Monday, May 6, 2013

ஆழி மழைக்கண்ணா


ஆழி மழைக்கண்ணா 




நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது இந்த உலகு 
என்றார் திருவள்ளுவர்.

எல்லோரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள்
பஞ்ச பூதங்களில் ஒன்றான.(தண்ணீர் )நீரின்றி 
இந்த உலகத்தில் உயிர்கள் வாழ முடியாது 
என்று பொருள் கூறி வருகின்றனர். 

உயிர்கள் வாழ பஞ்ச பூதங்களும் தேவை. 
அவைகளில் ஒன்று இல்லாவிட்டால் கூட 
அவைகள் இயங்க முடியாது. 

எனவே இந்த குறளின் உண்மையான பொருள்  
நாராயணா,கண்ணா ,வாசுதேவா ,
நீ அண்ட சராசரங்களை படைத்தது மட்டுமல்லாமல்
அதனுள் ஆன்மாவாய் இருந்துகொண்டு 
அனைத்தையும் காக்கும் உன் கருணையான
நீரின்றி  இந்த உலகம் இருக்கமுடியாது. 

நிலம், நீர், காற்று, ஆகாயம்,நெருப்பு  ஆகிய 
பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டு ,
அதே பஞ்ச பூதங்களின் துணையோடு 
இந்த உலகமும் உயிர்களும் இயங்குகின்றன. 
இறைவனும் அவைகளை படைத்தல்,
காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் 
என்னும் ஐந்து வழிகளில் அவைகளை 
பரிபாலித்து அருளுகின்றான். 

இந்த மனித இனம் அறிவிருந்தும் 
அறிய வேண்டிய பரம்பொருளான அரியை 
அறிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. 

மாறாக அறியாமையை அதிகரித்து 
அகந்தையில் தள்ளி அழிவை அளிக்கும் வழிகளை நாடியே 
பிறப்பு இறப்பு வளையத்தில் சிக்கி மாள்கின்றனர்.

மரணத்திலிருந்து காக்கவல்ல 
மாலை சரணடைய 
மறுக்கின்றனர். 

இன்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம்.
 கடல்நீரை குடிநீராக்க பல்லாயிரம் 
கோடிகளை வீணடிக்கின்றனர்.
ஆயிரம் நாமங்கள் கொண்ட அந்த 
பரந்தாமனின் திருவடிகளை 
சரணடைவதை விடுத்து.

பூமாதேவியின் வயிற்றில் துளையிட்டு
 நீரை தேடிக்கொண்டு போகின்றனர். 
அனால் அவள் மனிதர்களின் கொடுமை
 தாங்காமல்ஊற்றுகளை வற்ற 
செய்துவிட்டாள் பல இடங்களில்.

இருப்பினும் கருணைக்கடலான 
கண்ணன் 
ஆண்டுதோறும் மழையாய்
கொட்டி தீர்க்கின்றான்.

அதை பிடித்து வைத்துக்கொள்ள
 பாத்திரங்கள் இல்லை நம்மிடம்.  
அவை அனைத்தும் மீண்டும் 
அவனிடமே(கடலில்) போய் 
சேர்ந்து விடுகிறது.

நதியாய் பாய்கின்றான் 
மக்களின் தாகம் 
தீர்க்கும்பொருட்டு.
அதை உணரா மூடர்கள் 
அதில் சாக்கடைகளை விட்டு.
அசுத்தப்படுத்தி விட்டு. 
நீரின்றி 
புலம்புகின்றார். 

இன்று தண்ணீருக்காக 
உழைத்த காசையெல்லாம் 
செலவு செய்கின்றார். . 
தண்ணீரை விற்று பல 
ஆயிரம் பேர் பிழைக்கின்றார். 

ஆனால் செலவில்லாமல் 
அந்த ஆயிரம் நாமம் கொண்டானை 
அனுதினம் காலையில்  எழும்போது
 நினைத்தால் போதும்.
 நீரின்றி நாங்கள் இல்லை.
 நீரில்லாமல் நாங்கள் வாடுகிறோம்.
 கருணை செய்யும் என்று 

மாலே மணிவண்ணா என்றும், 
ஆழிமழைக்கண்ணா என்று 
அனைவரும் மனமுருகி பாடினால்போதும்
 கொட்டி தீர்ப்பான் மழையை அடுத்த கணமே 
போதும் போதுமென்று. 

தவறுகள் செய்ய அஞ்சாத தன் படைப்புகளின் 
தவறை மன்னித்து 
நம்மை கண்ணிமை போல் காப்பான் 

இறைவன் மீது நம்பிக்கையில்லாதவர்கள் 
எதையாவது உளறிக்கொண்டு போகட்டும். 

இறைநம்பிக்கையுடையவர்களே 
இன்னும் நேரம் உள்ளது.
அவன் நாமத்தை 
நம்பிக்கையுடன் சொல்லுங்கள். 
.

இனியாவது மனித குலம் 
உண்மையை உணர்ந்து திருந்தட்டும். 



Pic.courtesy-google images



3 comments:

  1. //மாலே மணிவண்ணா என்றும், ஆழிமழைக்கண்ணா என்று அனைவரும் மனமுருகி பாடினால்போதும் கொட்டி தீர்ப்பான் மழையை அடுத்த கணமே
    போதும் போதுமென்று. //

    மிகவும் சுலபமான வழி. அனைவரும் அவனையே நினைத்துக் கதறுவோம்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete