் ஆலயங்களுக்கு சென்று வருவதாலோ
எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை
இன்று வழிபாட்டு தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது
மக்கள் கோடிகணக்கில் பணத்தை கொட்டுகின்றனர்
மத(பாதகர்கள்) போதகர்கள் இறைவனை பற்றி வாய் கிழிய பேசி மக்களை
மூளை சலவை செய்கின்றனர்
சொகுசு கார்களில்உலா வரும் காவிகள் கடவுளை கண்டதாக
பிதற்றி மக்களை மயக்கி காசு பார்கின்றனர்
தம் உயிரை காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாமல் ஆயுதம் தாங்கிய காவலாளிகளை துணைக்கு வைத்துகொண்டிருக்கும் இந்த போலிகள் தங்களிடம் வருபவர்களை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கின்றனர்
அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி,தங்களின், செல்வம், மானம் மரியாதையை அனைத்தையும் அவர்களிடம் ஒப்புவித்து மக்கள் ஏமாந்துபோகின்றனர்
பாமரன் ஏமாந்தால் பரவாயில்லை
ஆனால் மேதாவிகள் என்றழைக்கபடுபவர்களும் இந்த வலையில் வீழ்வது வேதனைக்குரியது
நம் உள்ளமே கோயில்
அந்த கோயில்தான் இறைவன் உறையும் இடம்
அந்த இடத்தில கள்ளம் இருந்தால் அவன் எவ்வாறு அங்கு இருப்பான்?
அங்கு ஆசைகள் என்னும் பேய்கள் எப்போதும் எதையாவது நாடி அங்கும் இங்கும் அலைந்துகொண்டு கூச்சல் போட்டுகொண்டிருந்தால் மனசாட்சியான
இறைவனின் குரல் நமக்கு எப்படி கேட்கும்?
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் அழுக்காறு என்னும் அசுத்தம் கலந்த ஆறு ஓடி கொண்டிருந்தால் அந்த உள்ளத்தில் அமைதி எங்கு தவழும்?
உள்ளத்தில் உள்ள துர்நாற்றம்தாம் உடலில் துர்நாற்றமாக வீசுகிறது
இந்த உடலுக்குள் செல்லும் எதுவும் எந்த வழியாக வந்தாலும்
அது சகிக்க முடியாத நாற்றம் வீசுகிறது.
அந்த நாற்றத்தை மறைக்கவே நாம் பல்லாயிரம் ரூபாய்களை
ஆயுள் முழுவதும் செலவழிக்கிறோம்.
முடிவில் மரணத்திற்கு பிறகு நாற்றம் தங்க முடியாமல்
மண்ணில் புதைத்தோ அல்லது எரித்தோ அந்த உடலை அப்புறபடுத்துகிறோம்.
பிறரை வஞ்சித்து அளவுக்கு மீறி சொத்து சேர்த்து ,
அதர்மவழியில் வாழ்க்கைவாழ்ந்து
சூது நிறைந்த மனம் கொண்டு நிம்மதியற்ற வாழ்வு வாழும் மனிதர்கள்
இவைகளிலிருந்து விடுபடவேண்டுமென்றால் இறை நாமத்தை அல்லும் பகலும் ஓதிக்கொண்டே இருக்கவேண்டும் .
அதற்காக எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் ஊர் சுற்றுவது அல்ல
நம் கடமைகளிடையே தான் அதை செய்ய வேண்டும்
நாம் நம்மை அறியாமல் மூச்சு விட்டுகொண்டிருப்பதைபோல
அப்போது மனதின் இரைச்சல் அடங்கி
இறைவனின் இனிய நாதம் கேட்கும் .
நாதம்தான் தான் இறைவன்.
இந்த மாற்றம் வெளியில் மட்டும் நிகழ்ந்தால் பயனில்லை
நம் உள்ளத்தில் இந்த மாற்றம் நிகழ வேண்டும்
விழித்துகொள்ளாவிடில் நஷ்டம் நமக்குதான்
,

Sunday, November 27, 2011

எவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு நாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்

பிறவி பெருங்கடல் நீந்துவர்
நீந்தார் இறைவனடி சேராதார்
என்றார் திருவள்ளுவர்.
மானிட பிறவி கிடைப்பது அரிதினும் அரிது
கிடைதற்க்கரிய பொருள் கிடைத்தால்
என்ன செய்ய வேண்டும்?
அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்
பாதுகாத்து அதை நல்ல முறையில்
பயன்படுத்தி பலன் பெற வேண்டும்
அவ்வாறு செய்யாமல் அதை பயன்படுத்தாமல்
வீணடித்தால் யாருக்கு நஷ்டம்?
அந்த பிறவியை அளித்த இறைவனுக்கு
நன்றி சொல்லவேண்டாமா?
அந்த பிறவியை நம் மீது கருணை கொண்டு
நமக்கு அளித்த இறைவனை பற்றி
அறிந்துகொள்ள வேண்டாமா?
அவ்வாறு செய்யாவிடில் இந்த பிறவியால் நமக்கு பயன் ஏது?
ஆனால் அதை விடுத்து நாம் இறைவனை மறந்து விடுகிறோம்
அவனை பற்றிய சிந்தையே இல்லாமல் அழியும்
இந்த உடல் மீது பற்று வைத்து
அதை பராமரிப்பதில் ஆயுள் முழுவதும்
செலவிட்டு முடிவில் மரித்து விடுகிறோம்
பிறகு அடுத்த மானிட பிறவி எப்போது கிடைக்கும்
என்று பலகாலம் என்று
ஏங்கி ஆவியாய் உழலுகிறோம்
இந்த நிலை நமக்கு தேவையா?
இதைபோல் எவ்வளவு காலம் மூடர்களோடு சேர்ந்துகொண்டு
நாமும் மூடர்களாய் இருக்க போகிறோம் என்பதை சிந்தித்து
பார்க்கவேண்டும்
எனவே கிடைத்த இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு
ஹரி மீது பக்தி செலுத்தி அவன் அருளை பெற்று
மாளா பிறவியிலிருந்து மீள அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்ளுவதே அறிவுடையோர் செய்யும் செயலாகும்

கடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

பொதுவாக பகவத் கீதையில் மூன்று யோகங்கள்
முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றன
அவை கர்ம யோகம், பக்தி யோகம் ,ஞானயோகம்
கர்மயோகம் என்பது அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை
ஆத்மா சுத்தியுடன்,பலன் எதிர்பாராமல் செய்யவேண்டும்
ஏனெனில் பலனில் மனதை வைத்தால் செய்ய வேண்டிய
கர்மம் சரிவர செய்ய முடியாமல் போகும்
கர்மத்தை ஒழுங்காக முறைப்படி செய்தால் அதன் பலன்
தானே நமக்கு வந்து சேரும்
எனினும் அதன் பலன் நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ
அமைவது நம்முடைய வினைபயனையும் இறைவனின் சித்தத்தையும்
பொறுத்துதான் அமையும்
உதாரணத்திற்கு ஒரு விவசாயி அனைத்து பணிகளையும் முறையாக செய்தாலும்
விளைச்சல் பல காரணிகளை பொறுத்தது. வெயிலானால் பயிர்,காய்ந்து போகலாம்,மழை,வெள்ளம் ஆகியவற்றால் சேதமாகலாம்.பறவைகள்,
மிருகங்களால் மகசூல் பாதிக்கப்படலாம்.
அதனால்தான் நம்முடைய கருமங்களை,கடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும் என்று பகவான் கண்ணன் கூறுகிறான்.
அவனிடம் விட்டுவிட்டால் எது வந்தாலும்
அது அவனின் பிரசாதமாக ஏற்றுகொள்ளும் மனநிலை நமக்கு கிடைக்கும்
எது நடந்தாலும் நம் மனநிலை பாதிக்காது
மனம் பாதிக்கபடாமல் இருந்தால் உடல்நலம் பாதிக்காது
இதை நன்றாக உணர்ந்துகொள்வதே ஞானயோகம்
நம் கடமைகளை சரியாக செய்வதுடன் அவன் மீது பக்தியும் செலுத்துவோம்
இறைவனை முழுவதுமாக நம்புவோம்
நம் வாழ்க்கை அமைதியாக மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கும்
.

Saturday, November 26, 2011

மூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி, அர்த்தமற்ற சடங்குகள்

உலகத்தின் ஆதி குரு தஷிணாமூர்த்தி
அவர் மௌன குரு
அவர் பிரம்ம ஞானத்தை நான்கு சனகாதி
முனிவர்களுக்கு உபதேசித்தார்
அந்த உபதேசம் அவர்களோடு நின்றுவிட்டது.
உலகத்தின் அனைத்து மக்களுக்கும் போய் சேரவில்லை
மக்கள் அறியாமையிலேயே உழன்று கொண்டிருந்தனர்
அடுத்து பகவான் கிருஷ்ணன் அவதரித்தான்
அவன் பிரம்ம ஞானத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தான்
பகவான் திருமுகத்திலிருந்து உபதேசம் வந்ததால் அவன்
ஜகத் குரு என்று அழைக்கபட்டான்
அந்த உபதேசத்தை பகவத் கீதையாக வியாசர் மகாபாரத காவியத்தில்
இடம்பெற செய்தார் அந்த மகாபாரதத்தை விநாயக பெருமான் தன்
தந்தத்தை ஒடித்து எழுதினர்.
அப்படி இருந்தும் பிரம்ம ஞானம் பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளும்
வகையில் இல்லை.
எனவே அவர்கள் வாழ்வில் எந்த ஆன்மீக முன்னேற்றமும் இல்லாமல்
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு மடிந்து கொண்டிருந்தனர்.
பகவான் நாராயணன் மூன்றடியால் மூவுலகையும் அளந்தான்
பிரம்ம லோகத்தில் பகவானின் காலடி வைத்தபோது அதற்க்கு
பிரம்மா அபிஷேகம் செய்த நீர் நாம் வாழும் பூவுலகத்திற்கு
சிவபெருமான் உறையும் கைலாய மலையில் விழுந்து கங்கையாக
பெருக்கெடுத்து ஓடி யுகம் யுகமாக நம் பாவங்களை கழுவி ஆன்மாக்களை
கரைஏற்றி கொண்டிருக்கிறது
எனவே மீண்டும் சிவபெருமான் காலடியில் ஆதி சங்கரராக அவதாரம் செய்து
இந்தியா முழுவதும் தன் காலடிகளால் நடந்து பகவத் கீதைக்கு உரையெழுதியும்
பிரம்ம ஞானத்திற்கு விளக்கங்கள் எழுதியும் அவைகளை மக்களிடையே
பரப்ப மடங்களையும் நிர்மாணித்தார்.
மனிதர்களில் ஜாதி, உயர்வு தாழ்வு பாராட்டுதல் போன்ற விரும்பத்தகாத
குணங்களினால் இறைவனின் எண்ணம் நிறைவேறவில்லை
பகவான் நாராயணன் ராமானுஜராக அவதரித்து
மக்களிடையே உயர்வு தாழ்வு கூடாது
இறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் அனைவரும் ஒரேகுலம்,
இறைவன் அனைவருக்கும் உரியவன்,
இறைவனிடம் தன்னை முழுவதுமாக சரணடைவதின் மூலம் அவன் அருளை பெற்று உய்யலாம் என்றும்
வைணவருக்கே உரியதென கருதப்பட்ட நாராயண மந்திரத்தை அனைவருக்கும் அளித்து பிரம்ம ஞானம் பெறுவதை எளிமையாக்கினார்
இருந்தும் மக்களுக்கு பிரம்ம ஞானம் போய் சேரவில்லை .
அவருடைய உபதேசம் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டது
சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று வலியுறுத்திய ராமனுஜரின் அறிவுரைகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது
எங்கு பார்த்தாலும் சிறுதெய்வ வழிபாடுகளதான்
மூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி,
அர்த்தமற்ற சடங்குகள் போன்றவைகளுடன் நடந்துகொண்டிருக்கின்றது.
அதனால் அன்பே இறைவான் இறைவனை உள்ள சுத்தியுடன் வணங்காமல்
அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வாழாமல்
அதர்ம வழியில் பொருள் சேர்த்து பிறரை வஞ்சித்து துன்புறுத்தி
மதத்தின் பெயரால் ஒருவொருக்கொருவர்
சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றனர்.
உண்மையான இறைவழிபாடு என்பதை
மக்களுக்கு உணர்த்த தொடர்ந்து இறைவனிடமிருந்து
அவனின் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்து
மீண்டும் மீண்டும் காலத்திற்கு ஏற்றாற்போல் பகவானின் உபதேசங்களை
பரப்பி வந்துகொண்டிருக்கின்றனர். அவைகளை தொடர்ந்து சிந்திப்போம்

