Monday, May 6, 2013

கோபப்படுவதால் யாருக்கு லாபம்?



கோபப்படுவதால் யாருக்கு லாபம்?


திரு.வை. கோபாலக்ருஷ்ணன் -கருத்துகள் 
கோச்சுக்காதீங்கோ அண்ணா. நான் என் ஆர்வக்கோளாறினால் என் மனதில் பட்டதைப் பட்டுப்பட்டுன்னு, நம் பட்டாபி அண்ணா தானே என்ற தைர்யத்தில் எழுதி விடுவேன். என் வாயே எனக்கு எதிரியாகி விடுகிறது. அதனால் கோச்சுக்காதீங்கோ. 

இதை வைத்தே ஓர் பதிவு உங்கள் தளத்தில் எழுதுங்கோ. என்னைப்போன்றே , ஹனுமன் மேல் உள்ள பக்தியைவிட வடைகள் மேல் அதிக பக்தியுள்ள, வடைப்பிரியர்களுக்கு ஓர் விழிப்புணர்வை அது ஏற்படுத்தக்கூடும். 


சரி இதோ எழுதிவிட்டேன் 

நான் எதற்க்காக 
உங்கள் மீது கோபம் 
கொள்ள வேண்டும். ?

உங்களுக்கு குழந்தை குணம். 
அது சில நேரம் குழந்தைத்தனமாக இருக்கிறது 
அவ்வளவுதான்.

யதார்த்தவாதி லோக விரோதி 
என்று சொல்வார்கள்.பல பேர் 
அப்படிதான் இருக்கிறார்கள்.  

எல்லோரும் உங்களை நேசிப்பார்கள் 
என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 
மனிதர்களின் வாயிலிருந்து வரும் சொற்களில் 
எது உண்மை எதோ போலி என்று கணிக்க முடியாது. 
எனவே எச்சரிக்கையாய் இருப்பதுதான் நமக்கு நன்மை.  

ஒரு காலத்தில் 
நான் கோபப்பட்டதுண்டு.

அது என் பிறவிக்குணம். 

வாழ்க்கையில் கோபத்தினால் 
நான் வாங்கிய அடிகள்  
என்னை பொறுமைசாலியாக்கிவிட்டன

அநீதியை எதிர்த்துகேட்டதர்க்காகதானே 
கோபம் கொண்டேனே 
ஒழிய சுயநலம் கருதி இல்லை 

இன்று எருமை மாடுமேல் 
மழை பெய்வதுபோல் 
அமைதியாக இருக்கிறேன். 

எதைபற்றியும் 
கவலைப்படுவது கிடையாது.

இன்று நான் எவ்வளவோ 
அமைதியாக இருந்தும் எனக்கு தீங்கு 
செய்தவர்களின் செயல்களை மறந்து 
அவர்களுக்கு நன்மை செய்தாலும் 
அவர்கள் என்மீது கொண்ட 
அந்த குணம் மாறவில்லை .
எனக்கு கோபக்காரன் என்ற 
அக்மார்க் முத்திரை குத்தி 
என் உள்ளத்தை ரணமாக்குகிரார்கள்.
அதை ராம நாமம் ஜபித்து  ஆற்றிக்கொள்கிறேன். 


அனுபவங்கள் எனக்கு 
பல பாடங்களை கற்று தந்துவிட்டன.

கோபப்பட்டால் அது நமக்குதான் தீங்கு
 என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன். 
இன்று அமைதியாய் இருக்கிறேன்.

கோபப்படும்போது நம் அறிவு 
மழுங்கிபோய் உதிர்க்கும் சொற்கள் 
ஒவ்வொன்றும் நமக்கு நாமே 
வைத்துக்கொள்ளும்  வேட்டு 
என்பதை உணர்ந்து கொண்டேன்.

நம்முடைய எதிரிகள் வேண்டுமென்றே 
நம்மை தூண்டிவிட்டு நம்மைகோபப்பட செய்து 
அவர்கள் நினைத்தபடி நம்மை பாழும் கிணற்றில் 
தள்ளும் சூழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள 
இவ்வளவு காலம் ஆகிவிட்டது. 

