Sunday, May 12, 2013

மனமிரங்கினான் மாலவன் குளிர் மழையாய் பொழிந்தான்



மனமிரங்கினான்  மாலவன் 
குளிர் மழையாய் பொழிந்தான்  


ஆழி மழைக்கண்ணா


ஆழி மழைக்கண்ணா 



6.5.2013 அன்று ஒரு பதிவிட்டேன்

அனைத்துயிரும் வாழ மழை வேண்டி
மாலவனை சரணடைந்து 
பிரார்த்தனை செய்ய கோரி.

பின்நூட்டமிட்டவர் இருவர்மட்டுமே 
திருச்சியிலிருந்து ஒருவரும், 
திண்டுக்கல்லிலிருந்து ஒருவரும். 

13.5.2013 இரவு வானம் குளிர்ந்து 
மழையாய் பொழிந்தது. 


மனமிரங்கினான்  மாலவன் 
குளிர் மழையாய் பொழிந்தான்  

கத்திரி வெய்யிலுக்கு 
கத்திரி போட்டான். 

கனலோனின் அனலும்
தணிந்தது சற்றே 
நேற்றிரவு ஆழி போல் மின்னி 
வலம்புரி சங்கம்போல் 
இடிமுழக்கம் செய்து 
வர்ஷித்துவிட்டான்

வறண்ட நிலத்தில் குளிர்ந்த 
நீரூற்று போல் பொழிந்தான்.
இன்னும் பொழிந்துகொண்டிருக்கின்றான்

என்னே அவன் கருணை. !

நீர் நிலையெல்லாம் நிரம்பி,
பயிர்களும்,உயிர்களும்
துன்பமின்றி வாழ மீண்டும் 
அவன் தாள் சரண் புகுவோம். 

நல்லார் ஒருவர் பிரார்த்தனையை ஏற்று
இறைவன் அனைவருக்கும் அருள். செய்யட்டும்.


.

7 comments:

  1. //நல்லார் ஒருவர் பிரார்த்தனையை ஏற்று
    இறைவன் அனைவருக்கும் அருள். செய்யட்டும்.//

    ;)))))

    ஆழி மழைக்கண்ணா

    குளிர் மழையாய் பொழிவாய் !

    க ண் ணா க் ..... க ரு மை நி ற க் ...... க ண் ணா !

    ReplyDelete
    Replies
    1. பல கோடி மக்களுக்கு இரவு தங்க இடம் இல்லை
      இந்நாட்டில்

      ஆனால் இதே நாட்டில்தான் சில லட்சம் மக்கள்
      தங்கத்தை கடையிலிருந்து வாங்கி வீட்டில் அதை தங்க வைக்க அலைகிறார்கள்.

      ஊழல் அரசியல்வாதிகளும் பண முதலைகளும் அதை அந்நிய நாட்டு வங்கிகளில் தங்க வைக்க அரும்பாடுபடுகிறார்கள்

      மழையை பற்றியோ, அந்த மழையை கொண்டு உயிர்கள் வாழ உணவுபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியோ யார் கவலைப்படுகிறார்கள். இந்நாட்டில் ?

      Delete
  2. அதுவும் இந்த அக்னி நட்சத்திரத்தில் மழை பெய்து குளிர்விப்பது மனதிற்கு அவ்வளவு சுகம்...!

    ReplyDelete
    Replies
    1. மனதிற்கு மட்டுமா?
      மனதின் hardware ஆகிய உடலுக்கும்தானே சுகம்

      Delete
  3. ரசிக்க வைத்தது...

    ReplyDelete