இறைவனை தேடி..


இறைவனை தேடி...
இறைநாமத்தை எந்நேரமும் பஜித்திடுவாய்
அவன் வடிவான சத்குருவின் வடிவத்தினை
மட்டும் தியானம் செய்திடுவாய்
(சுவாமி சச்சிதானந்தா -ஆனந்தாச்ரமம்)

இறைவன் எடுப்பான் வடிவங்கள் பலகோடி
பலன் எதிர்பாராது உன் கடமையை செய்தால்
நேரில் வந்து நின்றருள் செய்வான் உன் வாசல் தேடி
(பண்டரிநாதன்-பண்டரிபுரம்)

ஒன்றும் இயலா நிலையில் தன்னையே
நினைந்துருகும் பக்தனின் பாரத்தை
தன் தலையில் சுமந்து முதுகில்
பிரம்படியும்படுவான் அந்த பரம்பொருள்
(மதுரை சொக்கன்)

செல்வசெருக்கும் பொய்யுரைப்போரும்
தெய்வங்களானாலும் தேடினாலும்
கிடைக்கமாட்டான் அடிமுடி காண இயலா
ஜோதிவடிவான் எம்பெருமான்
(திருவண்ணாமலையான்)

இறைவா உன்னை நான் எதற்காக சரணடையவேண்டும்?

இறைவா உன்னை நான்
எதற்காக சரணடையவேண்டும்?
தாயும்மானவர் கூறுகிறார்
வன்பிறவி வேதனைக்கும் வஞ்ச நமன் வாதனைக்கும்
அஞ்சி அஞ்சி உன்னை சரணடைந்தேன் பராபரமே என்று.
பிறப்பதற்கு முன் நாம் நம் தாயின் வயிற்றில் மல மூத்திரம்
கலந்த துர்நீரில் மிதந்துகொண்டு வயிற்றில் உணவை
செரிப்பதர்க்காக உள்ள ஜடராகினியின் அனலில்
புழுபோல் துடித்து கொண்டு வேதனையில் தவிக்கும்போது
எப்போது இந்த சிறையை விட்டு வெளிஉலகத்திற்கு
செல்லபோகிறோம் .இனிமேல் இந்த கற்ப வாசத்தில்
மாட்டிக்கொள்ளகூடாது என்றுநினைக்கிறோம்.
ஆனால் பிறந்தவுடன் நம் வினைப்பயனால் வந்த விதி வசத்தால்
உலக மாயையில் மூழ்கிவிடுகிறோம்.
பிறகு உலகில் கணக்கற்ற ஆசைகளில் சிக்குண்டு
அழியும் பொருட்கள்,மனிதர்கள் மீது மோகம் கொண்டு
கண நேரத்தில் தோன்றி மறையும் இன்பங்களுக்காக
வாழ்நாள் முழுவதும் நம் உடலை,மனதை வருத்திகொள்ளுகிறோம்
இந்த உடல் மீது வைத்த அபரிமிதமான பற்றினால் நம் மனம்
மரணத்தின் போது இவ்வுலக பொருட்களை பிரியமனமில்லாமல்
மரணவஸ்தை(வாதனை)படுகிறோம்
ஆனால் ஒவ்வொரு பிறவி எடுக்கும்போதும்
,மரணத்தின்போதும் கணக்கற்ற முறை
துன்பத்தை அனுபவித்தும் நாம் திருந்துவதில்லை.
எனவே இந்த புதைகுழியிலிருந்து வெளியேற வேண்டுமானால்
இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை,
ராம நாமத்தை உச்சரித்துகொண்டிருந்தால் நம்மை
மீண்டும் இந்த உலகில் தள்ளும் மனதின்
நச்சரிப்பிலிருந்து விடுபட்டு
நம் ஆத்மாவிற்கு விடுதலை கிடைக்கும்.

Thursday, November 24, 2011

ராமாயணத்தில் என்ன இருக்கிறது?

