Thursday, May 23, 2013

ஸ்ரீநரசிம்மன்எங்கிருக்கிறான்?


ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி 



ஸ்ரீ நரசிம்மன் எங்கிருக்கிறான்? 









































அவன் பக்தர்கள் அவனை
அவன் கோயில் கொண்டுள்ள
தலங்களுக்கெல்லாம் தேடி யாத்திரை
செய்து கொண்டிருக்கிறார்கள்.

பக்த பிரஹலாதன் அவனை தேடி
எங்கும் செல்லவில்லை.

அவன் அவன் தந்தைக்கு தன் பிஞ்சு கையால்
சுட்டிக் காட்டிய கம்பத்தில் காட்சி தந்தான்
 நரசிம்மன் உக்ரமாக

உக்ரம் தணிந்ததும் சாந்த ஸ்வரூபனாக
காட்சிதந்தான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனாக

பல்லாண்டு கடும் தவம் புரிவோக்கு
அவன் தரிசனம் கிடைப்பதில்லை

ஊண் உறக்கமின்றி  அவனை தவிர
வேறு எதையும் நினைக்காத ஒரு வேடுவனுக்கு
ஒரே நாளில் காட்சி தந்து தன்னை அடையும்
மார்க்கத்தை உலகத்திற்கு காட்டினான் அந்த பரம்பொருள்.

இன்றைய உலகில் பிணிகள் நீங்கவும்
துன்பம் நீங்கவும் மட்டுமே அவனை வழிபடுகிறார்கள்.
அவற்றை அவன் போக்குகின்றான்.

நிரந்தர துன்பமான பிறவி பிணியை
நீக்க கோரி யாரும் அவனை வழிபடுவதில்லை.
அதனால்தான் அவர்கள் இன்பதுன்பங்களில்
தொடர்ந்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

சாசுவதமான நிம்மதியும்,சுகத்தையும்
பெற வேண்டி பக்த பிரகலாதன் காட்டிய
வழிமுறை பின்பற்றுவோம்.
அவன் அருளை பெற்று வாழ்வோம்.

அவன் தூணிலும் மட்டுமில்லை
துரும்பிலும் மட்டுமில்லை

நம் உள்ளத்திலும்
அவன் வாசம் செய்கின்றான்
அவனை அழைக்க
நாம் பிரகலாதனை போல்
பக்தி செய்ய வேண்டும்.





3 comments:

  1. முடிவிலும் அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    நானும் ஒருநாள் ஸ்ரீநரசிம்ஹரைப்பற்றி ஓர் பதிவு கொடுத்திருந்தேன், அண்ணா.

    முடிந்தால் படித்துப்பாருங்கோ. இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

    தலைப்பு:

    ”காவேரிக்கரை இருக்கு! கரைமேலே ___ இருக்கு!!”

    ReplyDelete
  3. அவன் தூணிலும் மட்டுமில்லை
    துரும்பிலும் மட்டுமில்லை

    நம் உள்ளத்திலும்
    அவன் வாசம் செய்கின்றான்

    சத்தியமான உண்மையைமையை பகிர்வாக்கி சாதித்தமைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete