Thursday, September 24, 2015

ஒப்பில்லாத பெருமாள் !

ஒப்பில்லாத பெருமாள் !


Metal foil- engraving- byT.R.Pattabiraman 

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத 
பெருமான் ஒப்பிலியப்ப பெருமான் 

தான் பாற்கடலிலே சயனம் கொண்டிருந்தும் 
உவர் நீரினால் சூழப்பட்ட இவ்வுலகில் 
வாழும் மக்களின் நலனை என்றும் 
மறவாத கருணை உள்ளம் கொண்ட பெருமான் 

உப்பில்லாமல் வீணாகிவிடும் உணவு பண்டம் 
அந்த உப்பே நிலத்தில் வாழும் உயிர்களுக்கு 
அளவை மிஞ்சிடின் அழிவைத் தரும் என்று 
அன்றே உணர்த்தியவன் அமிர்த கலசத்தை 
கையில் ஏந்திய தன்வந்திரி பகவான் 

உண்ணும் உணவனைத்திலும் உலகை ஆளும் 
உத்தமன் உலோக  உப்புகளாக கலந்து நிறைந்து 
நமக்கு நல்லதோர் சக்தியை அளிக்கும்போது 
கூடுதலாக உப்பை உணவில் சேர்த்தல் 
உடலுக்கு நலம் தருமோ? 

நாம் உண்ணும் உணவில் 
கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்வது
நமக்கு உடல்நலத்திற்கு உகந்தது அல்ல 

உப்பு அதிக அளவில் சேர்ந்தால் 
அதிக தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதால் 
உடல் எடை கூடுவதுடன் எண்ணற்ற பிணிகள் 
நம்மை வாட்டுகின்றன என்பதை அன்றே 
உணர்த்தவே பரந்தாமன் உப்பில்லாமல்
உணவு உண்ண  வேண்டும் என்று 
உப்பிலியாப்பனாக அவதாரம் 
செய்தானோ என்னவோ!

பிணிகள் வருமுன் காத்துக்கொள்வதே 
அறிவுடையோர் செயல் 
வந்தபின் வாழ்நாள் முழுவதும் 
துன்பப்படுவதும் வருத்தப்படுவதும் 
பிதற்றி திரிவதும் 
மூடர்களின் வாடிக்கையன்றோ! 


உப்பிலாது உணவு உண்டு உயர்ந்த 
சிந்தனைகளை உள்ளத்தில் தாங்கி 
உலகைக் காக்கும் உத்தமனை 
சிந்தித்து  வாழ்வதே சீரியதோர் 
வாழ்க்கை என்று உணர்ந்தவர்கள் 
இன்பமாக வாழ்வார் என்பது சத்தியம்  


3 comments:

  1. நல்ல கருத்து. ஆனால் தண்ணீர் அருந்துவதால் உடல் எடை ஏறுமா என்ன?

    எங்கள் திருமணம் நடந்த இடம் உப்பிலியப்பன் கோவில். எங்களுக்கு இரண்டு(ம்) மகன்கள். இருவரும் திருவோண நட்சத்திரம்! ரேர் கோயின்ஸிடன்ஸ்!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா!
      உப்பிலியப்பனின் அருள் உங்களுக்கு உங்கள் மகன் வடிவில் கிடைத்துவிட்டது.
      நீண்ட ஆயுள்,நல்ல உடல் நலம், ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.

      உடலில் உப்பு அதிகம் சேர சேர தாகம் எடுக்கும்.
      அதனால் அதிக தண்ணீர் பருக நேரிடும்.
      வெளியேற்றும் சுரப்பிகள் உள்ளுறுப்புகள்
      ஓய்வின்றி அதிகம் உழைக்க நேரிடும்.
      அதனால் அவைகளில் சக்தி இழந்து
      பல நோய்களுக்கு இடம் கொடுக்க நேரிடும்.

      உழைக்காதவ்ர்களின் உடலில் அதிக நீர் தங்குவதால்
      பல நோய்களுக்கும், உடல் பருமனுக்கும் ஆளாகுவதுடன்
      உடல் எடையும் கூடி பல நோய்களை வரவழைக்கும் என்பது உண்மை

      Delete