Sunday, May 5, 2013

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (2)

சுவாமி சிவானந்தரின் 
சிந்தனைகள் (2)



எது  பக்தி?(பகுதி-2)


ஒரு சுயநலக்காரன் 
அவனுடைய உடலை மட்டும் நேசிக்கிறான்

பிறகு அவனுடையே அன்பை 
அவனுடைய மனைவி, குழந்தைகள் 
,நண்பர்கள், ஆகியோரிடம் விரிவாக்குகிறான் 

அவனே சிறிது பக்குவமடையும்போது 
தன்னுடைய ஜாதி, மொழி ,இனம் என்றும், 
தன்னுடைய ஊர்,மக்கள் ஆகியோரை நேசிக்கிறான் 

பிறகு அந்த அன்பு அவனது மாவட்டம்,
மாநிலம்,நாடு என விரிவடைகிறது.
 காலப்போக்கில் சர்வதேச அளவில் 
சகோதர மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறான்
பிறகு அவன்  மனம் இன்னும் விரிவடைந்தபின் 
உலகத்தின் எந்த பகுதியிலுள்ள 
எந்த மனிதனையும் நேசிக்க 
தொடங்குகிறான். 

பக்தி யோகத்தில் கல்வியோ 
வேதங்களில்  ஆழ்ந்த புலமையோ
தேவையில்லை 
தேவைப்படுவதெல்லாம் 
பக்தி மிகுந்தஉண்மையான 
மனமேயாகும்

யார் வேண்டுமானாலும் இறைவனின் 
நாமத்தை பாடலாம் அல்லது ஜபிக்கலாம்

துகாராம் ஒரு படிப்பு 
வாசனையில்லாத ஒரு விவசாயி 

அவருக்கு ஒரு  கையெழுத்து கூட போடத் தெரியாது
பக்தி,கிருஷ்ணா பகவானின் கருணை மூலமாக 
அதி அற்புத சாகச ஞானத்தை பெற்றார்

அவருடைய புகழ் பெற்ற கீர்த்தனைகள்  
மும்பை பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு 
பாட புத்தகங்களாக இருக்கின்றன

ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் கூட 
ழுத்தறிவு இல்லாதவர்தான்

அவர் தஷிநேச்ஸ்வரர் ஆலயத்தில் இருந்து வரும்பொழுது 
காளிதேவியின் கருணையாலும் அத்வைத குரு ஸ்ரீ.தோதாபுரி  
அவர்களுடைய கருணையாலும் தெய்வீக ஞானத்தை பெற்றார் 

இந்த இரு முனிவர்களின் வாழ்க்கையை கூர்ந்து 
கவனிக்கும்போது ஞான ஊற்றானது  இருதயத்திற்கு 
உள்ளே இருக்கின்றது என்பதும் ,யாரும் இதை உண்மையான 
பக்தியின் மூலம் அடையலாம் என்பதும் தெள்ளத் தெளிவாக அறியமுடிகிறது

நான் பகவான் நாராயண மூர்த்தியையோ 
அல்லது க்ரிஷ்ணபகவானையோஅல்லது 
சிவபெருமானையோ 
வணங்குகிறேன் .
இது பக்தியோகம்

நான் எல்லாவற்றுள்ளும் 
ஆத்மாவாக இருக்கிறேன். 
இது ஞான யோகம். 


4 comments:

  1. /// தேவைப்படுவதெல்லாம்
    பக்தி மிகுந்தஉண்மையான
    மனமேயாகும் ///

    படிப்பிற்கும் பக்திக்கும் சம்பந்தமில்லை என்று புரிகிறது...

    ReplyDelete
  2. சம்பந்தமில்லை

    ReplyDelete
  3. சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் அருமை. பாராட்டுக்கள்.

    Highlight செய்யப்படும் கலர்கள் ஒன்றும் சரியில்லை. தெளிவாகப் படிக்க முடியவில்லை, கருப்பு கலரில் BOLD LETTER இல் எழுதி, அதில் மஞ்சள் கலரில் மட்டும் ஹைலைட் பண்ணுங்கோ. மற்ற எல்லாமே யூஸ்லெஸ் கலர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா பெரியவரே
      வருகைக்கும்
      கருத்துக்களுக்கும் நன்றிகள் பல

      சற்றே பொறுமை காப்பீர்.
      சினம் ஆகாது.

      கருத்துக்களில்
      கவனம் செலுத்தும்

      எதுவுமே useless இல்லை
      இறைவன் படைப்பில்
      நாம்தான் நம்முடைய அகந்தையினால்
      அனைத்தையும் அவைகளை பாகுபடுத்துகிறோம்.
      விரும்புகிறோம் வெறுக்கிறோம்.
      அவ்வளவுதான். எல்லாவற்றையும்
      ரசிக்க கற்றுக்கொண்டால்
      இவ்வுலக வாழ்வில் துன்பம் ஏது?
      இன்பம்தான்.

      color களில் கவனத்தை செலுத்தாதீர்
      கலர்கள் மங்கி போகும் .சாயம் போகும்
      சாயம் வெளுத்துபோகும்.

      உங்கள் கணினியில் கலரை
      மாற்றிக்கொள்ளும்
      வசதி உள்ளது.

      உங்களுக்கு பிடித்த,மிகவும் பிடித்த
      கலருக்கு மாற்றி படித்து
      ஆனந்த மடையுங்கள் சுவாமி.

      உள்ளத்தில்அவ்வப்போது
      தோன்றும் கருத்துக்களை
      உடனே பதிவு செய்ய வேண்டியுள்ளதால்
      மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரமில்லை

      இருந்தும் அன்பு தம்பியின்
      அன்பான வேண்டுகோளை
      செயல்படுத்த முயற்சிக்கிறேன்

      Delete