Thursday, September 17, 2015

எனக்கென்ன மனக் கவலை?

எனக்கென்ன மனக் கவலை?

அரவணை மீது பள்ளி கொண்டு
அனைத்துயிர்க்குள்ளும் ஆன்ம ஒளியாய்
இருந்துகொண்டு காத்தருளும் அரி துயில்
கொண்ட  அரங்கனும்



நினைத்தாலே தாபம் நீக்கி
இன்பம் தந்து இன்னலை போக்கும்
மயில் மீது அமர்ந்து உலகெல்லாம்
வலம்  வரும் முருகனும்





நந்தி மீதமர்ந்து ஆலமருந்தி
அண்டத்துயிர்களை காத்தருளி
களி  நடனம் புரியும்  ஈசனும்




மூஞ்சுறு வாகனத்தின்மேலேறி
மூலை  முடுக்கெல்லாம் சென்றமர்ந்து
அகிலத்து  உயிர்களை காக்கும் கஜமுகனும்





சிம்ஹ வாகனத்திலேறி நின்று
அல்லல் தரும் அசுரர்கள் கூட்டத்தை அழித்து
உலகில்  அமைதியை
நிலை நாட்டிய அம்பிகையும்



நினைத்த போதே நெஞ்சகத்தில்
பல்வேறு கோலங்களில்
காட்சி தந்தருளும்  வேங்கடவனும்


கருணையே உருவெடுத்த  காமாஷியும்
எளிமையே தன் குணமாய் கொண்டு
நம்மையெல்லாம் காக்கும் கண்ணனும்

நம் போன்ற  நரர்களுக்காக  நரனாய் பிறந்து
நாடு முழுவதும் தன் திருப்பாதங்களால்
கால் கடுக்க நடந்து தீயோரை அழித்து
நல்லோரை காத்தருளிய என் அப்பன்
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும்




என் அகத்தில் எந்நேரமும் 
குடிகொண்டிருக்க 
எனக்கென்ன மனக் கவலை?






No comments:

Post a Comment