எல்லாம் முருகனே
எல்லாம் முருகனே
எனக்கு எல்லாம் முருகனே (எல்லாம் )
தொல்லை மிகு இவ்வுலகில்
எல்லையில்லா இன்பம்
தருவது அவன் திரு நாமமே (எல்லாம் )
அரோகரா என்றாலும்
ஆறுமுகா என்றாலும்
அன்போடு அழைக்கும் பக்தருக்கு
அழியா பதம் அருள்பவன்
கந்தா என்றாலும்
கார்த்திகேயா என்றாலும்
முத்துக்குமரா என்றாலும்
நம் மன அகந்தையை நீக்கி
அவன் அடியவனாக்கி
ஆனந்த வாழ்வை அருள்பவன் (எல்லாம் )
குன்றின் மீது நின்றருளும்
தெய்வம் அவன்
நம் உள்ளத்தில் குடி கொண்டு நம்மை
துன்புறுத்தும் மன மாசுகளை போக்குபவன்
அன்போடு வணங்கும் அடியவர்களுக்கு
என்றென்றும் துணையாய் வருபவன் (எல்லாம் முருகனே)
அருமை ஐயா...
ReplyDelete