Wednesday, May 15, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(45)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(45)






















இரகுராமா என்னை காப்பது 
உனக்கு ஒரு பாரமா?

கீர்த்தனை-(271)- ப்ரோவ பாரமா -ரகுராம -ராகம் -பஹூதாரி (மேள-28)-தாளம்-ஆதி

இரகுராமனே !

புவனங்களனைத்திலும்
நீயே நிரம்பியிருந்தும்
இத்தியாகராஜன் ஒருவனைக்
காப்பது  உனக்கு  பாரமா!

ஸ்ரீ வாசுதேவ !
அண்டகோடிகளை உன்
வயிற்றினுள் அடக்கவில்லையா?

ஒருமுறை தேவர்களுக்காக மனமிரங்கி
சமுத்திரத்தில் மந்தர கிரியையும்
மற்றொருமுறை கோபியருக்காக
கோவர்த்தன  கிரியையும் நீ தங்கவில்லையா?

கருணாகரா!

ஸ்ரீமான் நாராயணன் தேவர்களும், அசுரர்களும்
அமிர்தம் வேண்டி பாற்கடலை மகேந்திரமலையை
மத்தாக கொண்டு கடையும்போது பாரத்தினால்
அது கடலில் மூழ்கிவிட அதை ஆமையாக
வடிவெடுத்து அந்த மலையின் அடியில் சென்று
அதை தூக்கி நிறுத்தியதையும்,
கண்ணனாக அவதாரம் செய்தபோது
இந்திரனின் அடாத செயலால் விடாது
பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து
கோபியர்களை கோவர்த்தனகிரியை தூக்கி
அவர்களை காத்தது போன்ற
அரிதான செயல்களை அனாயாசமாக
செய்த உனக்கு என்னை போன்ற
ஒரு பக்தனை காப்பது எப்படி பாரமாகும்
என்கிறார் ஸ்வாமிகள்.

பக்தனை காப்பது 
பகவானுக்கு ஒரு பாரமில்லை. 
அவனின் அருளை பெறுவது
நம்முடைய உறுதியான 
பக்தியில்தான் இருக்கிறது. 

4 comments:

  1. /// அரிதான செயல்களை அனாயாசமாக
    செய்த உனக்கு என்னை போன்ற ///

    முடிவில் சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. சரி என்பதை
      சரி என்றுதானே சொல்லவேண்டும்
      நன்றி DD

      Delete
  2. //பக்தனை காப்பது பகவானுக்கு ஒரு பாரமில்லை. அவனின் அருளை பெறுவது
    நம்முடைய உறுதியான பக்தியில்தான் இருக்கிறது.//

    நமக்கு உறுதியான பக்தியைத்தருவதும் அவன் கையில் தான் உள்ளது.

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete