Friday, September 4, 2015

நான் உன்னுள்ளே இருக்கிறேன் !

நான் உன்னுள்ளே இருக்கிறேன் !


                                                                        ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்


எங்கும் நிறைந்த இறைவன்
அறிவே வடிவானவன்

அவனை அறிந்துகொள் என்பதை
நமக்கு உணர்த்தவே அவன்
"ஹரி" என்று பெயர் கொண்டான்

மனதின் எழும் எண்ணங்கள்
போடும் இரைச்சல்கள் அவன்
நம்மை அழைக்கும் குரலை
கேட்கவிடாமல் செய்துவிட்டது

மனதில் குவிந்துள்ள எண்ணங்களை
எட்டி வெளியே தள்ளிவிட்டால்
பெட்டிப் பாம்பாய் மனம் அடங்கிவிடும்

மூலாதாரத்தில் அடங்கியுள்ள
குண்டலினி பாம்பு தன் குருநாதனை
அடைய தானே மேல்நோக்கி
தன் பயணத்தை தொடங்கும்


Image result for dakshinamurthy

அகத்தில் இருக்கும் அவனை
அறிந்துகொள்ளவே அந்த
ஆதி சங்கரன் மௌன மொழியை
விழி மூடி அவனையே தியானித்திருந்த
நால்வருக்கு மொழியாமல் மொழிந்தான்

ஆனால் எப்போதும் விழி திறந்து
உலக மோகத்திலே மூழ்கி
அறியாமை சேற்றில் கிடந்த
நம்மைப் போன்ற பேதைகளுக்காக
மறைகளிலே மறைந்து கிடந்த
உண்மைகளை கண்ணன்
கீதையை அளித்து மறைந்தான்


Image result for geethopadesam

இந்நாளில் அவன் அறிவுரைகளை
செவிமடுப்போம். செம்மையான
வாழ்வு  வாழ்ந்து சீலத்தை அடைவோம். 

images courtesy-google images

5 comments: