Monday, May 27, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(48)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(48)




இராம பக்தன் 
கைகொள்ளவேண்டிய 
அடிப்படைக் குணங்கள் 

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே
என்ற துணிபுடன்
அத்வைத நம்பிக்கையுடன்
நடக்கும் பக்தர்களுக்கு வசப்படும்
கல்யாணசுந்தர ராமனின் கருணை
எவ்வாறு கிடைக்குமெனில்
அது கீழ்கண்ட விதமே

அத்தகைய ராம பக்தன்
ஒரு காலும் பொய் பேச மாட்டான்

அற்பர்களை இரக்கான்

நல்லரசர்களிடம்
கூட சேவை புரியான்

இறைச்சியை கையாலும்
தொடமாட்டான்

மது அருந்தான்

பெண்டிர்,மக்கள்,செல்வம், ஆகியவை மீது
உண்டாகும் மூவகை ஆசைகளை
மேற்க்கொள்ளான்

ஜீவன் முக்தன் நானே
என்ற அகம்பாவத்துடன் திரியமாட்டான்

பிறரை வஞ்சனை செய்யான்

பெரியோரிடம்
அசத்தியம் பேச மாட்டான்

மனக்கவலை மிகுந்து
சுகத்தை இழக்கமாட்டான்

செயல்கள் அனைத்திலும்
தன் ஆத்மா வெறும் சாட்சியென்று
தெரிந்தும் இலட்சியத்தைக் கைவிட மாட்டான்

தாமரைக் கண்ணனும் தியாகராஜனை
காப்பவனுமான இராமனின் கருணை
எவ்வாறெனில் இவ்விதம்தான் இருக்கும்.

(கீர்த்தனை(397)-கருணா ஏலாகண்டே-ராகம்-வராளி-தாளம்-ஆதி ) 

இந்த கீர்த்தனையில் ஒரு ராம பக்தன்
கைகொள்ளவேண்டிய அடிப்படை குணங்களை 
தெளிவுபடுத்தியிருக்கிறார். ஸ்வாமிகள். 

மேலும் தன் அடிப்படை லட்சியமான ராமனை 
அடைவதை எந்த நிலையிலும் கைவிடக்கூடாது 
என்பதையும்வலியுறுத்தி கூறியிருக்கிறார். 

Pic-courtesy-google images 

4 comments:

  1. அனைத்தும் இருக்க வேண்டிய சிறப்பான குணங்கள்... நன்றி...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. //செயல்கள் அனைத்திலும் தன் ஆத்மா வெறும் சாட்சியென்று தெரிந்தும் இலட்சியத்தைக் கைவிட மாட்டான்//

    அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete