Friday, May 3, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(36)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(36)




















இராமனின் கிருபை 
எப்படி கிடைக்கும்?

(கீர்த்தனை-மநஸு- விஷய (264)-ராகம்-நாடகுரஞ்ஜி -(மேள.28)-தாளம் -ஆதி)

தியாகராஜன் வணங்கும் மூர்த்தியை  
தியானிக்காமல் மனத்தை ஐம்புலன்கள் என்னும் 
தூர்த்தரிடம் ஒப்படைத்து விட்டால் 
அந்த ராமனின் கிருபை கிடைக்குமா?

தன் கதவை பெயர்த்து அயல் வீட்டிற்களித்து  விட்டு 
ஒருவன் தன் வீட்டில் நுழையும் நாய்களை விரட்டியது 
போலாகுமல்லவா அது?

தவிட்டிற்க்காக தகாத காரியம் செய்ய துணிந்த 
ஒருத்தியின் வீட்டு சோற்றுப் பானையை குரங்கு 
கொண்டுபோனதை ஒக்குமல்லவா இந்த செய்கை?

மேலும் இது செவிடன் காதில் செய்த
உபதேசம் போலாகுமல்லவா?

இந்த கீர்த்தனையில் ஸ்வாமிகள்
நாம் நம்முடைய மனதை இராமபிரானிடம் ஒப்புவித்து  
கடைதேறும் வழியை நாடாமல் நம்மை ஏமாற்றி
பலவழிகளில் நமக்கு துன்பத்தை தரும் ஐம்புலன்கள் என்னும் அயோக்கியர்களிடம் ஒப்படைக்கலாமா என்று கேட்கிறார்

மேலும் அயோக்கியர்களுக்கு வீட்டின் கதவை 
திறந்து விட்டபிறகுவீட்டிற்குள் நுழைந்துகொண்டு 
நம்மை அதிகாரம் செய்யும் அவர்களை வெளியேற்றுவது 
அவ்வளவு சுலபமா என்றும் கேட்கிறார்?

அற்ப பொருளுக்காக ஆசைப்பட்டு இருப்பதை 
இழக்கும் மனிதர்களை பற்றியும் அவர் சாடுகிறார் 
இந்த கீர்த்தனையில்

எனவே நாம் எச்சரிக்கையுடன் இருப்போம்.
நம் மனதை இரமாபிரானின் 
திருவடிகளில் ஒப்படைத்து விடுவோம்.
அவன் காட்டும் வழி நடப்போம்.
நற்கதி பெறுவோம். 

1 comment:

  1. //எனவே நாம் எச்சரிக்கையுடன் இருப்போம். நம் மனதை இரமாபிரானின் திருவடிகளில் ஒப்படைத்து விடுவோம்.
    அவன் காட்டும் வழி நடப்போம். நற்கதி பெறுவோம்.//

    மிகவும் நல்ல சிந்தனைகள் + முடிவுகள். நன்றி.

    ReplyDelete