இனியும் திருந்தவில்லை என்றால்.
நாம் மனிதர்களே இல்லை 

விலங்குகள்தான்  

9 comments:

  1. /// இன்று நான் எவ்வளவோ
    அமைதியாக இருந்தும் எனக்கு தீங்கு
    செய்தவர்களின் செயல்களை மறந்து
    அவர்களுக்கு நன்மை செய்தாலும்
    அவர்கள் என்மீது கொண்ட
    அந்த குணம் மாறவில்லை ///

    நீங்களுமா...? (ஆனால் அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை)

    வாழ்த்துக்கள் ஐயா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கா(ரணம் )என்னவென்றால் நாம் எல்லாவற்றையும் மறந்துவிட்டாலும் அதை மீண்டும் மீண்டும் கீறி ஆறிய ரணத்தை மீண்டும் வலியை உண்டாக்குவதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்

      Delete
  2. அடியேனுக்காக தயாரிக்கப்பட்ட அருமையான பதிவு. பாராட்டுக்கள். நன்றிகள்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. தம்பியின் அன்புக்கு அடிபணிந்தேன்
      அதில் ஓர் ஆனந்தம்
      அன்புக்கு நான் அடிமை.
      அதில் நான் மிக எளிதாக ஏமாந்துவிடுவேன்.

      Delete
  3. //கோபப்படுவதால் யாருக்கு லாபம்?//

    நம்மைக் கோபப்படுத்துபவர்களுக்கு மட்டுமே இன்பம் என்னும் இலாபம்

    //சரி இதோ எழுதிவிட்டேன்//

    சபாஷ். மிக்க நன்றி.

    //உங்களுக்குக் குழந்தை குணம்//

    பலரும் இதைச்சொல்லிவிட்டார்கள். இப்போ நீங்களும் சொல்லி விட்டீர்கள்.

    நான் நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தையாம். அதனால் அந்த குணம் என்னிடம் இருக்கலாம்.

    கீழ்க்கண்ட என் பதிவின் குட்டிக்குட்டியன முதல் மூன்று பாராக்களை மட்டும் படியுங்கோ. அது உண்மையா இல்லையா என உங்களுக்கேத் தெரியவரும்.

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    நானும் தங்களைப்போலவே மிகவும் கோபக்காரனாக இருந்தவன் தான்.

    >>>>>

    ReplyDelete

  4. என் கோபங்கள் + நல்லகுணங்கள் பற்றி என் மனைவி ஒருத்திக்கு மட்டுமே [*அதுவும் ஓரளவுக்கு மட்டுமே*] தெரியும்.

    *ஏனெனில் அவள் ஒரு ஞாபகமறதி பேராசிரியை*.

    இன்று அவளிடம் கூட நான் என் கோபத்தைக் காட்டமுடிவது இல்லை. திருப்பி கோபத்தைக்காட்டுவாள் என்ற பயம் அல்ல காரணம்.

    கோபப்படுவதால் எந்தப்பிரயோசனமும் / முன்னேற்றமும் ஏற்படப்போவது இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள தங்களைப்போல எனக்கும் மிக நீண்ட நாட்கள் ஆகியுள்ளது என்பதே உண்மை. அது தான் காரணம்.

    நாங்கள் சங்கிருதி கோத்ரம். மழநாட்டு பிரஹசரணம். ருத்ர கோபத்திற்கும், நல்ல குணத்திற்கும், வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிடுவதற்கும் பெயர் போனவர்கள் நாங்கள்.

    சங்கிருதி கோத்ரத்தில் பிறந்து தன் மனைவி உள்பட யாரிடமும் கோபத்தைக்காட்டாத ஆசாமி கோபு ஒருவன் தான் என என் சொந்த பந்தங்களிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளவன், நான் மட்டுமே.

    இருப்பினும் அது உண்மை அல்ல. கோபத்தை வெளிக்காட்டாமல் மனதுக்குள் அடக்கிக்கொள்பவனே கோபு என்ற உண்மை அவர்கள் யாருக்குமே தெரியாது.

    அது தெரியாமலே இருக்கட்டும், தெரிந்து என்ன இலாபம் தெரியாமல் இருப்பதால் என்ன நஷ்டம் என்று, புன்னகை புரிந்து கொண்டே, அவர்களிடமிருந்து விலகி விடுபவன் நான்.

