ஒளி வீசும் குமரா
Metal engraving-T.RPattabiraman
குன்றின் மேலிட்ட தீபம் போல்
ஒளி வீசும் குமரா
என் உள்ளத்தில் குவிந்துள்ள
அறியாமை என்னும் இருளை
அகற்றிட வாராய் முருகா (குன்றின்)
தூய்மையாம் வெண்ணிற பனி மலையாய்
நின்றருளும் சிவனின்
அருள் வடிவமாய் அவனியில்
தோன்றிய ஒளி பிழம்பே முருகா
அமரர்களின் கோரிக்கையை
ஏற்ற திருமுருகா
அல்லல் தரும் அசுரர்கள்
கூட்டத்தை மாய்த்திட்ட முருகா
என்றும் உன்னை மறவாது
வணங்கும் அடியவர்களை காக்கும்
தெய்வமே முருகா (குன்றின்)
அருணகிரியை தடுத்தாட்கொண்டு
அருள் செய்த முருகா
அறம் வளர்த்த தமிழாய்
விளங்கிடும் முருகா
கண்களுக்கு கவின் வடிவாய்
காட்சி தரும் முருகா
அன்போடு துதிப்பவரின் வாழ்வில்
துன்பங்களை காணாது செய்யும் முருகா
என்றென்றும் அழியாத பேரின்பம்
அளித்திடும் அருளாளனே முருகா (குன்றின்)
அறியாமையை நீக்க அருகுவோம் அழகனை.
ReplyDeleteஅழியாத பேரின்பம்
Deleteஅளித்திடும் அருளாளனே முருகா
அறம் வளர்த்த முருகா
ReplyDeleteஅடியவர்களை காக்கும்
தெய்வமே முருகா
இந்தப் பாடலைப் பாடிட,
ReplyDeleteஅனுமதி தருவீர்களா?
குமரனின் கானம் என்
காதுகளுக்கோர் நற் பானம்.
சுப்பு தாத்தா.
www.kandhanaithuthi.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com
நன்றி சூரி சிவா அவர்களே. காலை வணக்கம்.
ReplyDeleteஉங்களுக்காகவே பல இசை காணொளிகள் படைத்திருக்கிறேன்
நீங்கள் கண்டு கேட்டு இன்புற்று இவனை ஆசீர்வதிக்க வேண்டும்
அனுமதி எதற்கு ?
இவன் மூலம் வரும் படைப்புக்கள் எல்லாம் அனைவருக்கும்.
என் அப்பன் முருகனைப் பாட எவன் அனுமதியும் தேவையில்லை.
இன்று அதிகாலையில்தான் முருகன் இந்த பாடலை என்னை எழுதும்படி தூண்டினான்.
உடனே எழுந்தேன் .முதல் சொல்லை எடுத்துக்கொடுத்தான். பிறகு அவனே அதை மாலையாக்கி அவன் சூடிக்கொண்டான்.
நன்றாக பாடுங்கள் அவன் புகழை. ஆனந்தம் பெறுங்கள்.
ReplyDeletecomments of Vs Krishnan
3:33 PM (2 hours ago)
to me
Dear Sri Pattabhi,
You have provided a very great feast; a feast for our soul and heart. I am overwhelmed to hear the songs on Muruga. Thank you very much
Krishnan
ALL PRAISE GOES TO LORD MURUGA WHO ALONE MAKE US RAISE FROM IGNORANCE TO BLISS
Delete