Wednesday, May 29, 2013

யார் இவர்?

யார் இவர்?பாரெல்லாம் உய்விக்க 
பாரதத்தில் தோன்றிய ஞானி 

அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த
நாட்டு மக்களை மீட்க வந்த
மகுடமில்லா ,நாடில்லா ராஜரிஷி

தங்கள் கொள்கைகளே உண்மை என்றும்
மற்றதெல்லாம் உண்மையல்ல என்று
மடத்தனத்தில் ஊறித்திளைக்கும்
மடாதிபதிகளிடையே மேலைநாட்டு
மோகத்தில் ஊறி தன்னிலை  மறந்துவிட்ட
மக்களின் மடத்தனத்தை அகற்ற வந்த
வந்த மாபெரும் யுகபுருஷன்

ஆடம்பரமும் அகந்தையும் கோலோச்சி
மக்களிடையே விலகி நின்ற மடத்தை
தியாகமும்,அன்பும்,கொண்டு
மனித குலமனைத்தும் அருகில் வந்து
ஆனந்த வாழ்வு பெற்று வாழ
வழி வகை செய்த சீர்திருத்தவாதி

வேதத்தை கற்று பிழைப்பு நடத்தியவரின்
மத்தியில் வேதத்தை கற்றுணர்ந்து
அதை அனைவரும் கற்று உய்ய
நாடெங்கும் வேத பாடசாலைகளை
நிறுவி வேதம் தழைத்தோங்க
செய்த வேத வித்து

தெய்வங்களுக்கு இவர் கணக்கற்ற
ஆலயங்கள் சமைத்தார். சிதைந்து
போன ஆலயங்களை சீரமைத்தார்.அன்று

ஆனால் தெய்வமோ
இவரை மக்களின் மனதிலே
தெய்வமாக கோயில்
கொள்ள வைத்துவிட்டது இன்று

உலகம் பலவிதம் என்று
அனைவருக்கும் போதித்தவர்

அது வேறுவேறு போல் தோன்றிடினும்
அதன்  மூலம் ஒன்றுதான் என்பதை
வாழ்வில் நடத்தி (நடித்தும்)காட்டியவர்

சனாதன தர்மத்தை கடைபிடிப்பவன்
படித்தவனே ஆயினும் பாமரனே
ஆயினும் அவன் உள்ளே உறையும்
இறைவன் ஒன்றே என்ற சங்கரனின்
தத்துவத்தை வாழ்வில்
நிகழ்த்தி காட்டியவர்

அன்று காலடியில் பிறந்து சனாதன தர்ம
எதிரிகளை தன் வாதத்தால்
ஆட்கொண்டவரின்
மறு உருவமாக மீண்டும் அவதரித்து
பாரதம் முழுதும் பாத யாத்திரை செய்து
பாவத்தில் மூழ்கியிருந்தமக்களுக்கும்
பவத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த
பாமரர்களுக்கும் புனர் வாழ்வு தந்தவர்.

சகல சாத்திரமறந்தவர்.
சகல கலைகளையும் ஆதரித்து வளர்த்தவர்.
சாதா பாத்திரங்களையும்
சத் பாத்திரங்களாக மாற்றியவர்
வறுமையில் வாடிய மக்களின்
வாழ்வில் வளமை சேர்த்தவர்.

பற்றற்றவர் ,தன்னை பற்றுக்கோடாக
கொண்டவர்களின் பற்றை அறுத்தவர்.

துறவிக்கு  வேந்தனும் துரும்பு
என்ற மொழிக்கேற்ப என்று
பீடுநடை போட்டவர்

மக்களின்மனங்களில்
காலம் காலமாக மண்டிக்கிடந்த
பீடைகளை அகற்றியவர்

வரையின்றி அருட்செல்வத்தையும்
பொருட் செல்வத்தையும் வாழ்நாளில்
வாரி வாரி வழங்கியவள்ளல்

கற்று தெளியாது, அகந்தை
கொண்டலைந்தவர்களின்
செருக்கை அடக்கி அவர்களை
ஆட்கொண்டவர்.

தோற்றத்தில்தான் ஆண்டி
அந்த தில்லையாண்டிபோல

ஆனால் மனித குலமனைதிர்க்கும்
அரசனாகவும் குருவாகவும்
விளங்கியவர்.

கண்டாரையும் காணாதாரையும்
இவர் கண்டுகொண்டு
அருள் செய்த அற்புத
தெய்வீக புருஷர்.

உடலை உகுத்தாலும்
உள்ளமெல்லாம்
ஒளியாய் ,வானமெங்கும்
ஒலி அலையாய்
கலந்து நின்று கார்மேகம்போல்
அமுத மழை
பொழியும் மகான்.

இவர்போல் இனி
என்று காண்போம்
இவ்வுலகில்.

அவர் அறிவுரை
வழி நடப்போம்.
அன்பினால்
அனைவரும் இணைவோம்
இந்த அகிலத்து
மக்களனைவரும்
ஆனந்தமாக வாழ

பேரின்பம் பெற வழி காட்டிய
பெரியவா போற்றி

பேதங்கள் நீங்கி
வேதங்கள் தழைக்க
வழி செய்த
வித்தகா போற்றி போற்றி.


4 comments:

 1. பெரியவா சிறப்புகள் அருமை... நன்றி...

  அன்பினால் அனைவரும் இணைவோம்...

  ReplyDelete
 2. யார் இவர்?

  நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளைப்பற்றி இவ்வளவு அழகாக எழுதியிருக்கிறாரே ..... யார் இவர்? என்று பார்த்தேன்.

  அடடா .... நம் அண்ணா திரு. பட்டாபி ராமரல்லவோ ! அதனால் தான் இப்படி எல்லாம் அழகாக எழுதியிருக்கிறார் என அகம் மகிழ்ந்தேன். ;)))))

  பா ரா ட் டு க் க ள் .

  ReplyDelete
  Replies
  1. எனக்கு என்ன தெரியும்?
   ஒன்றும் தெரியாது
   அவரை நினைத்தேன்
   தேனாக ஊற்றெடுத்தது
   அவரை பற்றிய நினைவுகள்
   பதிந்துவிட்டேன்
   அவ்வளவுதான்

   Delete