    மிகுந்த கோபக்காரரான என் அப்பாவிடம், மிகவும் ஸாத்வீகமான என் அம்மா பட்ட கஷ்டங்கள், வாங்கியுள்ள அடி உதைகள் அனைத்தையும் என் சிறு வயதிலேயே நான் பார்த்து, மனம் நொறுங்கிப்போனவன் தான் நான்.

    அதனாலேயே கோபமான என் பிறவி குணத்தையும் கஷ்டப்பட்டு இன்றுவரை அடக்கிக்கொண்டு, எல்லோரையும் அனுசரித்துப்போய் வருகிறேன்.

    அதுவும் பூப்போன்று நினைத்து நம் அன்பினை மட்டும் பொழிந்து காக்கப்ப்பட வேண்டிய பெண்களைத் துன்புறுத்துபவர்களைக் கண்டாலே எனக்குப்பிடிக்காது.

    யாரிடமும் எதற்கும் கோபப்படக்கூடாது என்றே நினைத்து என்னை நானே மிகவும் வருத்திக்கொள்கிறேன்.

    சரி ஸார், பேசிக்கொண்டே போனால், மனதில் தேங்கிக்கிடக்கும், ஏதேதோ வ்ருத்தங்களைச் சொல்லும்படியாக நேரிடும்.

    அதனால் இத்துடன் முடித்துக்கொள்வோம்.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒருவர் மற்றொருவரிடம் சிக்கி
      துன்பப்படுவது பூர்வ ஜென்ம வினைகள்.

      திரைப்பட காட்சிகள்போல்
      அவற்றை மறந்து விடுங்கள்.

      ஏனென்றால் காரணங்கள் இல்லாமல்
      காரியமில்லை என்று யோகி ராம் சூரத்குமார்
      சொல்லியிருக்கிறார்.

      கடந்த காலத்தின் கசப்பான
      நினைவுகளை மறந்துவிடுங்கள்.

      ஏனென்றால் அதில் நடித்த
      பல நடிகர்கள் இப்போது நம்மிடையே இல்லை.
      இருப்பவர்களுக்கும் பற்கள் கொட்டி போயிருக்கும்
      அல்லது பிடுங்கப்பட்டிருக்கும்.

      கடந்த காலத்தை நினைத்து
      நிகழ் காலத்தை கோட்டை விடாதீர்கள்.

      கடைதேறும் வழியான ராம நாமம் சொல்லுங்கள்

      Delete
  5. என் குழந்தை குணத்தைப்பற்றி மேலும் அறிய நான் எழுதியுள்ள “மழலைகள் உலகம் மகத்தானது” என்ற பதிவினை தயவுசெய்து படித்துப்பாருங்கோ.

    இணைப்பு இதோ:


    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள்

      அருமையான் பதிவு.
      நன்றாக அனுபவித்து எழுதப்பட்ட பதிவு.
      அதனால் அதில் உயிரோட்டம் உள்ளத்தில் வியப்பில்லை.


      குழந்தையின் முகத்தை கண்டால்
      கோடி துக்கம் தொலையும் என்பார்கள்.

      மழலை உலகத்திற்குள் நுழைந்தேன்
      மலரும் நினைவுகளோடு வெளி வந்தேன்.

      கொண்டாடினால் குதூகலிக்கும்
      குழந்தைகள் ,தானும் இன்புற்று
      நமக்கும் இன்பத்தை அள்ளித்தரும்
      கற்பக விருஷங்கள்.

      இறைவனே நம்மிடையே
      கண்ணனாக வந்தான் குழந்தையாக

      திகட்டாத இன்பங்களை அள்ளித்தான்
      கண்ணெதிரே அன்று அனைவருக்கும்
      அதை படிப்போர்க்கு இன்றும் இன்பம் தருகிறது

      நினைத்தாலே இன்பம் தரும்
      ஆயர்பாடியில் அவதரித்து
      ஆயர்களோடு கூடி ஆவினம் மேய்த்து
      அவன் செய்த லீலைகள்.

      Delete