ராமாயணத்தில் என்ன இருக்கிறது?
வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும்
என்பதை அது கற்றுகொடுக்கிறது?
ராமா உனக்கு நாளைக்கு மணிமகுடம் என்றார்கள்
ஆனால் அடுத்த நாள் காலை
காலை வாரிவிட்டார்கள் காட்டிற்கு போ என்று
ஆனால் பதவி மோகம் அற்ற
ராமன் அமைதியாக அதை எதிர்கொண்டான்
புதிய இடங்களை பார்க்கலாம்,கானக வாழ்கை எப்படி இருக்கும்
அதையும் நேரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்
,எல்லாவிதமான மக்களுடன் பழகலாம்,
பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம்
தவம் செய்யும் முனிவர்கள்,தவசிகள் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் ஆசியை பெறலாம் என்றெல்லாம் நினைத்து அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்
எல்லோரும் இல்லற வாழ்க்கை நிறைவு செய்தபின் துறவு வாழ்க்கை மேற்கொள்ளுவார்கள்
ஆனால் ராமனுக்கு இல்லற வாழ்க்கையின் துவக்கத்திலேயே துறவு வாழ்க்கை அமைந்தது.
ராமன் இருக்குமிடம்தான் அயோத்தி என்று சீதை அரண்மனை போக வாழ்க்கையை துறந்து ராமனுடம் கானகம் செல்ல தீர்மானித்தாள்
.உண்மையான அன்பு அப்படிதான் எண்ண வைக்கும்
ஆனால் பெண்கள் இக்காலத்தில் தன்னிடம் காசிருந்தால் கணவனையும் மதிக்கமாட்டார்கள் காத்து வளர்த்த பெற்றோரையும் மதிக்கமாட்டார்கள். எல்லாம் சுயநலம்.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழ பழகிகொண்டால் மனம் அமைதியடையும், புதிய அனுபவங்கள் கிடைக்கும்.எவ்வளவு கடினமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனஉறுதியும் கிடைக்கும்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது?
சாதரணமான பிரச்சினைகளை கூட சமாளிக்கும் மன உறுதி இல்லை,மன தெளிவு இல்லை
யாரை பார்த்தாலும் மது,போதை ,கஞ்சா என பலவிதமான போதை பழக்கத்திர்க்கு ஆளாகி நோய் தாக்கி அழிந்து போகின்றனர்.
ஒருவொருக்கொருவர் அன்பில்லை .அதனால் மன இறுக்கம் ஏற்பட்டு குற்றங்கள் பல்கி பெருகிவிட்டன
அதனால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மன நோய்க்கு ஆளாகி மனநல காப்பகங்களும், சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன
எதற்கெடுத்தாலும் போராட்டம் வன்முறை. அவர்களுக்கும் நிம்மதியில்லை, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நிம்மதியில்லை அதனால் ஆள்பவர்களும்,நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்
பிறர் சொத்திற்கு ஆசைப்பட்டு பிறரை ஏமாற்றி ,வஞ்சித்து வாழ்க்கை நடத்துகின்றனர்
தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராசையை ஒரு சிலர் பயன்படுத்திக்கொண்டு கோடி கோடியாய்ஏமாற்றுகிறார்கள்
எதற்கெடுத்தாலும், உரிமை கோரி எதிர்த்துகொண்டிருந்தால்
வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான்.
வாழ்க்கையில் எந்த சுகத்தையோ மகிழ்ச்சியையோ அனுபவிக்கமுடியாது
நர்சரியில் வளர்க்கப்படும் மர கன்றுகள் அங்கேயே நடப்படுவது கிடையாது
வேறு இடங்களில் எடுத்து நடபட்டால்தான் நல்ல மகசூல் கொடுக்கும்
அதைபோல்தான் வாழ்க்கையும் .இதை புரிந்துகொண்டால்போதும்
எந்த பிரச்சினையும் நம்மை பாதிக்காது.
பிரச்சினைகள் நம்மை மனதளவில் உறுதியாக்கி
நம்மை வலுப்படுத்தும் காரணிகளாக அறிந்துகொள்ளவேண்டும்
இந்நிலை மாறவேண்டுமென்றால் வாழ்க்கையை புரிந்துகொண்டு
சகிப்புதன்மையுடன் பிரசினைகளை அணுக கற்றுக்கொள்ளவேண்டும்
இறைவனிடம் நம்பிக்கை வேண்டும் அவனிடம் பக்தி வேண்டும்
பக்தியுடையார் காரியத்தில் பதறார் என்றான் மகா கவி பார்ரதி
இறைவனிடம் நம்பிக்கை வைத்தால் அவன் வழி காட்டுவான் நல்வழியை

Tuesday, November 22, 2011

துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே

ராமன் எதற்காக தன் அரசாளும் உரிமையை
விட்டுவிட்டு காட்டுக்கு போனான் ?
ராமன் பரம்பொருள்
அவன் இவ்வுலகிற்கு வரும்போதே
பல திட்டங்களுடந்தான் வந்தான்
அவன் தந்தை தசரதன் போல்
பல மனைவிகளை மணந்து கொண்டு
போக வாழ்க்கை நடத்த அல்ல
அவன் நினைத்த திட்டங்களைஎல்லாம்
அவன் நிறைவேற்ற வேண்டுமென்றால்
அவன் அயோத்தியை விட்டு கிளம்பவேண்டும்.
அதற்காகத்தான் இந்த நாடகம்.
ஏனென்றால் அவனை காண்பதற்காக தரிசனம் பெறுவதற்காக
ஏராளமான மக்கள்,முனிவர்கள் ,ரிஷிகள்,தவசிகள்,
பக்தர்கள் மிருகங்கள் வழி மீது விழி வைத்து
காத்து கிடந்தனர்.
எனவே திருமணம் செய்துகொண்டு
அயோத்தியில் உட்கார்ந்துகொண்டு
அயோத்தியை மட்டும் நிர்வாகம் செய்துகொண்டிருந்தால் போதுமா?
அரக்கர்களாலும்,ராட்சதர்களாலும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கும்,தேவர்களும்,
மனிதர்களும்,தவசிகளும், மனமுருகி விடுத்த
பிரார்த்தனையினால் அல்லவோ அவன் வானுலகிலிருந்து
இப்பூவுலகிற்கு இறங்கி வந்துள்ளான்.
துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே
அவன் அயோத்தியை விட்டு புறப்பட்டான்
அனைவரையும் சந்திக்க நடந்தே நாடு முழுவதும் சென்று
தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய ராமன்
அவன் நினைத்த காரியங்களை முடித்தவுடன் விமானத்தில்
அயோத்தி திரும்பி அனைவரும் போற்றும் வண்ணம்
அரசை நிர்வாகம் செய்தான்.
நம்மை போன்ற பாமர மக்களுக்காக இப்பூவுலகில்
அவதாரம் செய்துநமக்கு நல்வழி காட்டி
நம்மை ஆட்கொண்ட அந்த பரம்பொருளை நினைத்து
மனம் உருகி வழிபட்டால் நம் துன்பமும் தீரும்
நம் நாட்டை பிடித்த பீடைகளும் விலகும்

தமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க

தமக்கு உரிமையில்லாத பொருள் மீது முடிவு எடுக்க
யாருக்கும் அதிகாரமில்லை
அவ்வாறு செய்தால் அது சாதகமாக முடிவதைவிட
பாதகமாகவே முடியும்
ராமாயணத்தில் தசரதன் ராமனை தன் மூத்த மகன்
என்று முடிவு செய்துகொண்டு அவனுக்கு மகுடம் சூட்ட
தீர்மானிக்கிறான்.
உண்மை என்னவெனில் பரம்பொருளான
ராமன் அவன் மனைவியான் கோசலையின் கற்பத்தில்உதித்ததால்
அவன் ராமனின் தந்தையாக இவ்வுலகோரால் அறியபட்டான்
ஆனால் ராமன் அவனின் மரபணுவில் உதித்தவன் அல்லவே
இந்நிலையில் அவனுக்கு ராமன் உரிமையில்லாதவன் ஆகின்றான்
அனைவரும் மகிழ்கின்றனர்
.ராமனுக்கு மகுடம் சூடும் வைபவத்தை ஆவலுடன்
எதிர்பார்கின்றனர் ஒருவரை தவிர.
அது கூனி என்ற மந்தரை என்று அனைவரும் அறிவர்
ராமாயணத்தை படிப்பவர்கள்
,ராமனை விரும்புபவர்கள் அனைவரும்
மந்தரையை திட்டி தீர்ப்பார்கள்
அதே போல்தான் கைகேயியும்
கோசலையை விட ,தன் மகன் பரதனை விட ராமனிடம்
அதிக அன்பு பாராட்டிய அவள் ஏன் அப்படி ஒரு கொடூரமான
தண்டனையை ராமனுக்கு கொடுத்தாள்?
இவ்வளவு நடந்தும் கோசலை ஏன் மெளனமாக இருந்தாள்?
முக்காலமுமறிந்த வஷிஸ்டர் போன்ற ரிஷிகள் ராமன்
வனம் செல்வதை அறிந்திருந்தும் மெளனமாக இருந்தது ஏன்?
இலக்குவனோ தன் நிலைமறந்து
வானுக்கும் மண்ணுக்குமோ அல்லவா குதித்தான்
இப்படி பல கதா பாத்திரங்கள் ராமாயணத்தில் உள்ளன
ராமன் பரம்பொருள் என்று
அறிந்தவர்கள் மெளனமாக இருந்தனர்
அறியாதவர்கள் அழுதனர், புலம்பினர்,
கைகேயியும்,பரதனையும் பழித்தனர்
தசரதன் துக்கத்திலேயே தன் உயிரை விட்டான்
பரம்பொருள் என்ன செய்யும்,எதை செய்யும்
என்று அதற்க்கு தான் தெரியும்
ஆனால் செய்வது எல்லாம் இந்த உலகமும்
அதன் மக்களும் மேன்மை பெறுவதற்கே
நாமும் ராமன் பாமர மனிதன் அல்ல
அவன் பரம்பொருள் என்று உணர்ந்து
அவனிடம் சரணாகதி செய்து நம் வாழ்ந்து வந்தால்
நம்மை அவன் அருள் நம்மை அரண்போல் நின்று காக்கும்


ராமாயணம் என்றால் ராமன் நடந்து காட்டிய வழி
என்று ஒரு பொருள் உண்டு.
பரம்பொருளான ராமன் இந்த உலகில் மனிதனாக
அவதாரம் செய்து பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் ஆகிவிட்டன
எல்லா மொழிகளிலும் ராமாயணம் இருக்கிறது
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்?
எப்படி கடமைகளை நிறைவேற்றவேண்டும்?
எப்படி தர்மங்களை கடைபிடிக்கவேண்டும்?
எப்படி நீதி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டும்?
ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரின் கடமைகள் என்ன ?
கம்ப ராமாயணத்தை இன்று அனைத்து மதத்தினரும் படித்து
தெளிந்து போற்றுகின்றனர்
ராமனை கடவுளாக கண்டு போற்றி பாடி
முக்தியடைந்தவர்கள் ஏராளம்.
இன்றும் அவன் நாமத்தை ஜபம் செய்து மனசாந்தி பெற்று
நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளம்.
ராமனை ஒரு பாமர மனிதனை போல் சித்தரித்து
அவனை இழித்தும் பழித்தும் பேசுபவர்களும் இந்நாட்டில் உண்டு
பூமாலைகளும் பாமாலைகளும் சூட்டி மகிழும் பக்தர்களிடையே
அவனுக்கு செருப்பு மாலை சூட்டி மகிழ்ந்தவர்களும் நம்மிடையே உண்டு
மேலோட்டமான பார்வைக்கு ராமனின் சில செயல்கள்
தவறாக தோற்றம் அளிக்கலாம்
அதை வைத்துகொண்டு அவனின் பெருமைகளையும்
அருமைகளையும் யாராலும் மறைக்கவோ
மறுக்கவோ முடியாது
எனவேதான் பல யுகங்கள் கடந்தும் அவன் பெருமை
போற்றப்பட்டு தெய்வமாக அவன் பக்தர்களின் நெஞ்சில்
வாழ்ந்து வருகிறான்.
காசியில் விஸ்வநாதபெருமானே அங்கு மரிக்கும்
மனிதர்களின் காதில் ராம நாமத்தை ஓதி
அவைகளின் ஆத்மா முக்தி அடைய உதவுவதே இதற்க்கு சான்று
எனவே நாம் அனைவரும் உயிருடன் இருக்கும்போதே
ராம நாமத்தை உச்சரித்து பிறவி பெருங்கடலை
கடக்க முனைவோம்.
ஏனெனில் நாளை என்ன நடக்கும் யாரறிவார்

