Friday, September 18, 2015

எம்மை படைத்த இறைவா. உலகில் துன்பப்படும் இந்த அப்பாவி மக்களுக்கு கருணை காட்டு.

எம்மை படைத்த இறைவா. உலகில் துன்பப்படும் இந்த அப்பாவி மக்களுக்கு கருணை காட்டு.


எம்மை படைத்த இறைவா. 
உலகில் துன்பப்படும் 
இந்த அப்பாவி மக்களுக்கு 
கருணை காட்டு.


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

ஆமாம் .ஒத்துக்கொள்கிறேன்.

அதற்கு அவன் இதயத்தில்
மனிதம் இருக்கவேண்டும்.

ஆனால் உண்மை நிலை என்ன? 

இந்த  உலகத்தில் உள்ள மனிதர்கள் அவ்வாறு
இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் 
சகிப்பு தன்மை உடையவர்கள் ஏற்றுக் கொண்ட வழி. 

ஆனால் உலகில் இன்று நடப்பது என்ன ?

பிறந்த நாட்டில் உண்ண  உணவில்லை,

தாகம் தீர்த்துக்கொள்ள நீரில்லை

இருக்க இடமில்லை.

பிழைக்க வழியில்லை.

மாறாக உள்ளத்தில் உள்ளதை எடுத்து கூற உரிமையில்லை

பயமின்றி வாழ உகந்த சூழ்நிலையில்லை.

எதற்கும் பாதுகாப்பில்லை.

எவருக்கும் பாதுகாப்பில்லை

குழந்தைகளும் பெண்களும்  மத வெறியர்களிடமும், காம வெறியர்களிடமும் சிக்கி நாசமாகி போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உலகில் பல வல்லரசு  பல லட்சம் கோடிகளை  செலவு செய்து பல கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களில் நீர் இருக்கிறதா மனிதர்கள் வாழமுடியுமா என்று ஆராய்ச்சி செய்துகொடிருக்கின்றன

இந்த பச்சை துரோகத்தை என்னவென்று சொல்வது ?

நாம் வாழும் உலகத்தில் மொத்த மக்கட் தொகையில் 80 விழுக்காடுகளுக்கு மேல் பசி பட்டிநினியால் செத்துகொண்டிருக்க ,அவர்களின் வாழ்வை மேம்படுத்த யாருக்கும் நாட்டமில்லை.

மாறாக இந்த உலகில் அனேக நாடுகளின் ஆட்சி செய்யும் மனித நேயமற்ற வெறியர்களால்  இனவெறியும், ஜாதி வெறியும், ஆதிக்க வெறியும் கொண்ட மிருகங்களில் சிக்கி மக்கள் சகட்டு மேனிக்கு கொல்லப்பட்டும், இருக்கின்ற இடத்தை விட்டு துரத்தபட்டும் சொல்லொணா  துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். 

சக மனிதர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை  இரங்காரடி என்றான் பாரதி 

அவன் சொன்னது சரியாகத்தான் போய்விட்டது. இன்று.

ஏதாவது மதத்தை சார்ந்து வாழ்ந்தாலும்  எதற்கும் உத்திரவாதமில்லை. 

மற்ற மதத்தினர் கையில் சிக்கி சித்ர வதைப்பட்டு சாகத்தான் வேண்டும் அல்லது அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டுவேறு  எந்த நாட்டிற்காவது உயிர் பிழைக்க ஓடவேண்டும்.

வழியிலேயே மாண்டு போகும் கூட்டம் கோடி கோடி. 

பிழைத்தவர்களும் வேறு நாட்டில் தஞ்சம் புக முடியாமல் புற்றீசல்கள்போல் மாண்டுபோவதும், பிழைத்தவர்கள் பசி, பட்டினியாய் உயிரோடு பிணங்களாய் அலைவதும்.நெஞ்சை  உருக்குகின்றன. 

பணக்கார நாடுகளோ இந்த கொடுமைகளை செய்யும் மனித மிருகங்களுக்கு தங்கள் சுய நலத்திற்க்காக ஆயுதங்களும் உதவிகளையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அளித்து இந்த உலகத்தை ரண களறியாக்கி கொண்டு வருகின்றனர். 

தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம் என்றான் பாரதி. 

இன்று பல கோடி மக்களுக்கு உணவில்லை, இருக்க இடமில்லை, நாடில்லை, உரிமை இல்லை.  பாதுகாப்பு இல்லை. 

நம் நாட்டில் எல்லாவிதமான போகங்களையும் உரிமைகளையும் சுகங்களையும் அனுபவித்துகொண்டிருக்கும், ஜன்மங்களுக்கும், அரசியல்வாதிகளும், மத வெறியர்களுக்கும், சுரண்டல் பேர்வழிகளுக்கும் தம்மை சுற்றியுள்ள நாடுகளில் நிலவும் இந்த கொடுமைகளை உணர நேர மில்லை. உணர்ந்தால் நம் நாட்டில் இத்தனை பிரிவினைகள் கொடுமைகள் நிகழ அனுமதிப்பார்களா?

நெஞ்சில் ஈரம்  உள்ள மனிதர்களே !
ஒவ்வொருவரும் ஒரு கண  நேரமாவது சிந்திக்கவேண்டும். எம்மை படைத்த இறைவா. உலகில் துன்பப்படும் இந்த அப்பாவி மக்களுக்கு கருணை காட்டு. அவர்கள் துன்பம் நீங்க. என்று முறையிடுங்கள். 

மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது. சுயநல பிடித்த அவர்களால் சக உயிரினங்களுக்கு  துன்பம் இழைக்க மட்டுமே தெரியும். 


No comments:

Post a Comment