எத்தனை கோடி இன்பங்கள்
எத்தனை கோடி இன்பங்கள்
படைத்தாயடா இறைவா
இவ்வுலக மக்கள்
அனுபவித்து இன்புறவே (எத்தனை)
அத்தனை இன்பங்களையும்
ஒருசேர அனுபவிக்க
துடிக்குதடா என் அற்ப மனம்
நான் இவ்வுலகில் வாழும்
சொற்ப ஆயுளுக்குள்ளே (எத்தனை)
ஓரிரு இன்பங்கள் அனுபவிக்கவே
ஓராயிரம் நேரம் அலைகின்றோம்
அடைவதற்குள் நம் குறுக்கே
வந்து நிற்குது
ஆயிரமாயிரம் தடைகளடா
அத்தனையும் கடந்து அனுபவிக்க
தொடங்கும் இன்பம் நினைவில்
இருப்பதோ கண் மூடி
கண் திறக்கும் நேரமடா (எத்தனை)
அனைத்து இன்பங்களும்
காணும் வடிவாய் நீ அமைந்திருக்க
எண்ணி மகிழும் உணர்வாய்
அதனுள்ளேதானிருக்க
அதை விடுத்து பேயாய்
ஓயாதுழலும் என் மனமே
அவனை அன்புடனே
நினைத்து அவனோடு கலப்பதே
உண்மையான ஆனந்தம் என்பதை
அறிந்தோர் கூற கேட்டும் அமைதியின்றி
ஆசைகளின் பின்னால் அலைந்து
திரிந்து அல்லல்படுவதேனோ?
எத்தனை கோடி இன்பங்கள்
படைத்தாயடா இறைவா
இவ்வுலக மக்கள்
அனுபவித்து இன்புறவே (எத்தனை)
அத்தனை இன்பங்களையும்
ஒருசேர அனுபவிக்க
துடிக்குதடா என் அற்ப மனம்
நான் இவ்வுலகில் வாழும்
சொற்ப ஆயுளுக்குள்ளே (எத்தனை)
ஓரிரு இன்பங்கள் அனுபவிக்கவே
ஓராயிரம் நேரம் அலைகின்றோம்
அடைவதற்குள் நம் குறுக்கே
வந்து நிற்குது
ஆயிரமாயிரம் தடைகளடா
அத்தனையும் கடந்து அனுபவிக்க
தொடங்கும் இன்பம் நினைவில்
இருப்பதோ கண் மூடி
கண் திறக்கும் நேரமடா (எத்தனை)
அனைத்து இன்பங்களும்
காணும் வடிவாய் நீ அமைந்திருக்க
எண்ணி மகிழும் உணர்வாய்
அதனுள்ளேதானிருக்க
அதை விடுத்து பேயாய்
ஓயாதுழலும் என் மனமே
அவனை அன்புடனே
நினைத்து அவனோடு கலப்பதே
உண்மையான ஆனந்தம் என்பதை
அறிந்தோர் கூற கேட்டும் அமைதியின்றி
ஆசைகளின் பின்னால் அலைந்து
திரிந்து அல்லல்படுவதேனோ?
எல்லா இன்பங்களையும் விடாமல் அனுபவித்துக் கொண்டே வந்தால் எல்லாம் அலுத்துப் போகும் ஒரு இறுதி நாளில் எது பெரும் பேரின்பம் என்பதை உணர்வோம்!
ReplyDeleteகடுகத்தனை இன்பம் அடைய மலையத்தனை
Deleteதுன்பம் அனுபவிக்க வேண்டும் .தயாரா?
ஆசைகள் என்றும் தீராது. அதனால் பிறவிகளும் தீராது.
பிறவியினால் அடையும், அடைந்துகொண்டிருக்கும் துன்பங்களுக்கும்
முடிவில்லை. அதனால் இப்போதே முடிவெடுங்கள். ஆசைகளில்லாது இரைச்சல்கள் என்னும் ஓசைகள் இல்லாது அமைதியான ஆனந்த நிலையை அடைய முயற்சி செய்யுங்கள்.
This comment has been removed by the author.
ReplyDelete