Thursday, May 9, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(42)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(42)


மனதிற்கு உபதேசம் 














(கீர்த்தனை-கீதார்த்தமு-சங்கீதானந்தமு(304)-
ராகம்-ஸூரடி-(மேள-28)  -தாளம் -தே-சாதி


மனமே!

பகவத் கீதையும் பொருளையும்
 சங்கீதத்தின் ஆனந்தத்தையும்
உன்னிடமே இவ்விடத்தில் காண்பாயாக

சீதாநாயகனின் திருவடித் தாமரைகளைத்
தன்னுள்ளத்தில் கொண்டிருக்கும் அனுமனுக்கு
இவ்வுண்மை நன்கு தெரியும்.

திருமால் ,சிவன்,சூரியன்,காலம், கர்மம்,ஆகிய
ஐந்து சொருபங்களையும் ,
மதங்களின் ரகசியங்களையும் அறிந்த
வானர ஸ்ரேஷ்டனாகிய இவ்வனுமன்
இந்திரனால் வணங்கப்படுபவன்.
எப்போதும் சுகித்திருப்பவன்.

ஆனந்தம் நம்மிடமே உள்ளது என்று 
ஸ்வாமிகள் கூறுகிறார் இந்த கீர்த்தனையில். 

அதை உண்மையில் அறிந்துகொண்டு
எப்போதும் சுகித்திருப்பவன் ஹனுமான்
என்று ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

இராமபிரானின் அருளை பெற
ஹனுமானின் கருணையை
வேண்டி பெறுவோம்.

6 comments:

  1. //ஆனந்தம் நம்மிடமே உள்ளது என்று
    ஸ்வாமிகள் கூறுகிறார் இந்த கீர்த்தனையில்.

    அதை உண்மையில் அறிந்துகொண்டு
    எப்போதும் சுகித்திருப்பவன் ஹனுமான்
    என்று ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

    இராமபிரானின் அருளை பெற
    ஹனுமானின் கருணையை
    வேண்டி பெறுவோம்.//

    நல்லது.

    ஜெய் ஹனுமான் !

    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் !!

    ReplyDelete
    Replies
    1. நாவிற்கு ருசிக்க -வடைபருப்பு பானகம்,ஹனுமார் வடைமாலை
      ஆன்மாவிற்கு ருசிக்க ராம நாமம்
      enjoyboth

      Delete
  2. ஆனந்தம் நம்மிடமே உள்ளது

    1௦௦% உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சீதாநாயகனின் திருவடித் தாமரைகளைத்
    தன்னுள்ளத்தில் கொண்டிருக்கும் அனுமனுக்கு
    இவ்வுண்மை நன்கு தெரியும்.

    அனுமனின் கருணையைப்போற்றும்
    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி

      Delete