Sunday, November 20, 2011

ஆராயாது தவறு செய்தால் தண்டனை

ராமாயணம் என்ன தெரிவிக்கிறது ?
அரசனானாலும் ஆராயாது தவறு செய்தால் தண்டனை
அனுபவிக்கத்தான் வேண்டும் என்று தெரிவிக்கிறது.
தசரதன் ஆராயாது வெறும் ஒலியை மட்டும் கருத்தில் கொண்டு
பார்வையற்ற ஒரு வயோதிக தம்பதிகளின் ஒரே மகனை அம்பை விட்டு
கொன்றதற்கு அந்த தம்பதிகளின் மரணத்திற்கும்
சாபத்திற்கும் பின்னாளில் ஆளாக நேர்ந்து
தன் உயிருக்குயிரான ராமனை பிரிந்து
அந்த சோகத்திலேயே தன் உயிரை இழந்தான்
இதைபோல் ஏராளமான கருத்துக்களும் நீதிகளும்
ராமாயணத்தில் அடங்கியுள்ளான
அவைகளை கருத்தூன்றி படித்து நம் வாழ்வில்
அதை கடைபிடித்தால் துன்பங்கள்
நேராது தற்காத்துகொள்ளலாம்
பரப்ரம்மமே ராமனாக உருவெடுத்து வந்ததால்
தவறு செய்தவன் தந்தையாகினும் அவன்
தன் வினைபயனால் விளைந்த விதியை
அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதை
இதன் மூலம் புரிந்துகொள்ளவேண்டும்
நாம் அதர்ம வழியில் செல்லாமல்
ராம நாமத்தை உச்சரித்து
நமக்கு கிடைத்த வாழ்க்கையை
வாழ்ந்து வந்தால் நம்மை அரண் போல்
நின்று காப்பான் கோதண்டத்தை ஏந்திய ஸ்ரீராமன்

குழந்தைத்தனமாக நடந்துகொண்டால்

அழுதால் உன்னை பெறலாமே
என்று இறைவனை
பற்றி பாடினார் ஒரு பக்தர்
ஆம் திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி அழுதார்
உடனே அன்னை பார்வதி ஞானப்பால் அளித்தார்
உடனே கண்ணால் கண்ட இறைவனை பற்றி
பாடல்கள் வாக்கில் வந்தது
குழந்தை அழுதால் தாய் எங்கிருந்தாலும்
என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும்
குழந்தையின் அழுகுரல் கேடடு ஓடி
வந்து அணைத்துக்கொண்டு குழந்தையை
சாந்தபடுத்துகிறாள்
இவர்களுக்கு மட்டும் சாத்தியமான இந்த
அன்பு மற்றவர்களுக்கு ஏன் சாத்தியப்படவில்லை/
இதல் ஒன்றும் ரகசியமில்லை
மற்றவர்கள் இறைவனிடம் காட்டும் அன்பு
போலியானது
நாம் இறைவனிடம் காட்டும் அன்பு
குழந்தைகளின் களங்கமற்ற உள்ளம் போல்
தூய்மையானது அல்ல
நம் உள்ளங்களில் பொய்கள்தான் நிரம்பி வழிகிறது
அகந்தை சேற்றால் உள்ளத்தில்
இறைஅருள் நுழைவதற்கு சிறிது கூட இடமில்லை
நம் உள்ளம் இரும்புபோல் அன்பில்லாமல்
இறுகி பாறைபோல் உள்ளது
அதில் மற்ற உயிர்கள் மீது இரக்கமோ
,இறைவனை நினைத்து உருக்கமோ
இல்லாமல் சுயநலம் காரணமாக இறுக்கமாக உள்ளது
இறைவன் நமக்கு ஏமாற்றங்கள்,நோய்கள்,
துன்பங்கள்,சோகங்கள் என பல
சோதனைகளை தொடர்ந்து அளித்தாலும் நமக்கு ஆன்மீக விழிப்பு
ஏற்பட முடியாத அளவிற்கு உணர்வற்றவர்களாக் இருக்கிறோம்
என்ன செய்ய?
உள்ளத்தில் இறைவனிடம் முழுமையான சரணாகதி கிடையாது
இறைவனிடம் கொண்டுள்ள அவநம்பிக்கையே நம்
தோல்விகளுக்கு முழு காரணம்
குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருந்தால்
இறைஅருள் தானே நம்மை தேடி வரும்
குழந்தைத்தனமாக நடந்துகொண்டால்
மனதில் இருள்தான் நிறைந்திருக்கும்

தீய எண்ணங்கள் அழியும்வரை

ஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்றான் புத்தன்
ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம் என்றார் திருமூலர்
ஆசைகளுக்கு அளவே இல்லை
ஒரு ஆசை நிறைவேறியதும் அடுத்த ஆசை தயாராக நிற்கிறது
ஆசை நிறைவேறாவிடில் ஏக்கமாக மாறுகிறது
தீரா கோபமாக உருவெடுக்கிறது
தனக்கு கிடைக்காதது மற்றவருக்கு கிடைத்தால் மனதில் பொறாமை
தோன்றுகிறது
பொறாமை கொண்டஉள்ளம் பொறாமை கொண்டவனையும் அழிக்கும்
பொறாமை கொள்ள செய்தவனையும் அழிக்கும்
ஆசைகள் இருப்பதில் தவறில்லை
அதை நேர்மையான முறையில் நிறைவேற்றிகொள்வதிலும் தவறில்லை
ஆசை பேராசையாக மாறினால்தான் அது அனைவருக்கும்
ஆபத்தை விளைவிக்கும் அணுகுண்டாகிறது
ஒரு நாட்டை ஆள்பவனின் பேராசையால்
அவன் போர் தொடுக்கும் நாட்டு மக்களும்
அவன் நாட்டு மக்களும் காரணமின்றி விரோதம்
பாராட்டி போரிட்டு அழிகின்றனர்.
அதே போல்தான் குடும்பங்களும் சீரழிகின்றன
ராமாயணத்தில் ராவணன் செய்த தவறால் இலங்கையும் அதன் மக்களும் அழிந்தனர்
மகாபாரதத்தில் துரியோதனன் கொண்ட பேராசையால் அவன் குலமே அழிந்தது
இந்த நிலை பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் அதே நிலைதான்
மக்களோ தலைவர்களோ எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை
இந்த உலகம் அழியும் வரை அப்படியேதான் இருக்கும்
ஒவ்வொரு மனிதனின் மனதில் உள்ள
தீய எண்ணங்கள் அழியும்வரை இந்நிலை
தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்
அதற்காக இப்படியே இதை விட்டுவிட
இறைவனும் விடுவதில்லை
அவன் அனுப்பிவைக்கும்
இறையடியார்களும் விடுவதில்லை
அவர்கள் மனித குலத்தை
நல்வழிபடுத்தும் முயற்சிகளை
செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்
நாம்தான் நம் மனதை தீய வழிகளில் செல்லாமல்
தடுத்து நல்வழியில் வாழ்க்கை நடத்த முயற்சி செய்ய வேண்டும்
அதற்க்கு எளிய வழி இறைவனை
எந்நேரமும் நினைத்து கொண்டு இருப்பதுதான்

பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தான் கடைத்தேறுவது?

அன்பே சிவம் என்கிறார்கள்
அன்பே சக்தி
அன்பே கடவுள் என்கிறார்கள்
சிவ பெருமானை வழிபடும் தெய்வமாக கொண்டவர்கள்
சைவர்கள் என்று சொல்லிகொள்ளுகிறார்கள்
சைவர்களில் இன்று அனேகம்பேர் அசைவ உணவு
உட்கொள்ளுபவர்களாக மாறிவிட்டனர்
அதேபோல்தான் சக்தி வழிபாடு செய்வவர்களும்
கடவுள் மீது மட்டும் அவர்கள் அன்பு செலுத்துவதாக நினைத்துகொண்டு
வழிபாடு செய்கிறார்கள்
ஆனால் கடவுள் படைத்த உயிர்கள் மீது அன்பில்லாமல் ஈவு இரக்கமின்றி
அவைகளை கொன்று அதன் மாமிசத்தைஉண்பது எந்தவிதத்தில்
அவர்களுக்கு கடவுளின் அருளை பெற்றுத்தரும் என்பதை
சிந்தித்து பார்த்தால் அவர்கள் செய்வது பெருந்தவறு என்பதை
உணர முடியும்
உயிரை கொடுக்க வக்கில்லாத மனித பிறவிகளுக்கு
மற்றொரு உயிரை போக்க எந்தவித நியாயமும் இருக்க வாய்ப்பில்லை
போதாத குறைக்கு அந்த மாமிசத்தை கடவுளுக்கு
படையல் வேறு செய்து அதை உண்கிறார்கள்
ஒரு உயிரை பலி என்ற பெயரில் கொல்வதால்
எப்படி நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்கள்
சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்
புத்த பகவான் வலியுறுத்திய இந்த மதத்தை
சார்ந்தவர்களும் உயிர் கொலையையே தங்கள்
வாழ்க்கை கொள்கையாக கொண்டுள்ளனர்
இப்படி மதத்தின் உண்மையான கொள்கைகளை
கடைபிடிக்காமல் போலியாக உலகை ஏமாற்றி தங்களையும்
ஏமாற்றிக்கொண்டு மக்கள் வாழ்ந்துவருகின்றனர்
அதனால்தான் இன்று உலகில் எங்கும் அமைதியில்லை
மக்கள் மனதிலும் அமைதியில்லை
இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் நற்பலன்களும்
தீயபலன்களும் நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை,
தீயவினைகளை பொறுத்தே அமைகின்றன .
கிடைத்த இப்பிறவியிலும் பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால்
எப்பிறவியில்தான் கடைத்தேறுவது?
இந்த உண்மையை உணர்ந்துகொண்டு தங்களை
திருத்திகொளபவர்கள் இறைவனின் அருளுக்கு
விரைவில் பாத்திரமாக முடியும்

