Tuesday, May 7, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(40)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(40)



நாதோபாசனையின்  
மகிமைகள் 
























மறைமுடியாகிய உபநிஷத்துக்களின்
 பொருள் நிறைந்து உண்மையான வாக்குடனும் ,
ஸ்வர சுத்தத்துடனும் சொகுசாக மிருதங்க தாளத்தை 
தி சேர்த்து கொண்டு ,இன்னிசையால் பாடி
உன்னை மயங்க செய்யும்.தீரன் எவனோ?

எதுகை  விஷ்ரமம் (ஓய்வு),உத்தம பக்தி 
,பத வாக்கியங்களின் முடிவில் விச்ராந்தி,
திராஷையின் ருசி,  நவரசங்கள்  
ஆகிய இவற்றுடன் கூடிய கிருதிகளால் 
உன்னை பஜனை செய்யும் சாமர்த்தியம் 
இத்தியாக ராஜனுக்கு சாத்தியமா இராமா!

(கீர்த்தனை- சொக ஸுகா-மிருதங்க  தாளமு (213)-ஸ்ரீரஞ்சனி ராகம்-ரூபக தாளம் )


மிக இனிமையான  கீர்த்தனை. 

இந்த கீர்த்தனையில் இறைவனை நாதத்தினால் 
எப்படி மகிழ்விப்பது என்ற விவரத்தினை 
தெளிவாக ஸ்வாமிகள்  விளக்குகிறார்.  

எல்லோருக்கும் இசையை 
கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடையாது. 

அந்த வாய்ப்பு  இறைவன் அருள் 
பெற்றவர்களுக்கே 
கிடைக்கும்.

அவர்கள் அந்த இசையைகொண்டு 
அந்த செல்வத்தை  வழங்கிய இறைவனை
 நாதோபாசனையின் மூலம் அவனை 
அடைய முயற்சிக்கவேண்டும். 

ஏற்கெனவே நாதோபாசனையின் மூலம் 
இராமபிரானை மகிழ்வித்து 
அவன் தரிசனம் பெற்றுவிட்ட ஸ்வாமிகள் 
உலகில் மற்றவரும் அந்த மார்க்கத்தை 
பின்பற்றி உய்வடையும் வகையில் 
அதை பிறருக்கு விளக்குகிறார் 
இந்த கீர்த்தனையில் 

இசை ஞானம் இல்லாதவர்கள் 
அதை அந்த தெய்வீக இசையை கேட்டாவது 
இன்புற்று இறைவனிடம் 
பக்தி கொள்ள வேண்டும். 


4 comments:

  1. நாதோபாசனை பற்றிய விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    சிந்திக்க சிரிக்க : அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Students-Ability-Part-8.html

    ReplyDelete
  2. //இசை ஞானம் இல்லாதவர்கள் அதை அந்த தெய்வீக இசையை கேட்டாவது
    இன்புற்று இறைவனிடம் பக்தி கொள்ள வேண்டும். //

    ;))))) கேட்டாலே இன்பம் தான். அது தான் இசையின் மஹிமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நன்றி . பின்னூட்டம் இட நீங்க ஒரு ஆளாவது இருக்கீங்களே என்றுதான் தினமும் ஒரு பதிவு போடுகிறேன்.

    ReplyDelete