Saturday, May 4, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(38)


தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(38)














மனதிற்கு உபதேசம் 

(கீர்த்தனை-தெலிசி-ராம சிந்தநதோ-நாமமு(358) -ராகம்-பூர்ணசந்திரிக -(மேள-29)-தாளம் ஆதி

மனமே! உனக்குள் தோன்றும் பலவித எண்ணங்களை
நிறுத்திவிட்டு ஒரு நிமிடமாவது தாரக நாம 
ஸ்வரூபனின் உண்மையான தத்துவத்தை தெரிந்து 
இராமனிடம் சிந்தையை நிலை நிறுத்தி 
நாம சங்கீர்த்தனம் செய்வாயாக

"இராமா" என்ற சொல்லிற்கு பெண் 
என்று பொருள் உண்டு. இவ்விதம் 
பொருள் கூறுவோர் காமம் முதலியவற்றுடன் 
போர் புரிவோர் ஆவர் .
"இராமா" என்றால் பிரம்மம் என்ற 
உண்மையான பொருளை உணர்பவனின் 
துன்பங்கள் விலகிப் போகும் 

இவ்விதமே "அர்க்க  "என்பதற்கு 
எருக்கமரம் என்று பொருள் கூறுவோரின் 
குரங்குபுத்தி எப்படி தீரும்?

"அர்க்க  "என்னும் சொல்லிற்கு சூரியன் 
என்ற பொருளை அறிபவர்களுக்கு
 குதர்க்கம் பேசி விதண்டாவாதம் செய்யும் 
அறியாமை என்னும்  இருள் அகன்றுவிடும் 

"அஜ:' "என்ற பதத்திற்கு ஆடு என்று
 அர்த்தம் கூறுபவர்களின் கோரிக்கைகள்
 எங்ஙனம் ஈடேறும்?

"அஜ"என்றால் பிரம்மன் என்ற 
சரியான பொருளை உணர்ந்தால் 
வெற்றி பெறலாம். 

இந்த  கீர்த்தனை கேட்பதற்கு 
இனிமையான கீர்த்தனை

இராம நாமத்தின் பெருமையை விளக்கி ,
மனதில் தோன்றும் பலவிதமான் எண்ணங்களை 
ஒதுக்கி வைத்து இராம நாமத்தை 
சிந்தை செய்யுமாறு மனதிற்கு
உபதேசம்  செய்கிறார் ஸ்வாமிகள்.   

இந்த உபதேசம் நமக்குதானே ஒழிய 
அவருக்கல்ல . 
அவர்தான் ஏற்கெனவேயே 96 கோடி முறை 
ராம நாம ஜபம் செய்து 
அவன் தரிசனம் பெற்றுவிட்டாரே. 

2 comments:

  1. அருமை. மிக அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்.sir

      Delete