Saturday, November 19, 2011

உண்மையான மார்க்கம்

இறைவன் நாம் எதுவும் நாம் கேட்காமலேயே
நாம் உயிர் வாழ அளித்திருக்கிறார்
அவற்றில் சிலவற்றைத்தான்
நாம் அறிந்து வைத்துள்ளோம்
நாம் அறியாதது ஏராளம்
அவற்றை நாம் கணக்கிடமுடியாது
ஒரு வரையறைக்குட்பட்ட நம் புலன்கள் மூலம்
தெரிந்துகொள்ளமுடியாது
நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை
அறியும் சக்தியே நமக்கு இல்லை
எல்லாவற்றிற்கும் ஒரு கருவியின் உதவியை நாடுகிறோம்
இல்லாவிடில் மற்றவரின் உதவியை நாடுகிறோம்
இந்நிலையில் கர்வம் கொண்டு பிதற்றுவது தேவையற்றது
இறைவனுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அது முடியாது
கடவுளே இல்லை என்றும் கடவுளை கற்பித்தவன்
முட்டாள் என்றும் பிதற்றுகின்றனர்
அவர்களால் விவரிக்க முடியாதவற்றை
இயற்க்கை என்று மழுப்புகின்றனர்
இந்த அண்ட சராசரங்கள் ,உயிர்கள் அனைத்தும்
ஒரே மூல பொருளான இறைவனிடமிருந்துதான்
வந்துள்ளன
இந்த உலகத்தின் கண்டுபிடிப்புகள் எல்லாம்
ஏற்கெனவே உள்ள மூலபொருட்களிளிருந்து
தான் வெளிவந்துள்ளன
எனவே அகந்தையை விட்டுவிட்டு
இறைவனை சரணடைந்து நம் கடமைகளை
பிறர் மனம் நோகாமல்,பிறரின் வாழ்வை கெடுக்காமல்
அன்பு செய்து வாழ்வதே உண்மையான மார்க்கம்

நமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம்

உயிரை ஆன்மா இயக்குகிறது
உயிர் உடல் எடுத்து மனதுடன் சேர்ந்துகொண்டு
ஒவ்வொரு பிறவியில் செய்த
நல்வினைகள் தீவினைகளுக்கு ஏற்ப
இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது
தெய்வங்களே மனித உடலில் வந்தால் கூட
இன்ப துன்பங்களை ஏற்று அனுபவித்தாக வேண்டும்
இதற்க்கு அவதாரங்களே சாட்சி
ஆனால் அவதாரங்கள் சாட்சியாக இருந்துகொண்டு
தன் ஆன்ம ஸ்வரூபத்தை அறிந்து கொண்டுள்ளதால்
இன்பதுன்பங்களினால் பாதிக்கபடுவதில்லை
ஆத்மா ஞானம் பெற்றவர்களும் பாதிக்கபடுவதில்லை
தான் ஆத்மாதான்,உடல் அல்ல என்று அறிந்துகொள்ளும்வரை
இந்த நிலை தொடரும்
ஞானம் பெறும்வரை இந்த உடலும் மனமும் கிரகங்களின்
கட்டுப்பாட்டில்தான் இருக்கும்
அதிலிருந்து விடுபடவேண்டுமென்றால் அமைதியாக
வினைகளை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும்
நம் இதயம் உடலில் உயிர் உள்ள வரை விடாமல்
துடித்துகொண்டிருக்கிறது
அப்படி துடித்தாலும் ஒரு துடிப்புக்கும் மற்றொரு துடிப்புக்கும்
இடையில் அது ஒய்வு எடுத்துகொள்ளுகிறது
அதைபோல்தான் நாமும் இவ்வுலகில் வாழும்போதே
இன்ப துன்பங்களிலேயே முழுவதும் மூழ்கிவிடாமல்
இடையிடையே நம் மனதை இறைவனிடம் செலுத்தி வந்தால்
நமக்கு சாந்தியும் விடுதலையும் நிச்சயம் கிடைக்கும்.

நாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை?

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளார்
கடவுள் எல்லா உயிரிலும் கலந்துள்ளார்
இருந்தும் நாம் ஏன் கடவுளை காணமுடியவில்லை?
கடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆத்மாவாக
இருந்துகொண்டு அதை இயக்குகின்றான்
மின்விசிறி,மோட்டார் போன்றதுதான்
நம் உடலும் ஒரு இயந்திரம்
ஒரு இயந்திரம் பழுதில்லாமல் இருந்தால்
அதற்க்கு வேண்டிய சக்தியை
கொடுத்தால் இயங்க தொடங்கும்
அதை பயன்தரும் வகையில் இயங்க வைக்க
அல்லது நிறுத்த மற்றொரு சக்தி தேவைப்படும்
எல்லாம் இருந்தும் உடலில் உயிர் இல்லாவிட்டால்
உடல் இயங்காது .உயிர் இருந்தும் அதில் உள்ள ஆத்மா
என்ற இறைசக்தி இல்லாவிடில் அப்போதும் அந்த
உடலால் பயன் ஏதுமில்லை
ஆனால் இந்த உண்மையை யாரும் உணர்வதும் கிடையாது
உணர்ந்துகொள்ள முயற்சியும் மேற்கொள்ளுவது கிடையாது
உடல்தான் ஆத்மா என்று நினைத்துகொண்டு
அதை பராமரிப்பதிலேயே ஆயுள் முழுவதையும்
வீணடிக்கிறார்கள்
தாம் உடல் அல்ல ஆத்மாதான் என்ற உண்மையை
அறிந்துகொள்ள பல கோடி பேரில் சிலரே
முயர்ச்சி செய்து ஆன்ம ஞானம் பெறுகிறார்கள்
நாம் எதை பற்றி அதிகம் சிந்தனை செய்கிறோமா
நாம் அதுவாகவே ஆகிறோம் என்பது உண்மை
நாம் இறைவனை பற்றி சிந்திக்க தொடங்கினால்
நாம் அவனை பற்றி அறிந்துகொள்ள இயலும்
அறிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து
விடுபட்டு உண்மையானவிடுதலையை அடையமுடியும்
அவரவர்களுக்கு உள்ள கடமைகளை செய்துகொண்டே
மிகவும் எளிதான ராம நாமத்தை
உச்சரித்துக்கொண்டே இருப்பதுதான்