Tuesday, May 7, 2013

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?


எல்லோரும் மகிழ்ச்சியாக 
இருக்கிறார்களா?இந்த கேள்வியை பார்ப்பவர் 
அனைவரிடமும் கேட்டு பாருங்கள்?

உங்களுக்கு கிடைக்கும் பதில் 
அநேகமாக இல்லை என்றுதான் வரும்.

எதோ ஒரு சிலர் வீம்புக்காக
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
எனக்கு ஒரு குறைவும் இல்லை
என்று போலியாக கூறலாம்.

ஆனால் அவர்களோடு சிறிது நேரம் பேசி
அவர்கள் வாயை கிளறினால் போதும்
அவர்கள் மனதிலிருந்து அருவியாக கொட்டும்
அவர்களின் மனக்குறைகள் ஒவ்வொன்றாக.

ஒரு பிரபலமான தொழிலதிபர் இருக்கிறார்.
அவரிடம் செல்வம் கொட்டிகிடக்கிறது.
அதை ஆண்டு அனுபவிக்க அவருக்கு
குழந்தை செல்வம் இல்லை.

ஒரு செல்வந்தருக்கு ஏராளமான செல்வம்
இருக்கிறது. மனைவி ,மக்கள்,
எல்லாம் இருக்கிறார்கள்.

அவருக்கும் குடும்பத்தோடு
செலவிட நேரம் இல்லை.
அதனால் குடும்பத்தில் உறவுகள் சரியில்லை.
விரிசல்கள். ஒருவொருக்கொருவர்
புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை.
அனுசரித்து போகும் குணம் இல்லை.

அதனால் எல்லாம் இருந்தும் அவருக்கு
மன நிம்மதியில்லை. குடியில்  மூழ்கி கிடக்கிறார்.
அவர் வாரிசும் அவர் வழி பின்பற்றி நடக்கிறான்.


பலபேருக்கு பாடுபட்டு பணத்தை தேடி
குவித்தபின்தான் தெரிகிறது
தங்கள் இளமைக்காலம் முடிந்து
முதுமைக்காலத்தில் பாதி தூரத்தை
தாம் கடந்துவிட்டோம் என்று.

ஓய்வின்றி உழைத்ததினால்.
உறவுகளை தொலைத்து
உடல்நலம் கெட்டு குடும்பமே
மருத்துவமனைகளுக்கும்
ஆய்வுகூடங்களுக்கும்
அலைந்துகொண்டிருக்கிறது.

பலருக்கு குழந்தை
பிறக்கவில்லையே என்று துன்பம்

சிலருக்கு ஏன் இத்தனை பிறந்தது.
இவைகளை நன்றாக வளர்க்க வழியில்லையே
என்று துன்பம்.

சிலருக்கு உடற்குறை,மனக்குறை
போன்ற குழந்தைகள் பிறந்து வாழ்நாள் முழுவதும்
அந்த குழந்தைகளும் துன்பப்பட்டுக்கொண்டு
பெற்றவர்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும்
நிலையினால் துன்பம்.

பலருக்கு ஒழுக்கமற்ற ,ஒழுங்கீனமான
குழந்தைகளால் இந்த உலகில் வாழும்வரை பிரச்சினை.

குழந்தைகளை வளர்ப்பதிலிருந்து,அவர்களை
ஆளாக்கி,திருமணம் செய்து. வாழ்வில் தொடர்ந்து
ஏற்ப்படும் பிரச்சினைகள் கணக்கிலடங்கா

இதை தவிர,போட்டி,பொறாமை, ஏமாற்றங்கள்
நிறைவேறாத எதிர்பார்ப்புகள் ,நம்பிக்கை துரோகங்கள்,
இழப்புகள் ,பிறரால் நமக்கு வரும் தீமைகள்,
நாமே அறிவின்றி ஆராயாது நமக்கு நாமே
செய்துகொள்ளும் தீமைகள் விபத்துக்கள்
என பட்டியல்கள் நீண்டுகொண்டே போகும்.

அப்போது இவ்வுலக வாழ்க்கையில்
இன்பமே கிடையாதா என்ற கேள்வி எழலாம்.

இன்பமும் துன்பமும் மனதில்தான் உள்ளன
அந்த மனதை நம் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்துவிட்டால் துன்பமும் இன்பமாகும்
இன்பமும் துன்பமாகாது

அதற்க்கு தெளிவான அறிவு தேவை.
அது நமக்கு இருந்தால் நல்லது.
ஆனால் நடைமுறையில்
அது சாத்தியமில்லை.

ஏனென்றால் நம் மனதில் என்ன
இருக்கிறது. எதனால் நமக்கு
துன்பங்கள் விளைகிறது என்ற
அடிப்படை அறிவு நமக்கு கிடையாது.

அந்த அறிவை பெற நாம்
முயற்சிப்பதும் இல்லை.
என்பதுதான் உண்மை நிலை.

எனவே தெளிந்தவர்களின்
வழிகாட்டுதல் நமக்கு தேவை.

அதை நாடி பெற்றுகொண்டோமானால்
இந்த உலக வாழ்க்கையில் ஏற்படும்
சவால்களை சந்திக்கலாம்.
சாதனை செய்யலாம்

அல்லது நம்மை படைத்தது காத்து
ரட்சிக்கும் இறைவனிடம் சரணடைந்து
அவன் நாமத்தை
சொல்லினால் அவனருளினால்
நம் அனைத்து பிரச்சினைகளுக்கும்
தீர்வுகிடைக்கும்.

4 comments:

 1. இப்படி புட்டு புட்டு உண்மையை சொல்லி விட்டீர்கள்... சிந்திக்க வேண்டிய-உணர வேண்டிய கருத்துக்கள்...

  வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

  ReplyDelete
 2. நன்றாக அலசி பலவிஷயங்களை அழகாகவே சொல்லியுள்ளீர்கள். எல்லாமே உண்மை தான். ஒரு பயலும் நிம்மதியாக சந்தோஷமாக இருப்ப்தாகத் தெரியவில்லை.

  //எனவே தெளிந்தவர்களின் வழிகாட்டுதல் நமக்கு தேவை.//

  அதற்காகவே தங்களின் வலைப்பக்கம் நான் விரும்பி வர ஆரம்பித்துள்ளேன். தெளிவு கிடைத்துவிடும் என்ற தெளிவு துளிர்விட்டுள்ளது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. குழம்பிய மனம் தெளியவேண்டுமேன்றால் அமைதியாக இருக்க வேண்டும். இருந்தால் யாருடைய உதவியுமின்றி தானே தெளிந்துவிடும்.

   Delete